செய்திகள் :

கர்நாடகா: புகையும் `ரகசிய ஒப்பந்தம்' - மறுக்கும் ஆளும் தரப்பு - என்ன நடக்கிறது?

post image

கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு நடந்துவருகிறது. கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே சித்தராமையாவுக்கும் காங்கிரஸ் தலைவர் சிவகுமாருக்கும் இடயே மோதல் போக்கு நிலவி வந்தது. அதைத் தொடர்ந்து, மத்திய காங்கிரஸ் தலைமை இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி, சமானாதப்படுத்தியே தேர்தலை நடத்தி முடித்திருந்தது.

அப்போதே இருவரும் 5 ஆண்டுகள் ஆட்சியை சரிசமமாக பிரித்து ஆட்சி செய்துகொள்ளலாம் என 'ரகசிய ஒப்பந்தம்' மூலம் முடிவெடுத்ததாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், முதல்வராக சித்தராமையா தலைமையிலான அரசு 2.5 ஆண்டு பதவிக் காலத்தை, நவம்பர் 20 அன்று நிறைவு செய்தது. அப்போது முதலே இரு தலைவர்களுக்கு மத்தியில் மீண்டும் 'ரகசிய ஒப்பந்தம்' புகையத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

சித்தராமையா - டி.கே.சிவகுமார்
சித்தராமையா - டி.கே.சிவகுமார்

இந்த நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, ``கர்நாடக மக்கள் அளித்த ஆணையை ஏற்று எனது ஐந்தாண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்வேன். ஐந்து உத்தரவாதத் திட்டங்கள் உட்பட கட்சியின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

மறுபுறம், கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் தரப்பு, தலைமை மாற்றத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது என்றும், மூத்த தலைவர்களிடையே 'ரகசிய ஒப்பந்தம்' குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் கூறப்படுகிறது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையிலான உயர்மட்டக் குழு விரைவில் முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சித்தராமையாவும் சிவகுமாரும் கட்சியின் முடிவுக்குக் கட்டுப்பட விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமார் பேட்டி
கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமார் பேட்டி

இந்த நிலையில், கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``கர்நாடக காங்கிரஸ் தலைவராக தனது வரம்புகளை நன்கு அறிவேன். 2028 கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கான ஒரு உத்தியை தயாரிப்பதுதான் கட்சியின் இப்போதைய ஒரே கவனம். எனக்கும் முதல்வருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

முதல்வருடன் எனக்கு எங்கும் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. நாங்கள் அனைவரும் ஒன்றாக வேலை செய்கிறோம். கர்நாடக மக்களின் ஏராளமான கனவுகளுக்காக நாங்கள் பணியாற்ற உறுதியோடு இருக்கிறோம். எங்கள் இலக்கு 2028 மற்றும் 2029 ஆகும், அதற்காக நாங்கள் பாடுபடுகிறோம்." எனத் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் இரு தலைவர்களுக்குள்ளும் இருக்கும் சிக்கல் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி ஒத்திப்போடப்பட்டிருக்கலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

திரண்ட அதிமுக, அமமுக பிரபலங்கள், வாழ்த்திய சசிகலா; ஜெயலலிதா உதவியாளர் வீட்டுத் திருமணம்

மறைந்த அஇஅதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த ரவிராஜின் மகள் திருமணம் ஒரத்தநாடு அருகே நேற்று நடந்தது.மறைந்த ஜெ ஜெயலலிதா முதல்வராவதற்கு முன் அவரிடம் உதவியா... மேலும் பார்க்க

"அமித் ஷா, மோடி ஆகியோர் தமிழ்நாட்டிற்கு இனிமேல் படையெடுத்து தான் வர வேண்டும்!" - அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் புறநகர் மற்றும் நகரப் பகுதிகளுக்கு செல்ல ஏழு புதிய பேருந்து சேவைகளை மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு பிற... மேலும் பார்க்க

புதிய மேயர் யார்? - மும்பை உட்பட மகா., முழுவதுமுள்ள 29 மாநகராட்சிளுக்கு வரும் ஜன.,15ம் தேதி தேர்தல்

மும்பை மாநகராட்சி உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளின் பதவிக்காலம் கடந்த 2022ம் ஆண்டே முடிந்துவிட்டது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. உள்ளாட்சி அமைப்புகளில் எத்தனை... மேலும் பார்க்க