செய்திகள் :

இன்ஸ்டாவில் திருமண பதிவுகள் நீக்கம் - காதலன் ஏமாற்றியதால் திருமணத்தை நிறுத்தினாரா ஸ்மிருதி மந்தனா?

post image

கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனது நீண்ட நாள் காதலன் பலாஷ் முச்சல் என்பவரை மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலியில் திருமணம் செய்து கொள்ள இருந்தார். இருவருக்கும் ஏற்கனவே திருமணம் நிச்சயமாகி இருந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடக்க இருந்த திருமணம் திடீரென நின்று போனது.

ஸ்மிருதியின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதால்தான் இத்திருமணம் நின்றுபோனதாக செய்தி வெளியானது. இந்த நிலையில் ஸ்மிருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து திருமணம் தொடர்பான அனைத்து பதிவுகளையும் நீக்கியுள்ளார். அவரது திருமண முன்மொழிவு வீடியோ, நிச்சயதார்த்த புகைப்படங்கள் மற்றும் சங்கீத் படங்கள் என அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன.

இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உண்மையில் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால்தான் திருமணம் நின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் பலரும் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். வட இந்திய ஊடகங்களும் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகிறது. எனினும் சம்பந்தபட்டவர்கள் கூறினால் தான் எது உண்மை என்பது தெரிய வரும்.

மந்தனா இன்ஸ்டாகிராமில் இருந்து திருமணம் தொடர்பான அனைத்து பதிவுகளையும் நீக்கியவுடன், நெட்டிசன்கள் இது குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளனர். ஒரு பதிவில், "ஏதோ பெரிய விஷயம் நடந்திருந்தால் தவிர, இதை அவர் நீக்கி இருக்க முடியாது" என்று கூறினார்.

உண்மையில் பலாஷ் தனது காதலி மந்தனாவை ஏமாற்றியதாக சமூக வலைத்தளத்தில் ஒரு செய்தி பரவி இருக்கிறது. திருமண வேலைகளை செய்து கொண்டிருந்த பெண் நடன இயக்குனருடன் பலாஷிற்கு தொடர்பு இருப்பதாக சில பதிவுகள் கூறுகிறது. மேலும் பலாஷ் அப்பெண்ணுடன் சாட்டிங் செய்த விபரமும் சமூக வலைத்தள பக்கத்தில் பரவி வருகிறது. அது உண்மையாதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அது உண்மையாக இருந்தாலும், அவர்கள் எப்போது இது போன்ற சாட்டிங்கில் ஈடுபட்டனர் என்ற தகவல்களும் உறுதி செய்யப்படவில்லை. திருமணத்திற்கு முந்தைய நாள் இந்த சாட்டிங் விபரம் வெளியில் கசிந்து இருக்கிறது என்பது கவனிக்கதக்கது.

ரெடிட்(Reddit) தளத்தில் தான் இந்த சாட்டிங் வெளியானது. இது குறித்து அத்தளத்தில் இருப்பவர்கள் அதிகமாக விவாதித்துள்ளனர். அதில் ஒருவர், `பலாஷ் தனது நிச்சயதார்த்தத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்பு ஒரு பெண்ணை முத்தமிட்டதாகக் கூறியுள்ளார். நடன ஒத்திகையின் போது இந்த சம்பவத்தை அவர்கள் கவனித்ததாக பல பெயர் குறிப்பிடப்படாதவர்கள் தெரிவித்தனர். ஒரு பயனர், "அவர்கள் இருவரையும் மக்கள் ஒன்றாக பார்த்தனர். இது ஒரு முறை நடந்த நிகழ்வு அல்ல" என்று மற்றொருவர் தெரிவித்துள்ளார்.

இருவரும் பகிர்ந்து கொண்ட சாட்டிங்கில் பலாஷ் அப்பெண்ணை வெகுவாக புகந்து பேசுகிறார். அதோடு தன்னுடன் நீச்சல் குளம், ஸ்பா மற்றும் ஜுகு கடற்கரைக்கு வரும்படி அவர் கேட்கிறார்.

பலாஷ் தாயார் சொல்வது என்ன?

இதற்கிடையே பலாஷும் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் மும்பைக்கு கொண்டு வரப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து அவரது தாயார் அமிதா கூறுகையில், ''எனது மகனுக்கு மந்தனாவின் தந்தையுடன் மிகவும் நெருக்கம். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில் இருந்து மருத்துவமனையிலேயே இருந்தான். அவன் மருத்துவமனையில் நான்கு மணி நேரம் அழுதுகொண்டிருந்தான். இதனால் அவனது உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. அங்கேயே அவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். இப்போது மும்பைக்கு கொண்டு வந்து கோரேகாவ் மருத்துமனையில் சேர்த்திருக்கிறோம்'' என்று தெரிவித்தார்.

இதில் எது உண்மை என்பது குறித்து இருவரும் இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.!

திருக்கார்த்திகை: சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி | Photo Album

சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சிசென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சிசென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சிசென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சிசென்னை பூம்புகாரில் ... மேலும் பார்க்க

Yaodong: 4 கோடி சீனர்கள் வசிக்கும் 'ரகசிய' குகை வீடுகள் - வியக்க வைக்கும் பின்னணி

உலகம் முழுவதும் நவீன கட்டுமான முறைகளைத் தேடி வரும் நிலையில் சீனாவின் 4,000 ஆண்டுகள் பழைமையான 'யாவ்டோங்' (Yaodong) எனப்படும் குகை வீடுகளில் இன்றும் மக்கள் வசித்து வருவது பற்றித் தெரியுமா? தொழில்நுட்பங்... மேலும் பார்க்க

தண்ணீருக்கு பதில் ஆசிட் ஊற்றி சமையல்; சாப்பிட்ட 6 பேர் கவலைக்கிடம் - போலீஸார் விசாரணை

மேற்கு வங்க மாநிலம் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள கட்டால் என்ற கிராமத்தில் வசிக்கும் சந்து சன்யாசி குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர், வீட்டில் உணவு சாப்பிட்டவுடன் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். அவர்கள் உ... மேலும் பார்க்க

``கனவில் வந்து கடவுள் சொன்னார்'' - காளி சிலைக்கு மேரி மாதா அலங்காரம் செய்த பூசாரி

மும்பை செம்பூர் வாசிநாக்கா பகுதியில் மிகவும் பிரபலமான காளி மாதா கோயில் உள்ளது. கோயிலுக்கு பக்தர்கள் காலை நேரத்தில் சாமி கும்பிட வந்தபோது கருவறையில் இருந்த காளிதேவியின் சிலையை பார்த்து அதிர்ச்சியடைந்தன... மேலும் பார்க்க

`ஆக்கிரமிப்பு' - வங்கி படிக்கட்டுகளை இடித்து தள்ளிய அதிகாரிகள்; ஏணியில் ஏறி சென்ற வாடிக்கையாளர்கள்

ஒடிசா மாநிலம் பத்ராக் நகரில் சட்டவிரோத கட்டுமானங்களை உள்ளாட்சி நிர்வாக ஊழியர்கள் இடித்தனர். அவர்கள் அங்குள்ள சரம்பா மார்க்கெட்டில் இருந்து ரயில் நிலையம் வரையுள்ள பகுதியில் இருந்த சட்டவிரோத கடைகள், தற்... மேலும் பார்க்க

முதுமலை: ஆடு மேய்க்கச் சென்ற பழங்குடி பெண், இழுத்துச் சென்ற‌ புலி; அதிர்ச்சி சம்பவம்

நீலகிரி மாவட்டம் மாவனல்லா பகுதியைச் சேர்ந்தவர் 60 வயதான நாகியம்மாள். பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த இவர் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வந்திருக்கிறார். புலிகள் காப்பகத்தின் வெளி மண்டலப் பகுதிகளில் ஆடுகளை மேய... மேலும் பார்க்க