செய்திகள் :

’கமல்ஹாசன் பாணியில் கோவையைக் குறிவைக்கிறாரா தனுஷ்?’ - கோவையில் ரசிகர் மன்றத்தை வலுப்படுத்துவது என்ன?

post image

பிரபல திரைப்பட நடிகர் தனுஷ், தனது ரசிகர் மன்றங்களை சட்டமன்றத் தொகுதி வாரியாக வலுப்படுத்தவும், உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

முதற்கட்டமாக கோவையில் தனுஷ் ரசிகர் மன்றத்தின் உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக அனைத்திந்திய தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றத்தின் தலைவர் சுப்பிரமணிய சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை மாவட்டத்தில் சட்டமன்றத் தொகுதி வாரியாக நற்பணி இயக்கங்கள் தொடங்கி, உறுப்பினர்கள் சேர்க்கைகளை அதிகரிக்க வேண்டும். தலைவர் வழியில் ஒன்றுபட்டு அனைவரும் செயல்படுவோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தனுஷ் அரசியலில் களம் இறங்குவதற்கான முன்னோட்டமாகப் பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் கோவையைக் குறிவைத்து தனுஷ் தனது அரசியல் பயணத்தைத் துவங்கலாம் எனக் கூறப்படுகிறது.

இது குறித்து தனுஷ் ரசிகர்களிடம் பேசியபோது, “தற்போது தமிழ்நாடு முழுக்க 55 மாவட்டங்களில் தலைமை மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், ரத்த தானம் செய்தல், அன்னதானம் செய்தல், கல்வி மற்றும் மருத்துவ உதவித்தொகை வழங்குதல் உள்ளிட்டவை செய்யப்பட்டு வருகின்றன.

தனுஷ்
தனுஷ்

’கோவையில் ரசிகர்கள் அதிகம்’

மற்ற மாவட்டங்களை விட கோவையில் தனுஷுக்கு ரசிகர்கள் அதிகளவில் உள்ளனர். மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட ரசிகர்களே உள்ளனர். சமீபவத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக தனுஷ் கோவை வந்தபோது, அவரைக் காண 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகை புரிந்தனர். ஏற்கனவே பலமாக இருக்கும் பகுதியை மேலும் வலுப்படுத்தும் வகையில் உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

59 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு நடிகர் விஜய் முடிவுரை எழுதிவிட்டார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்திருந்தால், இது இதற்கு முன்னரே சாத்தியமாகி இருக்கும். இன்று தி.மு.க, அ.தி.மு.க-வில் மக்களை ஈர்க்கும் ஆளுமைமிக்க தலைவர்கள் இல்லை.

பணம் கொடுத்துதான் மக்களை கட்சி நிகழ்ச்சிகளுக்கே அழைத்து வருகிறார்கள். தற்போதைய சூழலில் முதலமைச்சர் விஜய்க்கும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும்தான் அரசியல் போட்டி என்ற சூழல் உருவாகியுள்ளது. இதற்கு மாற்றாக வேறு யாரும் இல்லை. அந்த வெற்றிடத்தை தனுஷ் நிரப்புவார்” என நம்பிக்கை தெரிவித்தனர்.

இரா.முருகவேள்
இரா.முருகவேள்

கமல்ஹாசன் பாணியில் தனுஷ்?

நடிகர் கமல்ஹாசன், அண்ணாமலை ஆகியோரைப் போல கோவையை மையப்படுத்தி தனுஷ் அரசியல் செய்ய உள்ளரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகரும், எழுத்தாளருமான இரா.முருகவேள், “கோவையை உள்ளடக்கிய கொங்கு பகுதியில் வலுவாக இருந்த அ.தி.மு.க, தற்போது வலுவிழந்துவிட்டது. அந்த இடத்தை தி.மு.க, த.வெ.க-வால் பிடிக்க முடியவில்லை.

அண்ணாமலை வெளியேற்றத்தால் பா.ஜ.கவும் வலுவிழந்து உள்ளது. இதனால் ஏற்பட்ட வெற்றிடத்தைப் பிடிக்க முயல்கிறார்கள். சென்னையில் நிறைய சிறிய, சிறிய கட்சிகள் கூட வலுவாக உள்ளன. அங்கு த.வெ.க வலுவாகக் காலூன்றிவிட்டது. ஆனால் சென்னைக்கு வெளியே அதிக தொழில்கள், பணம், அதிகாரம், அரசியல் செல்வாக்கு உள்ள பகுதி கோவைதான். அதுமட்டுமின்றி அரசியல் கட்சிகளிடம் பெரிய போட்டியும் இருக்காது என்பதால், புதிய கட்சிகள் கோவையைக் குறிவைக்கின்றன” என்றார்.

இது குறித்து மாவட்டத் தலைவர் சங்கரிடம் விளக்கம் கேட்டோம். “ஏற்கனவே 20 ஆண்டுகளாக ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன. புதிய மன்றங்கள் பதிவுகளுக்காகவும், புதிய உறுப்பினர்களைச் சேர்க்கவும் செய்கிறோம். வேறு ஒன்றும் இல்லை. இது அரசியலுக்கான முன்னோட்டம் இல்லை. தலைமை எடுக்கும் முடிவிற்குக் கட்டுப்பட்டு நடப்போம்” என்றார்.

``வேளாண் நிதிநிலை அறிக்கையில் எதிர்பார்த்த நிறைய விஷயங்கள் இல்லை"- சௌமியா அன்புமணி

சட்டமன்றத்தில் பாமக உறுப்பினர் சௌமியா அன்புமணி பேசுகின்ற விஷயங்களும் அதை வெளிப்படுத்துகின்ற முறையும், அனைவராலும் கவனிக்கப்பட்டு பாராட்டப்பட்டு வருகிறது.சௌமியா அன்புமணிசமீபத்தில் மேகதாது அணை விவகாரம் ச... மேலும் பார்க்க

"ஈரானின் இழப்பீடு யோசனை நல்லா இருக்கு; அதே இழப்பீட்டை அமெரிக்காவிற்கு ஈரான் தரணும்" - ட்ரம்ப்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கப்பல்களை ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியே அனுமதிக்க ஈரான், 'அந்த இரு நாடுகளும் இழப்பீடு கொடுக்க வேண்டும்' என்கிற நிபந்தனையை பிளான் செய்து வருகிறது. இதற்கு எதிர்வினையாற்றும் வகையில... மேலும் பார்க்க

"இடம் மாறியதால் இவ்வளவு துதிபாட வேண்டிய அவசியமில்லை" - ஓபிஎஸ் vs செங்கோட்டையன் காரசார விவாதம்

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 2026-27ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 3-வது நாளாக இன்றும் தொடர்கிறது.இந்நிலையில்... மேலும் பார்க்க

பெரியார் புலிகள் காப்பகத்தில் ட்ரோன்; தமிழகக் குழுவால் சர்ச்சை! - கேரள வனத்துறை எடுத்த முடிவு

விவசாயத் தேவைகளுக்காக முல்லைப் பெரியார் அணையின் மதகுகளைத் தமிழ்நாடு அரசு கடந்த 8-ம் தேதி திறந்தது. இதனையொட்டி, தமிழக மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் முன்னிலையில் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்ட... மேலும் பார்க்க

பஞ்சாப்: ஹர்பஜன் சிங் பகிர்ந்த `ஜோம்பி போதை இளைஞர்கள்' வீடியோ; ஆம் ஆத்மி அரசு பதிலடி!

பா.ஜ.க எம்.பி ஹர்பஜன் சிங் தன் எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அந்த விடியோவில் டர்பன் அணிந்த சிலர் சாலையோரத்தில் நிலைகுலைந்து, நிற்க முடியாமல் தடுமாறுகின்றனர். அந்த வீடியோவைப் பகிர்... மேலும் பார்க்க