செய்திகள் :

காந்தாரா விவகாரம்: 'சாமுண்டீஸ்வரி அம்மனிடம் மன்னிப்புக் கேட்ட ரன்வீர் சிங்' - கோயில் நிர்வாகம் தகவல்

post image

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா சாப்டர்-1' (Kantara Chapter-1) திரைப்படம் வெளியானது. இந்தத் திரைப்படம் குறித்து கோவாவில் நடைபெற்ற ஃபிலிம்பேர் விருது வழங்கும் விழாவில், நடிகர் ரன்வீர் சிங் பேசினார்.

அப்போது, காந்தாரா-வில் சித்தரிக்கப்பட்ட 'தெய்வ' கதாப்பாத்திரத்தை இமிடேட் செய்யும் வகையில் செய்கை செய்தார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

இந்த நிலையில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த ஒருவர், ``எங்கள் நம்பிக்கையைப் புண்படுத்தும் வகையில் ரன்வீர் சிங் செயல்பட்டிருக்கிறார். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனப் பொது மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றத்தில், ரன்வீர் சிங் எழுத்துப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டிருந்தார்.

சாமுண்டீஸ்வரி அம்மனிடம் மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்
சாமுண்டீஸ்வரி அம்மனிடம் மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்
சாமுண்டீஸ்வரி அம்மனிடம் மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்
சாமுண்டீஸ்வரி அம்மனிடம் மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்
சாமுண்டீஸ்வரி அம்மனிடம் மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்
சாமுண்டீஸ்வரி அம்மனிடம் மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

அதைத் தொடர்ந்து, அவர் மீதான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த மே 5, 2026 அன்று ரத்து செய்தது. மேலும், தனது நடத்தைக்குப் பரிகாரம் தேடும் வகையில் நான்கு வாரங்களுக்குள் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலுக்குச் சென்று நடிகர் ரன்வீர் சிங் வழிபட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

அதன் அடிப்படையில், மைசூரில் உள்ள சாமூண்டீஸ்வரி கோயிலுக்கு நடிகர் ரன்வீர் சிங் நேற்று சென்றிருக்கிறார்.

இது தொடர்பாக சாமுண்டீஸ்வரி கோயில் செயல் அலுவலர் எம்.ஜே.ரூபா, ``நடிகர் ரன்வீர் சிங் எங்களுக்கு எந்த முன்னறிவிப்புமின்றி திடீரென வந்தார். கூட்டம் இல்லாத அதிகாலை நேரத்தில், ஒரு சாதாரண பக்தரைப் போல மாஸ்க் அணிந்து வந்திருந்தார். காலை 7.30 மணியளவில் கோயிலுக்கு வந்த அவர், அர்ச்சகர் சுனிலிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, தான் அம்மனிடம் மன்னிப்புக் கேட்க வந்திருப்பதாகக் கூறினார்.

இதையடுத்து அர்ச்சகர் அவரை கர்ப்பக்கிருகத்திற்கு அழைத்துச் செல்ல, அங்கு அவர் சிறப்புப் பிரார்த்தனை செய்தார். பிரார்த்தனை முடிந்த உடனேயே, பக்தர்கள் வரத் தொடங்குவதற்கு முன்பே அவர் கோயில் வளாகத்தை விட்டு வெளியேறிவிட்டார்" என்றார்.

"சச்சின், கோலியை விட சிறப்பாக விளையாட வேண்டும்" - சூர்யவன்ஷியை வாழ்த்திய கங்கனா ரனாவத்

நடந்து முடிந்த ஐபிஎல் 2026 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய 15 வயதுடைய இளம் வீரரான சூர்யவன்ஷி தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.இந்த சீசனில் 16 ஆட்டங்களில் ஆடி ஒரு சதம், 5 அரை ... மேலும் பார்க்க

Aamir Khan: ஷாருக்கான், சல்மான் கான் முன்னிலையில் திருமணம்; கௌரியை மணமுடிக்கும் ஆமீர் கான்!

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி இரண்டு மனைவிகளையும் விவாகரத்து செய்துவிட்டார். ஆனால் விவாகரத்து செய்த பிறகு இரண்டு முன்னாள் மனைவிகளிடமும் சுமூக உறவை பேணி வரும் ஆமீர் கான் கடந... மேலும் பார்க்க

'என்னை நானே பலமுறை துன்புறுத்தி இருக்கிறேன், ஆனால்.!'- உடற்பயிற்சி குறித்து டாப்ஸி அட்வைஸ்

இந்திய சினிமாவில் பிரபலமான நடிகையான டாப்ஸி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார்.சமீபத்தில் அனுபவ் சின்கா இயக்​கத்​தில் அவர் நடித்த ‘அஸி’ என்ற திரைப்​படம் வெளி​யானது.தொ... மேலும் பார்க்க

"நாங்கள் தலைக்கனம் பிடித்தவர்கள் அல்ல" - ரசிகருடனான செல்பி விவகாரம் குறித்து பூஜா ஹெக்டே விளக்கம்

வருண் தவான், மிருணாள் தாகூர், பூஜா ஹெக்டே நடிப்பில் 'ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை' திரைப்படம் ஜூன் 5-ம் தேதி வெளியாக இருக்கிறது. 'ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை'ரொமான்டிக் காமெடி படமாக உருவாகியிருக்கும் இ... மேலும் பார்க்க

Don 3 விவகாரம்: "இனி அவருடன் பணியாற்ற விரும்பவில்லை"- ரன்வீர் சிங்கின் சமரசத்தை ஏற்க பர்ஹான் மறுப்பு

நடிகர் ஷாருக்கான் நடித்து பெரிய அளவில் ஹிட்டான டான் படத்தின் மூன்றாவது பகுதியாக டான் 3 படத்தை எடுக்க இயக்குநர் பர்ஹான் அக்தர் முடிவு செய்து ஷாருக்கானை அனுகினார். ஆனால் அதில் நடிக்க ஷாருக்கான் மறுத்துவ... மேலும் பார்க்க

'இன்ஸ்டாவில் பாலிவுட் பிரபலங்களை Unfollow செய்தது ஏன்?' - இயக்குநர் கரண் ஜோகர் விளக்கம்

பாலிவுட் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோகர் பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்களை அறிமுகப்படுத்தி இயக்கியும் இருக்கிறார். அவர் திடீரென இன்ஸ்டாகிராமில் ஷாருக் கான், ரன்வீர் சிங், கரீனா கபூர் கான், ஜ... மேலும் பார்க்க