செய்திகள் :

"தமிழ்நாடு தனித்து நிற்கிறதா?"- ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சிற்கு திமுக அமைச்சர் ரகுபதி சொன்ன பதில்!

post image

"தமிழ்நாடு தனித்து விடப்பட்டிருக்கிறது, யாருடனும் இணையவில்லை" என்றும் "திராவிடம் என்பது கற்பனை, தமிழ்நாட்டில் பீகாரிகள் அச்சுறுத்தப்பட்டனர், தமிழ்நாட்டில் மொழி சிறுபான்மையினரின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன" என்றும் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியிருக்கும் திமுக அமைச்சர் ரகுபதி, "திராவிடம் என்பது கற்பனை என்றால், நம் தேசிய கீதத்தில் திராவிடம் இடம்பெற்றிருக்கிறது என்பது ஆளுநர் ரவிக்கு தெரியாதா?

ஒடிசாவில் தேர்தல் வந்தபோது, ’ஒடிசாவை ஒரு தமிழன் ஆள வேண்டுமா? ஒடிசாவின் சாவி தமிழ்நாட்டில் இருக்கிறது’ என தமிழர்களை திருடர்கள் என்பது போல் குற்றச்சாட்டை முன்வைத்து அமித் ஷாவும், மோடியும் பிரசாரம் செய்தனர். அதேபோல், பீகார் தேர்தல் பிரசாரத்தில், தமிழ்நாட்டில் இருக்கும் பீகாரிகள் அச்சுறுத்தப்படுகிறார்கள் என்றெல்லாம் பொய்யான கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டனர்.

திமுக அமைச்சர் ரகுபதி

தமிழ்நாட்டில் பிறமொழி பேசும் பிற மாநிலத்தவர்கள், பீகார் மக்கள் யாரும் அச்சுறுத்தப்படவில்லை. ஆளுநர்தான் தொடர்ந்து அவதூறு பேசிவருகிறார். ஆளுநரும், ஒன்றிய பாஜக-வும், எங்குச் சென்றாலும், தமிழருக்கு எதிராக பேசுவதை கொள்கையாக கொண்டுள்ளனர்.

மீனவர்களுக்காக நாங்கள் ஒன்றும் செய்யவில்லை என ஆளுநர் கூறியுள்ளார். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் போது, பிரதமரோ, உள்துறை அமைச்சரோ, ஆளுநரோ ஒரு அறிக்கை வெளியிட்டிருப்பார்களா?

தமிழ்நாடு தனித்து நிற்கிறது என ஆளுநர் சொல்லியுள்ளார். தமிழ்நாட்டில் அவதூறு பரப்புவதற்காக அனுப்பப்பட்டவர் ஆளுநர் ஆர்.என். ரவி. தமிழ்நாடு தனித்து விடப்பட்டிருக்கிறது, யாருடனும் இணையவில்லை என தவறான தகவலை பரப்பி வருகிறார்.

தனித்தமிழ்நாடு கோரிக்கையை அண்ணா முன்வைத்தார். ஆனால், இந்தியாவுடன் சேர்ந்து இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அது கைவிடப்பட்டு, 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தியாவுடன் சேர்ந்து ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சிக்காக பெரும் பங்காற்றியிருக்கிறது தமிழ்நாடு. நாங்கள் இந்தியாவுடன் தான் இருக்கிறோம் 

திமுக அமைச்சர் ரகுபதி

ஆர்.என்.ரவி பாஜக அலுவலகமான கமலாலயத்தில் வேலைக்காக சேர்ந்திருக்க வேண்டியவர். ஆனால் தமிழ்நாட்டின் ஆளுநராக வந்திருக்கிறார். இங்கிருந்து கொண்டு தொடர்ந்து அவதூறுகளையும், தமிழ்நாட்டுக்கு எதிராகவும் பேசி வருகிறார்.

இனி ஆளுநர் மசோதாக்களை கால தாமதப்படுத்தினால் நாங்கள் நீதிமன்றத்தை அணுகுவோம்" என்று பேசியிருக்கிறார் ரகுபதி.

Fastag-ஐ எந்தப் பிரச்னையும் இல்லாமல் பயன்படுத்த, `இது' ரொம்ப முக்கியம் - உடனே பண்ணிடுங்க! | How to?

சில நேரங்களில் ஃபாஸ்ட் டேக் ஸ்கேன் செய்யும்போது, வேலை செய்யாமல் போய் விடுகிறது. இதனால், டோல்கேட்டில் தேவையில்லாத டென்சன் ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், 'KYV (Know Your Vehicle)' அப்டேட் செய்யாமல்... மேலும் பார்க்க

திருப்பூர்: மலை போல குவியும் குப்பைகள்; அகற்ற முடியாமல் திணறும் மாநகராட்சி - பிரச்னை என்ன?

திருப்பூர் மாவட்டத்தில் சமீபத்தில் திடக்கழிவு மேலாண்மையில் பெரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.முன்னதாக, திருப்பூர் மாநகராட்சி முழுவதும் சேகரிக்கப்படும் குப்பைகள் முன்பு ஆங்காங்கே பாறைக்குழிகளில் கொட்டப்பட்... மேலும் பார்க்க

'இயற்கை விவசாயம் இந்தியாவுக்குத் தேவை' இந்திரா காந்தி பார்த்த அதே வேலையை, திருப்பிப் போட மோடி தயாரா?

அனைவருக்கும் பசுமை வணக்கம்“இயற்கை விவசாயம், என் இதயத்துக்கு நெருக்கமானது; இயற்கை வேளாண்மை, இந்த நூற்றாண்டின் தேவை; அதிநவீன ரசாயனங்கள், நம் மண்ணின் வளத்துக்குக் கேடு விளைவிக்கின்றன... செலவுகளையும் அதிக... மேலும் பார்க்க

``டிசம்பர் 15-க்குள் திருந்தவில்லை என்றால் திருத்தப்படுவீர்கள்'' - நாள் குறித்த ஓ.பன்னீர்செல்வம்

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி அதிமுகவில் அதிகாரப்போட்டி பல முனைகளில் சூடுபிடித்திருக்கிறது.ஏற்கனவே ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் பழனிச்சாமியை எதிராக நிற்க, இப்போது மூத்த தலைவர் ... மேலும் பார்க்க

``ஓபிஎஸ் தலைமையில் புதிய கட்சி உருவாகிறதா?'' - அதிமுக வைத்திலிங்கம் எச்சரிக்கை

அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு கெடுவும் விதித்திருந்தார். அதிமுகவில் இருந... மேலும் பார்க்க

``தனியாக ஒரு பெண் ஏன் அங்க போகணும்?'' - கோவை பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து பிரேமலதா விஜயகாந்த்

கடந்த நவ. 2ம் தேதி இரவு 11 மணியளவில், 20 வயது மாணவி கோவை விமான நிலையம் பின்புற பகுதியில் தனது காதலனுடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.அப்போது அங்கு 3 பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தில் வந்த... மேலும் பார்க்க