செய்திகள் :

காமலாபுரம்: இடிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகும் அங்கன்வாடி கட்டடம்; இந்த ஆண்டாவது கட்டப்படுமா?!

post image

சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், காமலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பச்சாயி அம்மன் கோயில் அருகில் இருந்த அங்கன்வாடி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது. ஆனால், இதுவரையும் புதிதாக கட்டடம் அமைக்கப்படாமல் இருக்கிறது என்ற தகவல் நமக்கு வந்தது. நேரில் சென்று விசாரித்தோம்!

அப்படி என்றால் அங்கு படிக்கும் குழந்தைகள் இப்போது எங்கு படிக்கின்றனர் என்று கேட்க தோன்றும். ஆம்! அங்கு படிக்கும் குழந்தைகள் சுமார் 2 ஆண்டுகளாக அருகில் அட்டை போட்ட சிறு வீட்டில் கழிவறை வசதியின்றி, அவசர தேவைக்கு அருகிலுள்ள வீட்டின் கழிவறையைப் பயன்படுத்தி வரும் நிலை நீடித்துவருகிறது. சுமார் 25 குழந்தைகள் பயின்று‌ வரும் இந்த அங்கன்வாடி பள்ளி பற்றி அங்குள்ள நபர்களிடம் கேட்ட போது, ``பல கிராம சபை கூட்டங்களில் பல மனுக்கள் அளித்தும் இதுவரை புதிய கட்டடம் கட்டித்தர அரசு முன்வரவில்லை. கட்டடம் கட்ட அனுமதி பெறப்பட்டுள்ளது எனவும் டெண்டருக்கு பிறகு கட்டடம் கட்டப்படும் எனவும் வட்டார வளர்ச்சி அலுவலர்‌ கூறியிருக்கிறார். அடுத்த மாதம் பணிகள் தொடங்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள்" என்றனர்.

குழந்தைகளின் பெற்றோர்களிடம் கேட்டபோது, ``சுமார் 2 ஆண்டுகளாக இதே நிலைதான் நீடிக்கிறது. அரசு உரிய நடவடிக்கை எடுத்து கட்டடம் கட்டித்தர வேண்டும்" என்றனர்.

இது குறித்து காமலாபுரம் ஊராட்சி செயலாளரிடம் பேசியபோது, ``புதிய கட்டடத்திற்கான முன்மொழிவு மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பபட்டுள்ளது. அவர் ஒப்புதல் தந்ததும் கட்டடம் கட்டப்படும்" என்றார்.

சுமார் 2 ஆண்டுகளாக கட்டப்படாமல் இருக்கும் இடிக்கப்பட்ட அங்கன்வாடி கட்டடத்தை அரசு விரைந்து இனியும் காலம் தாழ்த்தாமல் கட்டித்தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது!

`பசுமை வனம் டு பாலைவனத் தோட்டம்' - கோவையின் புதிய அடையாளம் செம்மொழிப் பூங்கா திறப்பு! | Photo Album

செம்மொழிப் பூங்கா திறப்புசெம்மொழிப் பூங்கா திறப்புசெம்மொழிப் பூங்கா திறப்புசெம்மொழிப் பூங்கா திறப்புசெம்மொழிப் பூங்கா திறப்புசெம்மொழிப் பூங்கா திறப்புசெம்மொழிப் பூங்கா திறப்புசெம்மொழிப் பூங்கா திறப்பு... மேலும் பார்க்க

மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா! - என்ன ஸ்பெஷல்?

மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்காமின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்காமின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்காமின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்காமின்னொளியில் ஜொல... மேலும் பார்க்க

"தமிழ்நாடு தனித்து நிற்கிறதா?"- ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சிற்கு திமுக அமைச்சர் ரகுபதி சொன்ன பதில்!

"தமிழ்நாடு தனித்து விடப்பட்டிருக்கிறது, யாருடனும் இணையவில்லை" என்றும் "திராவிடம் என்பது கற்பனை, தமிழ்நாட்டில் பீகாரிகள் அச்சுறுத்தப்பட்டனர், தமிழ்நாட்டில் மொழி சிறுபான்மையினரின் உரிமைகள் பறிக்கப்படுகி... மேலும் பார்க்க

Fastag-ஐ எந்தப் பிரச்னையும் இல்லாமல் பயன்படுத்த, `இது' ரொம்ப முக்கியம் - உடனே பண்ணிடுங்க! | How to?

சில நேரங்களில் ஃபாஸ்ட் டேக் ஸ்கேன் செய்யும்போது, வேலை செய்யாமல் போய் விடுகிறது. இதனால், டோல்கேட்டில் தேவையில்லாத டென்சன் ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், 'KYV (Know Your Vehicle)' அப்டேட் செய்யாமல்... மேலும் பார்க்க

திருப்பூர்: மலை போல குவியும் குப்பைகள்; அகற்ற முடியாமல் திணறும் மாநகராட்சி - பிரச்னை என்ன?

திருப்பூர் மாவட்டத்தில் சமீபத்தில் திடக்கழிவு மேலாண்மையில் பெரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.முன்னதாக, திருப்பூர் மாநகராட்சி முழுவதும் சேகரிக்கப்படும் குப்பைகள் முன்பு ஆங்காங்கே பாறைக்குழிகளில் கொட்டப்பட்... மேலும் பார்க்க

'இயற்கை விவசாயம் இந்தியாவுக்குத் தேவை' இந்திரா காந்தி பார்த்த அதே வேலையை, திருப்பிப் போட மோடி தயாரா?

அனைவருக்கும் பசுமை வணக்கம்“இயற்கை விவசாயம், என் இதயத்துக்கு நெருக்கமானது; இயற்கை வேளாண்மை, இந்த நூற்றாண்டின் தேவை; அதிநவீன ரசாயனங்கள், நம் மண்ணின் வளத்துக்குக் கேடு விளைவிக்கின்றன... செலவுகளையும் அதிக... மேலும் பார்க்க