செய்திகள் :

கரூரில் 17 காவல்துறை அதிகாரிகள் ஒரே அடியாக அதிரடி மாற்றம்! - பின்னணி என்ன?

post image

கரூர் டவுன் டிஎஸ்பி செல்வராஜ் தூத்துக்குடி மாவட்டத்திற்கும், குளித்தலை டிஎஸ்பி கடலூர் மாவட்டத்திற்கும், அரவக்குறிச்சி டிஎஸ்பி அப்துல் கபூர் தர்மபுரி மாவட்டத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கரூர்...

தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் மணிவண்ணன், கரூர் நகர காவல் ஆய்வாளர் அருள் பிரகாஷ் உள்ளிட்ட 10 காவல் ஆய்வாளர்கள் தெற்கு மற்றும் வடக்கு மண்டலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தனிப்பிரிவு சிறப்பு உதவி காவல் ஆய்வாளர், தலைமை காவலர்கள் என 5 பேர் தெற்கு மற்றும் வடக்கு மண்டலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை தலைமை இயக்குநரகம் மூலமாக இந்த பணியிட மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கூண்டோடு அதிரடி மாற்றத்திற்கான காரணம் என்ன? என காவல்துறை வட்டாரத்தில் விசாரித்த போது,

"பொதுவாக ஆளும் கட்சிக்கு ஆதரவாகத்தான் காவல்துறை அதிகாரிகள் செயல்படுவார்கள். மேலும், தனக்கு விசுவாசமாக எந்த அதிகாரி இருப்பர்களோ அவர்களை தனது மாவட்டத்திற்கு கொண்டு வருவது அரசியல்வாதிகளின் வழக்கம் தான்.

ஆனால், அரசுக்கு வேலை பார்த்ததை விட ஆளும் கட்சி அமைச்சருக்கு ஆதரவாக எல்லை மீறிய விசுவாசம் காட்டியதன் விளைவு தான் இன்று எதிர் வினையாக மாறியுள்ளது என்கிறார்கள்.

இடம் மாற்றம் பட்டியலில் உள்ளவர்கள் பெரும்பாலான காவல்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடந்த துயர சம்பவத்தின் போது பணியாற்றியவர்கள் என்பதை விட முன்னாள் அமைச்சரின் விசுவாசிகளாக இருந்தவர்கள் என்கிறார்கள் காக்கி வட்டாரத்தில்.

கடந்த ஐந்து ஆண்டு காலம் முன்னாள் அமைச்சருக்கு விசுவாசமாக இருந்தார்கள் என்பதை விட தற்போது ஆட்சி மாறினாலும், காட்சி மாறினாலும் இன்னும் விசுவாசம் மாறாமல் இவர்களின் ஸ்ஃபை வேலை தொடர்ந்துள்ளது. இதனால் தான் இந்த அதிரடி மாற்றம்' என்றனர்.

``'வாட்ஸ்அப் பல்கலைக்கழக' பொய்ப் பிரசாரங்களை நம்ப வேண்டாம்" - எம்.பி கனிமொழி எச்சரிக்கை!

கோயம்புத்தூரில் நடைபெற்ற சுயமரியாதை திருமண விழாவில் தி.மு.க எம்.பி கனிமொழி கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தி உரையாற்றினார். அந்த உரையில், ``50 அல்லது 100 ஆண்டுகளுக்கு முன்பு சாதியக் கட்டுப்பாடுகளாலும், ... மேலும் பார்க்க

``சி.வி.சண்முகம் சொல்வது 100% உண்மை!" - விருதாச்சலத்தில் பிரேமலதா விஜயகாந்த்

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், விருதாச்சலம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விருதாச்சல... மேலும் பார்க்க

சடாரென வந்த `விஜய்’ போட்டோ; சபைக்குறிப்பில் நீக்கப்பட்ட ஊழல் உறுதிமொழி - புதுச்சேரி பதவியேற்பு கலகல

புதுச்சேரி சட்டப்பேரவைக்கான 16-வது சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற்றது. அதில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அதையடுத்து மே 13-ம் தேதி... மேலும் பார்க்க

`விஜய் தம்முடைய விருப்பத்தை வெளிப்படுத்தினார்; அமைச்சரவையில்..!' - திருமாவளவன் சொன்ன பதில்!

தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பங்கும் முக்கியமான ஒன்று. தமிழ்நாடு அமைச்சரவையில் முதல்வர் உள்ளிட்ட 10 அமைச்சர்கள் பதவியேற்றுள்ள நிலையில், இன்னும் சி... மேலும் பார்க்க

'எது சரியோ அதை செய்யுங்க!' உத்தரவிட்ட முதல்வர் விஜய்? - மத்திய அரசுடன் மோத தயாராகும் தமிழக அரசு!

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை திட்டத்தின் ஒரு அங்கமான பி.எம்.ஸ்ரீ திடத்தில் தமிழக அரசு இன்னும் இணையவில்லை. விரைவில் இந்தத் திட்டத்தில் இணையுமாறு மத்திய அரசு தமிழக அரசுக்கு கடிதமும் எழுதியிருந்தது... மேலும் பார்க்க