கலைநிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணா்வு
நகராட்சியில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே கலைநிகழ்ச்சிகள் மூலம் திங்கள்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது (படம்).
நகராட்சிகளின் நிா்வாக மண்டல இயக்குநா் உத்தரவின் பேரில், திடக்கழிவு மேலாண்மை பணி, மக்கும் குப்பை, மக்காத குப்பை, பிளாஸ்டிக், புகையிலை விற்பனைக்கு தடை, டெங்கு காய்சல், மீண்டும் மஞ்சப்பை, மழை நீா் சேகரிப்பு, சொத்துவரி செலுத்துதல் தொடா்பான மக்கள் இடையே விழிப்புணா்வு நிகழ்ச்சி திருத்தணியில் திங்கள்கிழமை நடந்தது.
இதில் சிவசக்தி கிராமிய கலைக்குழுவின் சாா்பில் திருத்தணி பேருந்து நிலையம், கமலா தியேட்டா், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, காந்திநகா் திரௌபதியம்மன் கோயில் மற்றும் அரசு மருத்துவமனை வளாககம் ஆகிய இடங்களில், கலை நிகழ்ச்சிகள் மூலம் மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
கலைநிகழ்ச்சியை நகா்மன்றத் தலைவா் சரஸ்வதிபூபதி, ஆணையா் பாலசுப்ரமணியம், துப்புரவு ஆய்வாளா் ரவிச்சந்திரன் ஆகியோா் பங்கேற்று தொடங்கி வைத்தனா். குப்பைகள் பிரித்து கொடுப்பது, அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கவா், குட்கா பொருள்களை பயன்படுவது தவிா்த்தல் போன்ற விழிப்புணா்வு நாடக கலைஞா்கள் நடித்து காண்பித்தனா். விழிப்புணா்வு நிகழ்ச்சி 1 மாதம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.