செய்திகள் :

கேரளா: திருமண நாளில் மணமகளுக்கு விபத்து; மருத்துவமனையில் வைத்து தாலி கட்டிய இளைஞர்!

post image

கேரள மாநிலம் ஆலப்புழா தும்போளியைச் சேர்ந்த மனுமோன்- ரஷ்மி தம்பதியின் மகன் ஷரோன். சேர்த்தலா கே.வி.எம் பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக உள்ளார், ஷாரோன். இவருக்கும் கொம்மாடி முத்தலச்சேரியைச் சேர்ந்த ஜெகதீஷ் - ஜோதி தம்பதியரின் மகள் ஆவணி-க்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆவணி சேர்த்தலா பிஷப்மூர் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவர்களது திருமணம் நேற்று முன்தினம் நடப்பதாக முடிவு செய்யப்பட்டது. திருமணத்திற்காக அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு, ஆலப்புழா சக்தி திருமண மண்டபத்தில் அதற்கான ஏற்பாடுகள் நடந்தன. நேற்று முன்தினம் மதியம் 12.15 மணி முதல் 12.30 மணிகுள் திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவந்தன. திருமண நாளன்று மணமகள் மேக்கப் போடுவதற்காக அதிகாலை தனது உறவினர்களான அனந்து, ஜைனம்மா ஆகியோருடன் காரில் குமரகம் நோக்கி புறப்பட்டார்.

மருத்துவமனையில் நடைபெற்ற திருமணம்

சேர்த்தலா குமரகம் சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது பள்ளிச்சிறை சூழப்பாலம் அருகே வைத்து இவர்களது கார் கட்டுப்பாட்டை இழந்ததை அடுத்து மரத்தில் மீது மோதி விபத்துக்குள்ளானது. காரில் இருந்த அனைவரும் காயமடைந்தனர். மணமகள் ஆவணி-யின் கை உடைந்ததுடன் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை அப்பகுதியினர் மீட்டு கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்தனர். ஆவணியின் முதுகில் ஆபரேஷன் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்

மணமகள் ஆவணிக்கு தாலிகட்டிய ஷாரோன்

அதே சமயம் அன்று காலையில் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக  மண்டபத்தில் உறவினர்கள் கூடினார்கள். இதை அடுத்து நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் திருமணம்  செய்வது என மணமகன் ஷாரோன் முடிவுசெய்தார் அதைத்தொடர்ந்து மருத்துவமனையில் வைத்து டாக்டர்கள் முன்னிலையில் ஆவணிக்கு தாலி கட்டினார் மணமகன் ஷாரோன். ஆவணிக்கு இப்போது அன்பும், ஆதரவும் தேவை என்பதால் அவருக்கு தாலி கட்டியதாக ஷாரோன் தெரிவித்தார். மேலும், ஆலப்புழாவில் திருமண மண்டபத்தில் வந்திருந்த அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டது.

McDonald's: '40 ஆண்டுகளாக எங்களுடன்' - இந்திய வம்சாவளி ஊழியருக்கு ரூ. 35 லட்சம் பரிசளித்த நிர்வாகம்

அமெரிக்காவில் உள்ள மெக்டொனால்ட்ஸ் (McDonald's) உணவகத்தில் 40 ஆண்டுகளாகப் பணியாற்றிய இந்திய வம்சாவளி ஊழியர் ஒருவருக்கு, சுமார் 35 லட்சம் ரூபாய் வெகுமதி அளித்து கௌரவிக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்பட... மேலும் பார்க்க

Japan: "வேலையை முடிக்காமல் வீட்டுக்குப் போக முடியாது" - ஜப்பானிலுள்ள இந்த வினோத கஃபே பற்றி தெரியுமா?

நம்மில் பலருக்கும் ஒரு பழக்கம் இருக்கும். எதுவாக இருந்தாலும், "நாளை பார்த்துக்கொள்ளலாம்" என்று வேலையைத் தள்ளிப்போடுவது. இப்படி உள்ளவர்களுக்கென்றே ஜப்பானின் டோக்கியோ நகரில் ஒரு பிரத்யேக காபி ஷாப் திறக்... மேலும் பார்க்க

'யாரும் நினைத்து பார்க்காத ஒரு வாழ்க்கை' - 82 வயதில் ஸ்கூட்டரில் பறக்கும் மந்தாகினி

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரைச் சேர்ந்த 87 வயதான மந்தாகினி மூதாட்டி, தனது தங்கை உஷாவுடன் புத்துணர்வோடு ஸ்கூட்டரில் நகரை வலம்வரும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.... மேலும் பார்க்க

ரயிலில் எலக்ட்ரிக் கெட்டில் மூலம் நூடுல்ஸ், தேநீர் தயாரித்த பெண்; வீடியோ - எச்சரிக்கும் ரயில்வே

நீண்ட தூர ரயில்களில் பயணிகள் மொபைல் போன் மற்றும் லேப்டாப்களை சார்ஜ் செய்து கொள்ள சார்ஜிங் பாயிண்ட் வைக்கப்பட்டுள்ளது. அதனை வேறு எந்த தேவைக்கும் பயன்படுத்தக்கூடாது. ரயிலில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கூ... மேலும் பார்க்க

"என்னை அடிக்கிறாங்க அப்பா" - மராத்தி பேசாததால் அடி; அவமானத்தில் மாணவர் தற்கொலை; தந்தை சொல்வது என்ன?

மும்பையில் வசிப்பவர்கள் கட்டாயம் மராத்தி பேச வேண்டும் என்ற கோரிக்கையை மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சி முன்வைத்தது. அவ்வாறு மராத்தி பேசாத கடைக்காரர்களை அக்கட்சியினர் அடித்த சம்பவங்களும் இதற்கு முன்பு... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: சித்ரவதை செய்த மாணவர்கள்; கண்டுகொள்ளாத ஆசிரியர்; 4ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த சோகம்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள நீர்ஜா மோடி பள்ளியில் 4வது வகுப்பு படித்து வந்த 9 வயது மாணவி அமைரா குமார் மீனா, பள்ளி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.காலை 11 மணிக்கு பள்ளி வக... மேலும் பார்க்க