செய்திகள் :

“கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா! மனசு நோகுதய்யா.!" - வேதனையுடன் அதிமுகவில் இருந்து விலகிய செம்மலை

post image

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிமுக பழனிசாமி அணி, சி.வி.சண்முகம் அணி என இரண்டாக பிரிந்துள்ளது. இதை காரணம் காட்டி, அதிமுகவின் சீனியர் தலைவர் செம்மலை அதிமுகவில் இருந்து விலகியுள்ளார்.

இந்த விலகலுக்கு அவர் வெளியிட்டுள்ள அறிக்கை...

"தேர்தலுக்குப்பிறகு அஇஅதிமுகவில் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள் எனக்கு மிகுந்த மன வேதனையை உண்டாக்கி விட்டது.

இதே மனநிலையில் தான், இயக்கம் தொடங்கிய நாளிலிருந்து இந்த இயக்கத்திற்காக பாடுபட்டு வந்த லட்சக்கணக்கான தொண்டர்களும் இருந்து வருகிறார்கள்.

எடப்பாடி - எஸ்.பி வேலுமணி - சிவி சண்முகம்
எடப்பாடி - எஸ்.பி வேலுமணி - சிவி சண்முகம்

கற்பூரம்... கட்சி...

நடந்த சம்பவங்கள், நடக்கும் சம்பவங்கள் எதுவுமே திருப்தி அளிப்பதாக இல்லை. மாறாக கவலை அளிப்பதாகவே உள்ளது. பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் உருவாக்கிய இயக்கம், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காப்பாற்றிய இயக்கத்திற்கு இந்த கதியா?

“கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா!

நோகுதய்யா; மனசு நோகுதய்யா" என்ற உள்மனதின் வெளிப்பாடு எல்லோருக்குமானதே ஆகும்.

“உட்கட்சி சண்டையால் அதிமுக அசிங்கப்படுகிறது" என்று பிரபல ஆங்கில நாளிதழ்கள் பரிகாசம் செய்யும் அளவிற்கு நிலைமை போய்விட்டது.

மறுக்கப்பட்டன... தடுக்கப்பட்டன

புரட்சித்தலைவர் அவர்களும் புரட்சித்தலைவி அவர்களும் எவ்வளவோ வாய்ப்புகளை எனக்கு வழங்கியதோடு அரசியலில் நிலையான ஓர் அங்கீகாரத்தை எனக்கு உருவாக்கித் தந்தார்கள்.

அந்த நன்றிக்காக மறைந்த அந்த ஆளுமை மிக்க இருபெரும் தலைவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த இயக்கத்திற்கு என் அனுபவம் பயன்படவேண்டும் என்று சுயநலமின்றி தொடர்ந்து பணியாற்றி வந்தேன்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மறைவுக்குப்பிறகு எனக்கு பல வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. தடுக்கப்பட்டன. அதைப்பற்றி கூட நான் கவலைப்படவில்லை.

எனது ஆதங்கத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தலைமைக்கு கட்டுப்பட்டு தொடர்ந்து பணியாற்றி வந்தேன்.

செம்மலை - அறிக்கை
செம்மலை - அறிக்கை
செம்மலை - அறிக்கை
செம்மலை - அறிக்கை

விலகிக்கொள்கிறேன்

மறைந்த ஆளுமை மிக்க இருபெரும் தலைவர்களுடன் அரசியலில் பயணித்ததை நான் ஒரு கணம் எண்ணிப்பார்க்கிறேன். இப்போது உருவாகியுள்ள சூழ்நிலைகளை பார்க்கிறபோது இயக்கத்தில் தொடர்ந்து பயணிக்க என் மனம் இடம் தரவில்லை. மனம் வேதனைப் படுகிறது.

எவ்வளவோ வாய்ப்புகளை எனக்கு வழங்கியதோடு அரசியல் வானில் அடையாளம் காட்டப்பட்ட ஒரு ஒளிரும் நட்சத்திரமாக என்னை ஆளாக்கி அழகு பார்த்த மறைந்த இரு பெரும் தலைவர்களின் ஆன்மாக்களிடம், நான் எடுத்த இந்த முடிவுக்கு மன்னிப்புக் கோரி கனத்த இதயத்தோடு நான் வகிக்கும் பொறுப்பிலிருந்தும், கட்சியிலிருந்தும் விலகிக்கொள்கிறேன் என்பதை தலைமைக்கு வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்". என குறிப்பிட்டுள்ளார்.

மே 17 நினைவேந்தல்: `இனப்படுகொலைக்கு நீதி கேட்டு அழுத்தம் தர வேண்டும்' - திருமுருகன் காந்தி

2009, மே மாதம் 17,18,19 ஆகிய தேதிகளில் ஈழத்தின் முள்ளிவாய்க்காலில் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில், பல்வேறு தமிழ்த்தேசிய - திராவிட இயக்கங்களும் இனப்படுகொலை நாளுக்கு நினைவேந்தல்... மேலும் பார்க்க

திமுக: "60 வயதிற்கு மேற்பட்டவர்கள் யாரும் இருக்க கூடாது.!"- வைரலாகும் எழிலன் பதிவு

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியைத் தழுவிய நிலையில், தவெக அதிக இடங்களை வென்று ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்கிறது. திமுகவின் கோட்டை என கருதப்படும் சென்னைம மாவட்டத்தில் உள்ள 16 தொக... மேலும் பார்க்க

'அரசியலில் இருந்து சிறிது காலம் ஓய்வு' - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பரபரப்பு அறிக்கை!

முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இந்நிலையில் சிறிது காலம் ஓய்வெடுக்கபோவதாக எக்ஸ் தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அ... மேலும் பார்க்க

`கிலுகிலுப்பை ஆட்டி விளையாட்டு காட்டும் ஆளைப் பார்த்து குழந்தை நிச்சயம் மயங்கும்; ஆனா.!” - உதயநிதி

திருவாரூர் எம்.எல்.ஏ பூண்டி கே.கலைவாணன் இல்லத் திருமண விழா தஞ்சாவூரில் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் உதயநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் உதயநிதி ஸ்டாலி... மேலும் பார்க்க

'இன்ஸ்டாகிராம் மூலமாக தமிழக வெற்றிக்கழகம் ஆட்சிக்கு வந்துள்ளது' - ஸ்டாலின் கூறியது என்ன?

தஞ்சாவூரில் திமுக எம்.எல்.ஏ பூண்டி கலைவாணனின் இல்லத் திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டிருக்கிறார். திருமண விழாவில் பேசிய ஸ்டாலின், " யாரும் சோகமாக இருக்கத் தேவையில்லை. நாம் தான் ... மேலும் பார்க்க

அன்பார்ந்த வேட்பாள பெருங்குடி மக்களுக்கு... நடப்பு அரசியல் கண்டு அழும் வாக்காளனின் கடிதம்!

அன்பார்ந்த வேட்பாள பெருங்குடி மக்களே..'வழக்கத்தைத் தாண்டி இந்தத் தடவை கொஞ்சம் அதிகமா ஏமாந்துட்டோமோ'ங்கிற ஆதங்கத்துடன் உங்களுக்கு ஓட்டுப் போட்ட வாக்காளன் வரையும் மடல் இது. 'யோக்கியன் வர்றான் செம்பெடுத்... மேலும் பார்க்க