Fastag-ஐ எந்தப் பிரச்னையும் இல்லாமல் பயன்படுத்த, `இது' ரொம்ப முக்கியம் - உடனே பண...
திருவண்ணாமலையில் ராசி தீப வழிபாடு; நீண்ட ஆயுள்; நீங்காத ஆரோக்கியம் செல்வம் தரும்; ஏன் தெரியுமா?
திருவண்ணாமலையில் ராசி தீப வழிபாடு! நீண்ட ஆயுள்; நீங்காத ஆரோக்கியம் செல்வம் தரும்! ஏன் தெரியுமா! தீப நாளில் திருவண்ணாமலையில் உங்களால் விளக்கேற்றி வழிபட முடியவில்லை என்று வருந்துபவர்களுக்கான வாய்ப்பு இதோ. டிசம்பர் 3 - ம் தேதி அம்மணி அம்மன் ஆலயத்தில்!
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07
வழிபாட்டில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

அன்றாடம் தீபம் ஏற்றி வழிபட்டால் சுபம், ஆயுள், ஆரோக்கியம், நன்மை, ஐஸ்வர்யம், கீர்த்தி, தனசேர்த்தி, நல்லபுத்தி ஆகியவை பெருகும் என்கிறது பூஜாபத்தி நூல்கள். எங்கு ஒளியோடு வழிபாடு நடக்கிறதோ அங்கு வேண்டுதல்கள் நிறைவேறும். விளக்கின் அடியே பிரம்மா, விளக்கின் தண்டு பாகத்தில் மகாவிஷ்ணு, விளக்கில் எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர் என்பது ஐதிகம். யார் தீபத்தை ஏற்றி வைக்கிறாரோ அவரது வாழ்க்கையில் உள்ள இருள் விலகி ஷாந்தியும் சௌக்கியமும் நிலவும் என்பது பெரியோர் வாக்கு. அதிலும் தீபம் முதலில் பெரும் ஒளியாக எழுந்த திருவண்ணாமலையில் தீபம் ஏற்றி வழிபட்டால் அவர்களின் 21 தலைமுறைகளுக்கும் நல்லதே நடக்கும் என்பது நம்பிக்கை.
திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை நாளில் ஈசனை எண்ணி ஈசனின் வடிவாகவே உள்ள மலையை நோக்கி தீபமேற்றி வழிபட்டால் எண்ணியவை யாவும் நிறைவேறும். நேர்மறை ஆற்றலும் செல்வமும் பெருகும் என்பது நம்பிக்கை. ஆள் செய்யாததை நாள் செய்யும் என்பார்கள். திருக்கார்த்திகை நாளில் விளக்கேற்றி வழிபட தடைபட்ட காரியங்கள் உடனே நிறைவேறும். இந்த நாளில் குபேரன் ஈசனை வழிபடும் நாள் என்பதால் அதே நாளில் விளக்கேற்றி வழிபட நம் வாழ்வில் செல்வ வளம் பெருகும். குறிப்பாக வியாபாரம், தொழில் செய்பவர்கள் கார்த்திகை தீப நாளில் விளக்கேற்றி வழிபடுவதால் தொழில் வளர்ச்சி அடைந்து, செல்வ வளம் பெருகும்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07
வழிபாட்டில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
லட்சக்கணக்கான மக்கள் திருவண்ணாமலையில் கார்த்திகை தீப நாளில் கூடி வழிபடுவதால் பெரும் நேர்மறை ஆற்றல் அங்கு எதிரொலிக்கும். இவ்வேளையில் தெய்வ சக்திகளின் அதிர்வு மேலோங்கி, தீய சக்திகளின் ஆற்றல் வீழும். இதனால் அங்கு சொல்ல முடியாத அளவுக்கு தெய்விக உணர்வு ஒவ்வொருவருக்குள்ளும் எழும். இவ்வேளையில் தீபத்தின் ஒளி தீய சக்திகளை அகற்றும். இதனால் உங்கள் மனதில் நன்மை மற்றும் நிம்மதி மேம்படும். மேலும் அமைதி மற்றும் ஆன்மிக முன்னேற்றம் அதிகரிக்கும். இதனாலேயே திருவண்ணாமலையில் கார்த்திகை தீப நாளில் அத்தனை கூட்டம் கூடுகிறது எனப்படுகிறது.
தீப நாளில் திருவண்ணாமலையில் உங்களால் விளக்கேற்றி வழிபட முடியவில்லை என்று வருந்துபவர்களுக்கான வாய்ப்பு இதோ...
அக்கினி தலமான திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா வரும் 2025 டிசம்பர் 3-ம் நாள் புதன்கிழமை மாலை 5 மணிக்கு கொண்டாடப்படவுள்ளது. இந்த புண்ணிய நாளில் நீங்களும் உங்கள் தலைமுறைகளும் நலமும் வளமும் பெற உங்கள் சக்தி விகடனும் திருவண்ணாமலை அம்மணி அம்மன் ஜீவசமாதி சமாதி ஆலயமும் இணைந்து உங்களுக்காக ராசி தீபம் ஏற்றவுள்ளது. அதோடு ராசி தீப வழிபாட்டில் பதிவு செய்யும் ஒவ்வொரு நபரின் ராசிக்கும் சிறப்பு தீபம் ஏற்றி, அபூர்வ ஸ்படிக லிங்க அபிஷேக வழிபாடு செய்யப்படும். இதனால் உங்கள் கவலைகளும் அச்சங்களும் நீங்கி வாழ்வில் புதிய இன்பம் பெருகும். 3-12-25 கார்த்திகை தீப நாளில் அம்மணி அம்மன் கோயிலில் நடைபெறும் ராசி தீப வழிபாடு சங்கல்ப விழாவில் கலந்து கொண்டு உங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். உங்களின் அத்தனை வேண்டுதல்களும் நிறைவேற எல்லாம் வல்ல அருணாசலேஸ்வரர் நிச்சயம் அனுகிரகம் செய்வார்.

இந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டால் ஆயுளும் அபிவிருத்தியும் ஆரோக்கியமும் ஐஸ்வர்யமும் கூடும் என்பதும் நிச்சயம். மேலும் மங்கல காரியங்கள் யாவும் கைகூடும். தோஷங்கள் பாவங்கள் சாபங்கள் யாவும் நீங்கி வாழ்வில் முன்னேற்றமும் வளர்ச்சியும் கூடும் என்பது உறுதி. ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம், அபிவிருத்தி, மங்கல காரியங்கள் தடையின்றி நடக்க என்று எது வேண்டி இந்த வழிபாட்டில் கலந்து கொண்டாலும் நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. குறிப்பாக பொருளாதார ரீதியாக உங்களின் அத்தனை தேவைகளும் இந்த வேண்டுதலால் நிறைவேறும்.
குறிப்பு: உங்கள் தெளிவான முகவரியை குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07

















