செய்திகள் :

`தமிழ்நாடு,கேரளாவுக்கு பட்டை நாமம்; இரயில்வே துறையில் வஞ்சகம் செய்யும் பாஜக' - எம்.பி சு.வெ காட்டம்

post image

தமிழ்நாட்டிற்கும், கேரளாவுக்கும் பாஜக அரசு இரயில்வே துறையில் வஞ்சகம் செய்வதாக சு.வெங்கடேஷன் எம்.பி தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " 2024-25 ஆம் ஆண்டில் புதிய வழித்தடத்திற்கு ரூ.31,458 கோடி ஒதுக்கப்பட்டது.

அதில் இதில் தெற்கு இரயில்வேக்கு ஒதுக்கப்பட்டதோ வெறும் 301 கோடி. அதவாது ஒரு சதவிகிதம் மட்டுமே.

இரயில்வே துறை
இரயில்வே துறை

பாஜக ஆளும் மாநிலங்களுக்கு பல்லாயிரம் கோடி. ஆனால் தமிழ்நாடு, கேரளாவுக்கு பட்டை நாமம்" என்று பதிவிட்டிருக்கிறார்.

மேலும் மத்திய இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிற்கும் சில கோரிக்கைளை முன் வைத்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், " மூத்த குடிமக்களுக்கான ரயில் பயணச்சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். 2020ல் நிறுத்தப்பட்ட இந்த சலுகையினால் மூத்தோர் மருத்துவம் மற்றும் திருத்தலப் பயணங்களை மேற்கொள்ள முடியாமல் திணறுகின்றனர்.

அதே நேரத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட பயணக்கட்டண சலுகைகளும், அபராத ரத்து செய்யும் முடிவுகளும் கேள்விக்குறியாக உள்ளன.

பிங்க் புத்தகத்தை மீண்டும் வெளியிட வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளாக பிங்க் புத்தகம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடியும் வரை வெளியிடப்படாததால், மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு வெளிப்படையான தகவல் கிடைக்கவில்லை.

இரயில்வே துறை
இரயில்வே துறை

தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் புதிய ரயில் பாதைகளுக்கு கடுமையான புறக்கணிப்பு நடைபெறுகிறது. பட்ஜெட்டில் புதிய பாதைகளுக்கு ரூ.31,458 கோடி ஒதுக்கப்பட்டாலும், தெற்கு ரயில்வேக்கு அதில் வெறும் ஒரு சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் இரண்டாவது முனையம் அமைப்பது அவசியம். கோயம்புத்தூர் ப்ளாட்ஃபாரங்கள் மிகுந்த நெரிசலுடன் செயல்பட்டு வருவதால் போத்தனூரை இரண்டாவது முனையமாக மாற்ற வேண்டும்.

அதேபோன்று மதுரை கூடல் நகரிலும் இரண்டாவது ரயில் முனையத்தை உருவாக்க வேண்டும்.

ரயில் பாதுகாப்பை உறுதி செய்ய இன்டர்லாக் செய்யாத கேட்டுகளை உடனடியாக இன்டர்லாக் கேட்களாக மாற்றுவதற்கு போதிய நிதி வழங்க வேண்டும். செம்மங்குப்பத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பள்ளி குழந்தைகள் உயிரிழப்பு விபத்து போன்றவை இன்டர்லாக் கேட் இல்லாததாலேயே நடக்கின்றன.

அஷ்வினி வைஷ்ணவ் - மத்திய இரயில்வே அமைச்சர்
அஷ்வினி வைஷ்ணவ் - மத்திய இரயில்வே அமைச்சர்

கொல்லம்–நாகூர் விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும், தெற்கு ரயில்வேயில் உள்ள ஆயிரக்கணக்கான காலியிடங்களை நிரப்ப அனுமதி வழங்க வேண்டும்.

இறுதியாக மதுரையிலிருந்து மேலும் பல பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறார்.

`அதிமுக - தேமுதிக; வெறும் ராஜ்ய சபா சீட்டுக்காக கூட்டணியா?' - தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி கூட்டணி குறித்த விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன.அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில் இரண்டு கட்சிகளும் தேர்தலுக்கான வியூகங... மேலும் பார்க்க

கோவை செம்மொழிப் பூங்கா திறப்பு - என்னென்ன வசதிகள் தெரியுமா?

கோவை காந்திபுரம் பகுதியில் செம்மொழிப் பூங்கா கட்டுவதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 2023-ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 165 ஏக்கர் நிலப்பரப்பில் பூங்கா அமைக்க மு... மேலும் பார்க்க

இறுதிச்சடங்கில் கவிழ்ந்த வாகனம்; `சுடுகாட்டுக்கு சாலை' கேட்டு தொடர்ந்து போராடும் கிள்ளியூர் மக்கள்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்தில் உள்ள கிள்ளியூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் சமூக மக்கள் பயன்படுத்தும் சுடுகாட்டிற்கான பாதை கடந்த 20 ஆண்டுகளாக அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், இறந்தவர்களின் உடலை ச... மேலும் பார்க்க

``234 தொகுதியிலும் தே.மு.தி.க வலுவாக இருக்கிறது” - சொல்கிறார் பிரேமலதா விஜயகாந்த்

2026 - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அரசியல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். 'உள்ளம் தேடி இல்லம் நாடி' என்ற பெயரில் தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா வி... மேலும் பார்க்க

TVK : ஸ்கெட்ச் போடும் தவெக; ஆழ்ந்த யோசனையில் செங்கோட்டையன்? விஜய்யுடன் இணைகிறாரா? - பரபர பின்னணி

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன் விஜய்யின் தவெகவில் இணையப்போவதாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. உண்மை என்ன என்பதை அறிய பனையூர் வட்டாரத்தினர் சிலரிடம் பேசினோம்.விஜய்விஜய... மேலும் பார்க்க

`இந்த போன்ல தான் வேலை செய்கிறீர்களா?’ பட்டன்போனை தூக்கிப்போட்ட குமரி கலெக்டர்; கொதிக்கும் VAO-க்கள்

கிராம நிர்வாக அலுவலர்களை கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா ஒருமையில் பேசி அவமானப்படுத்துவதாகவும், செல்போனை தூக்கி வீசியதாகவும், இதனால் மன உளைச்சலில் உள்ள வி.ஏ.ஓ-க்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டு... மேலும் பார்க்க