செய்திகள் :

``கனவில் வந்து கடவுள் சொன்னார்'' - காளி சிலைக்கு மேரி மாதா அலங்காரம் செய்த பூசாரி

post image

மும்பை செம்பூர் வாசிநாக்கா பகுதியில் மிகவும் பிரபலமான காளி மாதா கோயில் உள்ளது. கோயிலுக்கு பக்தர்கள் காலை நேரத்தில் சாமி கும்பிட வந்தபோது கருவறையில் இருந்த காளிதேவியின் சிலையை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். வழக்கமான அலங்காரம் போன்று இல்லாமல் வித்தியாசமாக இருந்தது.

குறிப்பாக காளி சிலைக்கு மேரி மாதா போன்று அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதனை பார்த்த பக்தர்கள் உடனே இது குறித்து கோயிலில் இருந்த பூசாரியிடம் விசாரித்தனர்.

அதற்கு அந்த பூசாரி, தனது கனவில் காளி வந்து மேரி மாதா போன்று தன்னை அலங்கரிக்கும்படி கேட்டுக்கொண்டார் என்று விளக்கம் அளித்தார். அதோடு மேரி மாதா போன்று தனக்கு காட்சியளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால் அவரது பதிலில் திருப்தியடையாத பக்தர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் சில இந்து அமைப்புகளின் பிரதிநிதிகளும் சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேரி மாதா உருவத்தில் காளி சிலை
மேரி மாதா உருவத்தில் காளி சிலை

அவர்கள் அனைவரும் கோயில் பூசாரி ரமேஷுடன் வாக்குவாதம் செய்து அவரை அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று ஒப்படைத்தனர். யாரோ ஒருவர் சொல்லித்தான் இது போன்று ரமேஷ் நடந்து கொண்டுள்ளார் என்றும், அவரின் செயல் மதநல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்றும் தெரிவித்தனர்.

காளிசிலை மேரி மாதா போன்று அலங்கரிக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி இருக்கிறது. அதனை பார்த்ததும் நெட்டிசன்கள் பலரும் இச்செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து பதிவுகளை பகிர்ந்துள்ளனர்.

`ரமேஷ் யாராவது சொல்லி இது போன்று செய்தாரா என்று இன்னும் உறுதிபடுத்தவில்லை' என்று தெரிவித்துள்ள போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் அவரை இவ்வழக்கில் கைது செய்த போலீஸார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட் அவரை இரண்டு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

`ஆக்கிரமிப்பு' - வங்கி படிக்கட்டுகளை இடித்து தள்ளிய அதிகாரிகள்; ஏணியில் ஏறி சென்ற வாடிக்கையாளர்கள்

ஒடிசா மாநிலம் பத்ராக் நகரில் சட்டவிரோத கட்டுமானங்களை உள்ளாட்சி நிர்வாக ஊழியர்கள் இடித்தனர். அவர்கள் அங்குள்ள சரம்பா மார்க்கெட்டில் இருந்து ரயில் நிலையம் வரையுள்ள பகுதியில் இருந்த சட்டவிரோத கடைகள், தற்... மேலும் பார்க்க

முதுமலை: ஆடு மேய்க்கச் சென்ற பழங்குடி பெண், இழுத்துச் சென்ற‌ புலி; அதிர்ச்சி சம்பவம்

நீலகிரி மாவட்டம் மாவனல்லா பகுதியைச் சேர்ந்தவர் 60 வயதான நாகியம்மாள். பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த இவர் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வந்திருக்கிறார். புலிகள் காப்பகத்தின் வெளி மண்டலப் பகுதிகளில் ஆடுகளை மேய... மேலும் பார்க்க

நடிகர் தர்மேந்திரா உடல் மும்பையில் தகனம்: பிரதமர், தலைவர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் இரங்கல்

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா இன்று காலை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது மரணம் குறித்து மதியம்தான் செய்தி வெளியானது. இறுதிச்சடங்குக்கு ஆம்புலன்ஸ் வந்த பிறகுதான் அவரது மரணம் குறித்து தெ... மேலும் பார்க்க

அப்போலோ: தமிழ்நாட்டின் முதல் பார்கின்சன் நோய், ஆழ்மூளைத் தூண்டுதல் (DBS) சிறப்பு சிகிச்சை மையம்

அப்போலோ மருத்துவமனை கிரீம்ஸ் லேன்: தமிழ்நாட்டின் முதல் பார்கின்சன் நோய் மற்றும் ஆழ்மூளைத் தூண்டுதல் (DBS) ஆகியவற்றுக்கான சிறப்பு சிகிச்சை மையத்தைத் தொடங்கியிருக்கிறது!தமிழ்நாட்டின் மருத்துவ சுகாதாரத் ... மேலும் பார்க்க

டைட்டானிக் கப்பல் விபத்தில் இறந்தவர் அணிந்திருந்த தங்கக் கைக்கடிகாரம் ஏலம்; எவ்வளவு தெரியுமா?

1912-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி தனது முதல் பயணத்தை ஆயிரக்கணக்கான பயணிகளுடன் தொடங்கிய கப்பல் டைட்டானிக்.பயணத்தை ஆரம்பித்த சில தினங்களிலேயே வட அட்லாண்டிக்கில் பனிப் பாறையில் மோதி கடலில் மூழ்கியது. இதில்... மேலும் பார்க்க

Portrait of Elisabeth Lederer: கிட்டத்தட்ட ரூ.2000 கோடிக்கு ஏலம் போன ஒற்றை ஓவியம் - என்ன ஸ்பெஷல்?

கலை உலகம் இதுவரை எத்தனை எத்தனையோ உலக சாதனைகள் படைத்திருக்கிறது. அந்த வரிசையில் வரலாற்றில் முதன் முதலில் சுமார் 1,972 கோடிக்கு ஏலம் விடப்பட்ட 'Portrait of Elisabeth Lederer' என்ற ஓவியத்தை பற்றிய சில சு... மேலும் பார்க்க