செய்திகள் :

கருப்பு: "அரசியல் விஷயங்கள் பயங்கரமா டேக் ஓவர் பண்ணக் கூடாதுன்னு காத்திருக்கோம்!" - ஆர்.ஜே பாலாஜி

post image

சூர்யாவின் 'கருப்பு' திரைப்படம் அடுத்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது.

த்ரிஷா, இந்திரன்ஸ், ஸ்வாசிகா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்திற்குச் சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரையில் பிரமாண்டமாக நடைபெற்றிருந்தது.

கருப்பு படம்
கருப்பு படம்

இப்படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியாகும் என சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார் இப்படத்தின் இயக்குநர் ஆர். ஜே. பாலாஜி.

அதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் சமூக வலைதளப் பக்கங்களில் டிரெய்லர் தொடர்பான அப்டேட்களைக் கேட்கத் தொடங்கினர்.

தற்போது, ஆர்.ஜே. பாலாஜி டிரெய்லர் அப்டேட் குறித்த கேள்விகளுக்குக் காணொளி வாயிலாகப் பதிலளித்திருக்கிறார்.

அந்தக் காணொளியில் அவர், "நான் இந்த மாதிரி சீட் பெல்ட் போட்டு ஏதாவது வீடியோ போட்டாலே ஏதாவது ஒரு அப்டேட்டோட வரேன்னு அர்த்தம். அடுத்த வாரம் இதே நேரம், 'கருப்பு' படம் ரிலீஸ் பண்றதுக்கான வேலைகளைக் கவனிச்சுட்டு இருப்போம்.

படத்தின் டிரெய்லர் ரெடி. அனைவருக்கும் டிரெய்லர் பிடிக்கும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனா இப்போ நிறைய அரசியல் நிகழ்வுகள் நடந்துட்டு இருக்கு.

நாம் ஆசையாக ஓட்டுப் போட்டு ஒரு விஷயம் நடந்திருக்கு என்கிற மகிழ்ச்சியோட இருக்கும்போது பல எதிர்பாராத திருப்பங்கள். இந்தத் திருப்பங்கள்லாம் முடிஞ்சு, நல்ல விஷயம் நம்ம எதிர்பார்க்கிற விஷயம் சீக்கிரமே நடக்கட்டும்.

ஆர்.ஜே பாலாஜி
ஆர்.ஜே. பாலாஜி

அதுக்கு நம்மலாம் வேண்டிப்போம். நல்லது நடக்கட்டும். நாம் டிரெய்லரை விட்டுட்டு அதுக்கப்புறம் பார்த்தா திடீர்னு அரசியல் விஷயங்கள் பயங்கரமா டேக் ஓவர் பண்ணக் கூடாதுன்னு காத்திருக்கோம்.

சீக்கிரமே ஒரு தெளிவு பிறக்கட்டும். உங்களுக்குப் பிடிச்ச மாதிரி படத்தை ரிலீஸ் பண்றதுக்கு பிளான் பண்ணிட்டு இருக்கோம்.

சீக்கிரமே அடுத்த கட்ட நடவடிக்கையோட உங்களைச் சந்திக்கிறேன். கருப்பன் கூட இருக்கான், கூட வருவான், நம்மள செமையா பாத்துப்பான்!" எனக் கூறியிருக்கிறார்.

வேகமெடுக்கும் படப்பிடிப்பு! விக்ரம் படத்தில் ரியா ஷிபுவா; இணைந்த நடிகர்கள்! 'சீயான் 63' பரபர அப்டேட்

மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் விக்ரமின் ரசிகர்கள். விக்ரமின் பிறந்த நாளில் வெளியான `சீயான் 63' படத்தின் ஃபர்ஸ்ட் ஃப்ளேம் வீடியோ படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்ததோடு வீடியோவும் செம வைரலாகிவிட்டது.... மேலும் பார்க்க

RB Choudary: ஏற்றுமதி பிசினஸ் டு சினிமா; 35 இயக்குநர்களை அறிமுகப்படுத்திய பெருமை - தெரியாத கதைகள்!

தமிழ்த் திரையுலகை மட்டுமல்லாமல் இந்தியத் திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் மரணம். 'நாட்டாமை', 'பூவே உனக்காக', 'ஜில்லா' உள்ளிட்ட 99 திரைப்படங்களை தமிழ், தெலுங்... மேலும் பார்க்க

'ஆளுநரின் இந்த செயல் அருவருப்பானது; விஜய்யை சட்டமன்றத்திற்குள் அனுமதிக்க வேண்டும்!' - பிரகாஷ் ராஜ்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றிருக்கிறது. 118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில் தான் திமுகவில் இருந்து ... மேலும் பார்க்க

RB Choudary: "என் 100வது படத்தில் நீங்கதான் நடிக்கணும்னு சொல்லியிருந்தார்" - ரஜினிகாந்த் இரங்கல்

தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.செளத்ரி விபத்தில் சிக்கி அகால மரணமடைந்திருக்கிறார். தமிழ் சினிமாவில் முக்கியமான பல திரைப்படங்களைத் தயாரித்தவர், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி. ... மேலும் பார்க்க

ஆர்.பி.சௌத்ரி: நேரில் சென்று அஞ்சலி; ஜீவாவை ஆரத்தழுவி ஆறுதல் சொன்ன விஜய்!

தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.செளத்ரி உயிரிழந்திருக்கிறார். தமிழ் சினிமாவில் முக்கியமான பல திரைப்படங்களை தயாரித்தவர், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி. நாட்டாமை, பூவே உனக்காக, ... மேலும் பார்க்க

"ஜில்லா-வுல என்னை நம்பி மதுரையையே செட் போட்டு கொடுத்தார்!" - நினைவுகள் பகிரும் 'ஜில்லா' பட இயக்குநர்

கார் விபத்தில் சிக்கி, 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி. சௌத்ரி அகால மரணமடைந்திருப்பது தமிழ் திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிற... மேலும் பார்க்க