செய்திகள் :

'காத்திருந்து எலெக்சனுக்கு 30 நாளுக்கு முன்னாடி அவதூறு பரப்புறாங்க - நெல்லையில் விஜய் ஆவேசம்!

post image

தவெக தலைவர் விஜய் இன்று திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். திருநெல்வேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி திமுகவை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.

விஜய்
விஜய்

விஜய் பேசியவை, 'திமுக கையில் இந்நேரம் முழு பவரும் இருந்திருந்தால் இந்த நிகழ்ச்சி நடந்திருக்காது. எதாவது முட்டுக்கட்டை போட்டு என்னை வரவிடாமல் செய்திருப்பார்கள். திமுக அரசு எவ்வளவோ அவதூறுகளை நம் மீது பரப்பினார்கள்.

இந்த திமுக கூட்டணியும் பாஜக கூட்டணியும் வெளியே தனியாக தெரிந்தாலும், உள்ளே அவர்கள் ஒன்றுதான். இருவருக்குமே ஒரே நோக்கம்தான். உங்களுக்காக நான் களத்துக்கு வரக் கூடாது என்றே இருவரும் நினைக்கின்றனர். நாம் வந்த பிறகு அவர்களால் ஊழல் செய்ய முடியவில்லை. அதனால்தான் என் மீது கோபம். ஸ்டாலின் சார் ஒரு கல்லாப்பெட்டி கூட்டணி அமைத்திருக்கிறார். கூட்டணிக் கட்சி தலைவர்களே தங்கள் கூட்டணிக்கு ஓட்டுப் போட மாட்டார்கள் போல. அந்த அளவில் இருக்கிறது அந்த கூட்டணி. சில கோடிகளை கொடுத்து காங்கிரஸை தன் பக்கம் இழுத்துக் கொண்டார் ஸ்டாலின் சார். ஆனால், உண்மையான காங்கிரஸ் நம்முடன் தான் நிற்கிறது. சிறுபான்மை மக்கள் நம் பக்கம் நிற்பதை பார்த்து திமுகவுக்கு பாஜகவுக்கும் நம் மீது கோபம்.

விஜய்
விஜய்

மேலும் அவங்க வீட்லயே விசில் சத்தம் சவுண்டா கேட்குது. அதனால்தான் நம் மீது அவர்களுக்கு காண்டு.

கட்சி ஆரம்பித்துவிட்டு ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் செல்லவில்லை. ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் சென்றுவிட்டுதான் கட்சியே ஆரம்பித்திருக்கிறேன். கரூர் விஷயத்தை பற்றி ஊருக்கே தெரியும். ஆனாலும் என் மீது பழி போட்டார்கள். அவ்வளவு பெரிய பழியை போட்டும் எடுபடவில்லை என்றவுடன் தான் ஜனநாயகனை முடக்கினார்கள். அப்போதும் நம்மை ஒன்றும் செய்ய முடியவில்லை. அடுத்ததாக பிரசாரம் செய்யவிடாமல் SOP யை வைத்து முடக்கப் பார்த்தார்கள். பின்னர் என்னை சுற்றியிருப்பவர்களை வைத்தே, இத்தனை வருடமாக காத்திருந்து தேர்தலுக்கு 30 நாட்களுக்கு முன்பாக அவதூறு பரப்ப வைத்தார்கள். நீங்கள் என்ன செய்தாலும் என்னை மக்களிடமிருந்து பிரிக்க முடியாது."

`இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்' - பழைய நினைவில் பேசிய செங்கோட்டையன்; சட்டென சுதாரிப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து, அக்கட்சியின் கோபிசெட்டிபாளையம் தொகுதி வேட்பாளராக களமிறங்கியிருக்கிறார் அ.தி.மு.க - வின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன். ஈரோடு மாவட்டம், பவான... மேலும் பார்க்க

கரூர்: "சட்டை அவரோடது தான்; ஆனால், மாப்பிள்ளை அவரில்லை.!" - திமுக வேட்பாளரை கிண்டல் செய்த அண்ணாமலை

கரூர், வெங்கமேடு பகுதியில் அதிமுக வேட்பாளர், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை ஆதரித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார்.இதில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள... மேலும் பார்க்க

பிரசாரத்துக்கு விடுமுறை எடுக்கும் விஜய் - கவலையில் தவெக வேட்பாளர்கள்?

சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் ஓய இன்னும் சரியாக 10 நாட்களே இருக்கிறது. எல்லா கட்சித் தலைவர்களும் அதிகமான தொகுதிகளை கவர் செய்ய சுற்றி சுழன்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், தவெக தலைவர் விஜய் மட்டு... மேலும் பார்க்க

தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

வருகிற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் தலைமை செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை மாற்றி வருகிறது இந்திய தேர்தல் ஆணையம்.அதன் ஒரு பகுதியாக, இப்போது தமிழ்நாடு உள்துறை செயலாளர் மாற்றப்பட்டுள... மேலும் பார்க்க

"பா.ஜ.க-வுக்கு பன்முகம் கிடையாது, கோர முகம் தான் இருக்கிறது"- செல்வபெருந்தகை கடும் தாக்கு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கிள்ளியூர் வேட்பாளர் ராஜேஷ்குமார், குளச்சல் வேட்பாளர் தாரகை கத்பர்ட், விளவங்கோடு வேட்பாளர் டி.டி.பிரவீன் ஆகியோரை ஆதரித்து தமிழக காங்கிரஸ் தலைவ... மேலும் பார்க்க

முழுமையாக திறக்கப்படாத ஹார்முஸ் ஜலசந்தி - ஈரான் 'இதை' மறந்ததே காரணம்!

மூன்று நாள்களாக ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டுள்ளது.இருந்தும் ஈரான் அனுமதித்த கப்பல்கள் மட்டும் ஹார்முஸைக் கடந்து வருகிறது‌.ஆனால், அந்தக் கப்பல்களையும் வழக்கமான பாதையில் அல்லாமல், ஹார்முஸிலேயே வேறு பா... மேலும் பார்க்க