செய்திகள் :

கல்லூரி விடுதியில் கட்டில்கள் திருடிய முன்னாள் மாணவன்; காவலரால் கையும் களவுமாகச் சிக்கியது எப்படி?

post image

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பிரபலமான மகாராஜாஸ் கல்லூரி அமைந்துள்ளது. இந்தக் கல்லூரியில் அங்கமாலி, சக்குவீடு பகுதியைச் சேர்ந்த ஆன்ஸ்டன் (23) என்பவர் தாவரவியல் பிரிவில் படித்துவந்தார்.

கடந்த 2024-ம் ஆண்டு கல்லூரியிலிருந்து படிப்பை முடித்து வெளியேறினார். எர்ணாகுளம் ஹாஸ்பிட்டல் ரோட்டில் உள்ள கல்லூரியின் நிர்வாகத்துக்குட்பட்ட 'ராமவர்மா ஆண்கள் விடுதியில்' தங்கிப் படித்துள்ளார். ​

இவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவுக்கு மேல், கல்லூரி விடுதிக்குள் புகுந்து அங்கிருந்த சுமார் 20,000 ரூபாய் மதிப்புள்ள 8 இரும்புக் கட்டில்களைத் திருட முயன்றுள்ளார். இதற்காக, 'போர்ட்டர்' ஆன்லைன் செயலி மூலம் ஒரு சிறிய சரக்கு வாகனத்தையும் அவர் வரவழைத்துள்ளார்.

ஐந்து கட்டில்களை பாகங்களாகக் கழற்றி வாகனத்தில் ஏற்றியுள்ளார். அப்போது, அங்கு பணியில் இருந்த இரவுக்காவலர் சுதேவ் என்பவர் சுதாரித்துகொண்டு, மாணவரைத் தடுத்து நிறுத்தினார்.

கட்டிலை எங்கே கொண்டுசெல்கிறீர்கள் எனக் ​காவலர்  கேட்டதற்கு, விடுதியில் மூட்டைப்பூச்சித் தொல்லை அதிகமாக இருப்பதால், கட்டில்களைப் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதற்காக அங்கமாலிக்குக் கொண்டு செல்கிறேன் என்று ஆன்ஸ்டன் கூறியுள்ளார்.

சந்தேகமடைந்த காவலர் கல்லூரி நிர்வாகத்தின் அனுமதி கடிதத்தைக் காண்பிக்கும்படி கேட்டார். அதற்கு ஆன்ஸ்டன் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் சந்தேகம் அடைந்த விடுதி காவலர் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்திற்குச் சென்ற சென்ட்ரல் போலீசார், ஆன்ஸ்டனைக் கைது செய்ததுடன், கட்டில்களையும், கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

கைதுசெய்யப்பட்ட ஆன்ஸ்டன்
கைதுசெய்யப்பட்ட ஆன்ஸ்டன்

முதற்கட்ட விசாரணையில் ஆன்ஸ்டன் கூறிய சில தகவல்கள் போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

"எனது குடும்பம் கடுமையான நிதி நெருக்கடியில் இருந்தது. எனவே, எனது பெற்றோர் வீட்டின் மேல்மாடியை விடுதியாக மாற்றி மாணவர்களுக்கு வாடகைக்கு விட முடிவுசெய்தனர். விடுதிக்குத் தேவையான கட்டில்களை வாங்குவதற்காக பெற்றோர் என்னிடம் 17,000 ரூபாய் வழங்கினர்.

அந்தப் பணத்தை வேறு தேவைகளுக்குச் செலவு செய்துவிட்டேன். பணத்தைச் செலவுசெய்த விஷயம் ​பெற்றோருக்குத் தெரிந்தால் திட்டிவிடுவார்கள் என்ற பயத்தில், நான் ஏற்கனவே தங்கியிருந்த கல்லூரி விடுதியிலேயே நள்ளிரவில் கட்டில்களைத் திருட திட்டமிட்டேன். விடுதி காவலரால் சிக்கிக்கொண்டேன்" என விசாரணையில் ஆன்ஸ்டன் தெரிவித்துள்ளார்.

கல்லூரி விடுதியில் கட்டில் திருட்டு
கல்லூரி விடுதியில் கட்டில் திருட்டு

நடந்த​ சம்பவம் குறித்து இரவுக் காவலர் சுதேவ் கூறுகையில், "நள்ளிரவில் கட்டில்களை வாகனத்தில் ஏற்றியபோதே எனக்குச் சந்தேகம் வந்தது. கல்லூரி அனுமதி கடிதம் கேட்டபோது அவரிடம் பதில் இல்லை. உடனடியாக போலீசாருக்குத் தகவல் கொடுத்தேன்" என்றார்.

​இந்தத் திருட்டுச் சம்பவத்தில் விடுதியில் உள்ள தற்போதைய மாணவர்கள் அல்லது ஊழியர்கள் யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும், திருடுவதற்கு முன்பாக ஆன்ஸ்டன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய நண்பர்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்லூரியில் படித்த சமயத்தில் எம்.ஜி. பல்கலைக்கழகத்தின் டெக்கத்லான் தடகளப் பிரிவின் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் ஆன்ஸ்டன். விளையாட்டில் சிறந்து விளங்கிய ஒரு இளம் சாம்பியன், தவறான பாதையில் சென்று திருட்டு வழக்கில் சிக்கியிருப்பது அந்தக் கல்லூரி மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: தங்கக்காசு மோசடியில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது - அடுத்து சிக்கப் போவது யார்?

சென்னையில் உள்ள தனியார் வங்கியில், ஊழியராகப் பணியாற்றிவரும் ராஜன் (பெயர் மாற்றம்) என்பவரிடம் கொளத்தூரைச் சேர்ந்த பிரபுமணி சில மாதங்களுக்கு முன்பு அறிமுகமாகியிருக்கிறார். அப்போது பிரபுமணி, ‘4,500 ரூபாய... மேலும் பார்க்க

11 மாதக் குழந்தையின் மரணத்தில் சந்தேகம்; கொன்றுவிட்டு நாடகமாடுகின்றனரா பெற்றோர்? பிண்ணனி என்ன?

பெங்களூரு கிழக்குப் பகுதியில் உள்ள அவலஹள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிதாகனூர் கிராமத்தில் வசிக்கும் ஷேகப்பா தனது குழந்தை கட்டிலில் இருந்து கீழே விழுந்து இறந்துவிட்டதாக போலீஸ் நிலையத்தில் புகார் அள... மேலும் பார்க்க

விருதுநகர்: சிறுமி மீது கார் ஏற்றிக் கொலை செய்ய முயற்சியா? தட்டிக்கேட்ட தந்தைக்குக் கொலை மிரட்டல்

விருதுநகர் மாவட்டம் நரிக்குடியைடுத்த வந்தவாசி கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி (வயது 43). இவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த குண்டுமலை குடும்பத்தினருக்கும் கோயில்... மேலும் பார்க்க

`அவள் எனக்கு மட்டும்தான்’ - வேறொருவரின் மனைவியுடன் தொடர்பிலிருந்த இருவர்; கொலையில் முடிந்த கொடூரம்

வேலூர் அருகேயுள்ள சதுப்பேரியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 42), பெயிண்டர். இவர், நேற்று முன்தினம் சிறுகாஞ்சியிலுள்ள விவசாய நிலப்பகுதியில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் க... மேலும் பார்க்க

போதைப்பொருள் மாஃபியாயின் வெறியாட்டம்? 19 கைதிகள் பலி - இலங்கை நீர்கொழும்பு சிறையில் நடப்பது என்ன?

இலங்கையின் கடலோர நகரமான நீர்கொழும்பில் உள்ள சிறைச்சாலை, தற்போது ரத்தமும் சதையுமாக சிதறிக்கிடக்கும் ஒரு போர்க்களமாக மாறியிருக்கிறது. கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக வெடித்து, இதுவரை 19 உ... மேலும் பார்க்க

தூத்துக்குடி: வீட்டில் நாட்டு வெடிகுண்டு பதுக்கிய கும்பல் கைது; கொலைத் திட்டமா?

தூத்துக்குடியில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை செய்த கும்பல் ஒன்று தனிப்பிரிவு போலீஸாரிடம் சிக்கியது. அந்த கும்பலிடம் இருந்து 17 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அந்த கும்பலிடம் போலீஸார் ... மேலும் பார்க்க