செய்திகள் :

கடைசி நிமிடம் வரை திக் திக் : இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது அர்ஜென்டினா !

post image

அர்ஜென்டினா மற்றும் இங்கிலாந்து க்கு இடையேயான கால்பந்து போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி 2-1 என்ற கோல் கணக்கில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது அர்ஜென்டினா.

அட்லான கால்பந்து மைதானத்தில் நடந்த இப்போட்டியில், இங்கிலாந்து வெற்றியின் பாதையை நோக்கி களமிறங்கியது. ஆனால் அவர்களின் நோக்கத்தை அர்ஜெண்டினா தவிடு பொடியாக்கியது.

ஆட்டத்தின் முதல் பாதியில் எந்த கோல்களும் இல்லாத நிலையில், இரு அணிகளும் இரண்டாம் பாதியில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தினர்.

இங்கிலாந்து அணியின் கார்டன், ஆட்டத்தின் சமநிலையை உடைத்தார். 55-வது நிமிடத்தில் மோர்கன் ரோஜர்ஸ் மிகத் துல்லியமாக வழங்கிய கிராஸ் பந்தை, கார்டன் கோலாக மாற்றியதன் மூலம் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

85 ஆவது நிமிடம் வரை தோல்வியின் பிடியில் இருந்தது அர்ஜென்டினா,தனது அசாத்திய ஆட்டத்தின் மூலம் கோலுக்கு வழிவகுத்தார் லியோனல் மெஸ்ஸி. அதை லாங் ஷாட் மூலம் கோலாக மாற்றினார் என்சோ பெர்னாண்டஸ் (1-1).

ஆட்டம் சமநிலையில் இருந்தபோது, இரு அணிகளும் தீவிரமாக பந்த கோலாக்கும் முயற்சியில் இருந்தார்கள். பின் அடுத்த ஏழு நிமிடங்களிலேயே மெஸ்ஸி மீண்டும் ஒரு கோலுக்கு வழிவகுத்ததன் மூலம் அதை மார்டினெஸ் அதை தலையால் முட்டி கோலாக்கினார்(2-1). இந்த கோலே அர்ஜென்டினாவின் வெற்றியை உறுதி செய்தது.

இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா இன்னும் அதிக கோல்களை அடித்திருக்க முடியும். அலெக்சிஸ் மெக் அலிஸ்டரின் இரண்டு கோல் முயற்சிகளும் கோல் கம்பத்தில் பட்டு அவருக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது. இங்கிலாந்தின் கோல் கீப்பரான ஜோர்டான் பிக்ஃபோர்டு சிறப்பாகக் செயல்பட்டு

சில கோல்களை தடுத்தார். இங்கிலாந்துக்கு அது கொஞ்சம் ஆறுதல்.

இந்த உலகக்கோப்பை தொடரில் நடந்த 11 ஆட்டங்களிலும் மெஸ்ஸி ஒரு கோல் மற்றும் கோலுக்கான வழிவகை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதிப்போட்டியில் இளம் புயலை எதிர்கொள்கிறார் லியோனல் மெஸ்ஸி. வெல்லப்போவது ஸ்பெயினின் நிதானமா ? இல்லை

அர்ஜென்டினாவின் திட்டமிட்டு குழப்பும் தந்திரமா ?.

எம்பாப்பேவால் முடியவில்லை! டீம் வொர்க்கால் பிரான்ஸை வீழ்த்திய ஸ்பெயின் வென்றது எப்படி?

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டியில், கிலியன் எம்பாப்பே தலைமையிலான பலம் வாய்ந்த பிரான்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் எளிதாக வீழ்த்தி, ஸ்பெயின் அணி இறுதிப்போட்டிக்கு கம்பீரமாக முன்னேறி... மேலும் பார்க்க

கால்பந்தின் நிகழ்காலம் எம்பாப்பே vs எதிர்காலம் யமால் - அரையிறுதியில் அனல் பறக்கும் யுத்தம்!|Preview

2026 FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. டெக்சாஸின் ஆர்லிங்டனில் உள்ள பிரம்மாண்டமான AT&T ஸ்டேடியத்தில் நடைபெறும் அரையிறுதிப் போட்டியில், உலகின் முன்னணி அணிகளான பிரான்ஸு... மேலும் பார்க்க

மெஸ்ஸியுடன் கோல்கள் சமம், ஆனால் முதலிடத்தில் எம்பாப்பே! கோல்டன் பூட் போட்டியை மாற்றுவது எது?

2026 ஃபிஃபா உலகக் கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கோல்டன் பூட் விருதுக்கான போட்டி நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு உச்சக்கட்ட பரபரப்பில் இருக்கிறது. பிரான்ஸ் கேப்டன் கிலியன் எம்பாப்... மேலும் பார்க்க

தவறவிட்ட பெனால்டி, படைத்த புதிய வரலாறு! 30-க்குள் 20 கோல்கள் அடித்த முதல் வீரர் எம்பாப்பே

சாதனை மேல் சாதனை. பிரான்ஸ் கேப்டன் கிலியன் எம்பாப்பேவின் பெயர் மீண்டும் ஒருமுறை உலகக் கால்பந்து வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளது. 2026 FIFA உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில், மொராக்கோ அணிக்கு எதிராக இர... மேலும் பார்க்க

FIFA: பழிதீர்க்குமா மொராக்கோ? இங்கிலாந்தை வீழ்த்துவாரா ஹாலண்ட்? - அனல் அடிக்கும் காலிறுதி ஆட்டங்கள்!

கடைசி நிமிட கோல்கள், அதிர்ச்சித் தோல்விகள், நம்பமுடியாத கம்பேக்குகள், ஜாம்பவான்களின் கண்ணீருடன் கூடிய பிரியாவிடை என அத்தனை உணர்ச்சிகளையும் ஒருங்கே கொட்டி, 2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் நாக் அவுட் சுற்ற... மேலும் பார்க்க

ARG vs EGY : கொண்டாட்டத்தில் மெஸ்ஸி & கோ; காட்டமான எகிப்து கோச்! - பரபரப்பான நொடிகளின் தொகுப்பு!

அர்ஜென்டினா vs எகிப்து: பரபரப்பான நொடிகளின் தொகுப்பு.!அர்ஜென்டினா vs எகிப்து: பரபரப்பான நொடிகளின் தொகுப்பு.!அர்ஜென்டினா vs எகிப்து: கொண்டாட்டத்தில் மெஸ்ஸி & கோஅர்ஜென்டினா vs எகிப்து: கொண்டாட்டத்தி... மேலும் பார்க்க