செய்திகள் :

கமேனி கொலை: ஈரான் இடைக்கால மதத்தலைவராக மூத்த மதகுரு அயதுல்லா அராபி நியமனம்

post image

ஈரானில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகள் நேற்று நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஈரானில் புதிய மதத் தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்தது. ஈரான் ராணுவம் தொடர்ந்து இன்றும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆதரவு அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல், ஈரான் தலைநகர் டெக்ரான் மீது இன்று தாக்குதல் நடத்தியது.

இத்தாக்குதல் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கையில் தலைமை மதகுருவான கமேனி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் 111வது பிரிவின் கீழ் அவசர தற்காலிகத் தலைமை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தலைமையில் 3 பேர் இடம் பெற்றுள்ளனர்.

கப்பல் மீது தாக்குதல்
கப்பல் மீது தாக்குதல்

இத்தலைமைக்கு மூத்த மதகுரு அயதுல்லா அலிரேசா அராபி தலைவராகச் செயல்படுவார். நிரந்தரத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை இவர் தலைவராக இருப்பார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அவர் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் மற்றும் தலைமை நீதிபதி கோலாம்-ஹோசைன் மொஹ்செனி-எஜே ஆகியோருடன் சேர்ந்து கூட்டாக நாட்டை வழிநடத்துவார்.

1959 இல் பிறந்த 67 வயதான அயதுல்லா அலிரேசா அராபி ஈரானின் மதகுருக்களில் மூத்த நபராவார். இவர் இடைக்கால தலைமை ஏற்பதற்கு முன்பு, ஒரே நேரத்தில் பல முக்கியப் பதவிகளை வகித்தார். அவர் ஈரானின் தேசிய இஸ்லாமிய செமினரிகளின் நெட்வொர்க்கிற்குத் தலைமை தாங்குகிறார். கார்டியன் கவுன்சிலின் மதகுரு உறுப்பினராகப் பணியாற்றுகிறார் மற்றும் நிபுணர்களின் சபையில் அமர்ந்துள்ளார்.

இது தவிர ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவலர் படையின் (IRGC) தளபதி ஜெனரல் முகமது பக்பூர் சனிக்கிழமை தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்து புதிய தளபதி ஜெனரலாக அஹ்மத் வஹிதி நியமிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

Modi: "திமுக அரசின் நியாயமற்ற தன்மையினாலேயே இது நடந்திருக்கிறது!" - மதுரையில் மோடி!

மதுரையில் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று மதுரைக்கு வருகைத் தந்துள்ளார். மதுரைக்கு வந்தவர் திருப்பரங்குன்றம... மேலும் பார்க்க

Ali Khamenei: "பழிவாங்குவதற்கு ஈரானுக்குக் கடமையும் உரிமையும் உள்ளன" - ஈரான் அதிபர் பெஷேஷ்கியான்

மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான தாக்குதலில் ஈரானின் முக்கியத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.நேற்று நடைபெற்ற தாக்குதலில் அவர் கொல்லப்பட்டத... மேலும் பார்க்க

அறிவாலயம் வராத ம.நீ.ம - தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி?

தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கும் நிலையில் மக்கள் நீதி மய்யத்தினர் அறிவாலயம் பக்கமே வராதாதது அக்கட்சியினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தி.மு.க - ம.நீ.... மேலும் பார்க்க

தொகுதி் பங்கீடு: பேச்சுவார்த்தைக்கு அழைத்த அறிவாலயம்... விசிக-வின் கணக்கு என்ன?

தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, தொடங்கியிருக்கும் நிலையில் மார்ச் 2-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அழைப்பு விடுத்திருக்கிறது அறிவாலயம். இச்சூழலில் வி.சி.க-வின் எதிர்பார்ப்புக... மேலும் பார்க்க

'சட்டமன்றத் தேர்தலை தள்ளிப்போடுங்கள்.!' - தேர்தல் ஆணையத்துக்கு சீமான் கோரிக்கை!

தி.மு.க, அ.தி.மு.க-வுக்கு முன்பாக சட்டமன்றத் தேர்தலுக்காக வேட்பாளர்களை அறிவித்திருக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீ்மான் திடீரென தேர்தலை தள்ளிப்போடச் சொல்லியிருப்பது பரபரப்பை கிளப... மேலும் பார்க்க

`எஸ்.ஐ.ஆர் மூலம் குடியுரிமை பறிப்பு' - அகில இந்திய மக்கள் இயக்க மாநாட்டில் பரக்கல பிரபாகர் ஆவேசம்!

சென்னை தி.நகரிலுள்ள சர் பிடி தியாகராயர் அரங்கில் அகில இந்திய மக்கள் இயக்கம் சார்பில் 'வஞ்சிக்கப்படும் தென்னிந்தியா, பழிவாங்கப்படும் தமிழ்நாடு' என்ற தலைப்பில் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி கருத்தரங்கம் நடை... மேலும் பார்க்க