Rain Alert: இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
கரையைக் கடக்க தொடங்கியது ஃபென்ஜால் புயல்
வங்கக் கடல் அருகே நிலவி வந்த ஃபென்ஜால் புயல் கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளது.
புயலின் முன் பகுதி கரையைத் தொட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மரக்காணம் அருகே கரையைக் கடக்க தொடங்கிய ஃபென்ஜால் புயலால் பலத்த காற்று வீசி வருகிறது.
அடுத்த 3-4 மணி நேரத்தில் புயல் முழுமையாக கரையைக் கடக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புயல் கரையைக் கடக்க தொடங்கியதால் சென்னை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் பலத்த சூறாவளிக்காற்று வீசி வருகிறது.