செய்திகள் :

டைட்டானிக் கப்பல் விபத்தில் இறந்தவர் அணிந்திருந்த தங்கக் கைக்கடிகாரம் ஏலம்; எவ்வளவு தெரியுமா?

post image

1912-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி தனது முதல் பயணத்தை ஆயிரக்கணக்கான பயணிகளுடன் தொடங்கிய கப்பல் டைட்டானிக்.

பயணத்தை ஆரம்பித்த சில தினங்களிலேயே வட அட்லாண்டிக்கில் பனிப் பாறையில் மோதி கடலில் மூழ்கியது. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.

டைட்டானிக்
டைட்டானிக்

இந்தச் சம்பவத்தை மையப்படுத்தி, ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் 'டைட்டானிக்' படத்தை இயக்கியிருந்தார்.

இந்தப் படம் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. இதனிடையே அந்தக் கப்பலில் பயணித்தவர்களின் உடைமைகள் மீட்கப்பட்டு அவ்வப்போது ஏலத்துக்கு விடப்படுகின்றன.

அந்த வகையில் அமெரிக்க தொழிலதிபரான இசிடோர் ஸ்ட்ராஸ் என்ற பயணியின் 18 கேரட் தங்கக் கடிகாரம் ஒன்று இங்கிலாந்தின் வில்ட்ஷயர் நகரில் ஏலத்துக்கு விடப்பட்டிருக்கிறது.

இந்தக் கடிகாரம் சுமார் ரூ.20.7 கோடிக்கு விற்கப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

டைட்டானிக் கப்பல் விபத்தில் உயிரிழந்தவரின் தங்கக் கைக்கடிகாரம்
டைட்டானிக் கப்பல் விபத்தில் உயிரிழந்தவரின் தங்கக் கைக்கடிகாரம்

இது டைட்டானிக் கப்பல் தொடர்பான நினைவுப் பொருட்களில் விற்கப்பட்ட அதிகபட்ச ஏலத்தொகை ஆகும்.

இதன்மூலம் டைட்டானிக் தொடர்பான மொத்த ஏலத்தொகை ரூ.35 கோடியைத் தாண்டியதாக Hentry Aldridge and son ஏல நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

Portrait of Elisabeth Lederer: கிட்டத்தட்ட ரூ.2000 கோடிக்கு ஏலம் போன ஒற்றை ஓவியம் - என்ன ஸ்பெஷல்?

கலை உலகம் இதுவரை எத்தனை எத்தனையோ உலக சாதனைகள் படைத்திருக்கிறது. அந்த வரிசையில் வரலாற்றில் முதன் முதலில் சுமார் 1,972 கோடிக்கு ஏலம் விடப்பட்ட 'Portrait of Elisabeth Lederer' என்ற ஓவியத்தை பற்றிய சில சு... மேலும் பார்க்க

புனே: தெருவில் கேட்பாரற்று கிடந்த ரூ.10 லட்சம்; உரியவரிடம் ஒப்படைத்த பெண் தூய்மைப் பணியாளர்!

தெருவில் எதாவது பொருள் கிடந்தால் உடனே எடுத்து பாக்கெட்டில் போட்டுக்கொள்வது வழக்கம். அதுவும் பணம் என்றால் ஒரு ரூபாய் கிடந்தால் கூட விடமாட்டார்கள். ஆனால் புனேயில் தெருவில் கேட்பாரற்று கிடந்த ரூ.10 லட்சத... மேலும் பார்க்க

கேரளா: திருமண நாளில் மணமகளுக்கு விபத்து; மருத்துவமனையில் வைத்து தாலி கட்டிய இளைஞர்!

கேரள மாநிலம் ஆலப்புழா தும்போளியைச் சேர்ந்த மனுமோன்- ரஷ்மி தம்பதியின் மகன் ஷரோன். சேர்த்தலா கே.வி.எம் பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக உள்ளார், ஷாரோன். இவருக்கும் கொம்மாடி முத்தலச்சேரியைச் சேர... மேலும் பார்க்க

McDonald's: '40 ஆண்டுகளாக எங்களுடன்' - இந்திய வம்சாவளி ஊழியருக்கு ரூ. 35 லட்சம் பரிசளித்த நிர்வாகம்

அமெரிக்காவில் உள்ள மெக்டொனால்ட்ஸ் (McDonald's) உணவகத்தில் 40 ஆண்டுகளாகப் பணியாற்றிய இந்திய வம்சாவளி ஊழியர் ஒருவருக்கு, சுமார் 35 லட்சம் ரூபாய் வெகுமதி அளித்து கௌரவிக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்பட... மேலும் பார்க்க

Japan: "வேலையை முடிக்காமல் வீட்டுக்குப் போக முடியாது" - ஜப்பானிலுள்ள இந்த வினோத கஃபே பற்றி தெரியுமா?

நம்மில் பலருக்கும் ஒரு பழக்கம் இருக்கும். எதுவாக இருந்தாலும், "நாளை பார்த்துக்கொள்ளலாம்" என்று வேலையைத் தள்ளிப்போடுவது. இப்படி உள்ளவர்களுக்கென்றே ஜப்பானின் டோக்கியோ நகரில் ஒரு பிரத்யேக காபி ஷாப் திறக்... மேலும் பார்க்க

'யாரும் நினைத்து பார்க்காத ஒரு வாழ்க்கை' - 82 வயதில் ஸ்கூட்டரில் பறக்கும் மந்தாகினி

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரைச் சேர்ந்த 87 வயதான மந்தாகினி மூதாட்டி, தனது தங்கை உஷாவுடன் புத்துணர்வோடு ஸ்கூட்டரில் நகரை வலம்வரும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.... மேலும் பார்க்க