செய்திகள் :

காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொன்ற பெண்; தலையணையால் அமுக்கி மகனையும் கொன்றுவிட்டு நாடகம்!

post image

பெங்களூருவில் உள்ள பசவேஷ்வர் நகரில் தனது மனைவி ஹரினி மற்றும் 4 வயது மகனுடன் வசித்து வந்தவர், அபிநந்தன். இவர் தனது மகனுடன் வீட்டில் மர்மமான முறையில் இன்று இறந்து கிடந்தார். இது குறித்து ஹரினி போலீஸாரை தொடர்பு தனது கணவரும், மகனும் படுக்கையில் இருந்து எழுந்திருக்கவில்லை என்று தெரிவித்தார். போலீஸார் விரைந்து வந்து இரண்டு பேரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் இருவரும் இறந்திருந்தனர். அபிநந்தனின் காது வழியாக ரத்தம் வந்து இருந்தது. இது குறித்து போலீஸார் அபிநந்தன் மனைவி ஹரினியிடம் விசாரித்தபோது, ஆரம்பத்தில் இதில் தனக்கு தொடர்பு இல்லை என்று தெரிவித்தார். மேற்கொண்டு தீவிர விசாரணையில் அவரும் அவரது காதலனும் சேர்ந்து இக்கொலையை செய்திருப்பது தெரிய வந்தது.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ''நேற்று இரவு இருவருக்கும் இடையே படுக்கை ஏற்பாடுகள் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் ஹரினி வீட்டில் இருந்த கரண்டியை எடுத்து தனது கணவனை தாக்கிவிட்டு வேறு ஒரு அறைக்குச் சென்று படுத்துக்கொண்டார்.

நள்ளிரவில் தனது காதலன் வினய் என்பவரை தொடர்பு கொண்டு வீட்டிற்கு வரச் செய்துள்ளார். வீட்டில் அபிநந்தன் உறங்கிக்கொண்டிருந்தபோது அவரை கழுத்தை நெரித்தும் தாக்கியும் கொலை செய்துள்ளனர்.

இத்தாக்குதலில் அருகில் உறங்கிக்கொண்டிருந்த அவர்களின் 4 வயது மகன் எழுந்தான். உடனே அவனையும் ஹரினி வீட்டில் இருந்த தலையணையால் முகத்தில் அமுக்கி கொலை செய்துள்ளார். ஹரினியின் காதலன் வினய் தப்பிச்சென்றுவிட்டார். அவரை தேடி வருகிறோம்" என்று போலீஸார் தெரிவித்தனர். வினய் வீட்டிற்கு வந்தபோது அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவை ஆஃப் செய்தது தெரிய வந்துள்ளது. மேலும் வீட்டில் இருந்த ரத்தக்கரையை ஹரினி துடைத்திருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சென்னை: கை, கால்கள் கட்டி, வாயில் துணி அடைத்து இளைஞர் கொலை - போதை மறுவாழ்வு மையத்தில் நடந்த கொடூரம்

காஞ்சிபுரம், விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவரின் மகன் அருண்குமார் (39). இவர் செம்பாக்கத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக சேர்க்கப்ப... மேலும் பார்க்க

தருமபுரி: நகைக்காக மாமியாரைக் கொன்று குவாரி குட்டையில் வீசிய திமுக நிர்வாகி; நண்பர்களுடன் கைது

நகைக்காக மாமியாரைக் கொலை செய்து சடலத்தை குவாரி குட்டையில் வீசிய சம்பவத்தில் திமுக ஒன்றிய அமைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய... மேலும் பார்க்க

சேலம்:சிறுமியை மதுவுக்கு அடிமையாக்கி தொடர் கூட்டுப்பாலியல் வன்கொடுமை - 2 சிறார்கள் உட்பட 4 பேர் கைது

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவரின் நடவடிக்கைளில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. சிறுமிக்கு மது அருந்தும் பழக்கம் ஏற்பட்டிருப்பதாக சந்தேகமடைந்த சிறுமியின் தாய் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் க... மேலும் பார்க்க

பெண்களுக்கு காதல் வலை; நகை, பணம் பறித்து சொந்தமாக ஆம்னி பஸ் வாங்கிய இளைஞர் - போக்ஸோ வழக்கில் கைது

கன்னியாகுமரி மாவட்டம் ​மார்த்தாண்டம் அருகே உள்ள பாகோடு, பாளையங்கெட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிஸ் (25). இவர் சொந்தமாக ஒலி, ஒளி சவுண்ட் சர்வீஸ் தொழில் செய்து வந்தார். இவருக்குத் திருமணமாகி மனைவியும், ஒ... மேலும் பார்க்க

”படிப்புக்கு பண உதவி செய்வார்” - மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் பெண் ஆசிரியர் உட்பட இருவர் கைது

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை ஈஸ்வரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா (38). இவர் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிகிறார். மேலும... மேலும் பார்க்க

குமரி: போன் பயன்படுத்தியதால் ஆசிரியர் கண்டிப்பு? 3வது ​மாடியிலிருந்து குதித்த நர்சிங் மாணவி மரணம்

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் பெத்லகேம் இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் பெத்லகேம் நர்சிங் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த நர்சிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயின்றுவந்த கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை ... மேலும் பார்க்க