'ஒரு முறை உங்களை தொட்டுக் கொள்ளட்டுமா'; அரவணைத்த மோகன்லால் - மூதாட்டி செய்த நெக...
Aval Awards: "எனக்கு பிடிச்ச படங்களுக்கு அவார்ட் கிடைச்சதில்ல" - அவள் விருதுகள் மேடையில் சினேகா
விகடனின் அவள் விருதுகள் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் அவள் ஐகான் விருது பெற்றார் சினேகா. அவருக்கு அவரது இயக்குநர் கரு.பழனியப்பன் விருதை வழங்கினார்.

விருது குறித்துப் பேசிய சினேகா, "முதலில் நான் கண்டிப்பா எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு டைரக்டர் பத்தி சொல்லணும். 'பார்த்திபன் கனவு' எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்தபடம். 2003ல அந்த படத்தின் கதையை அவர் எப்படி சொன்னாருன்னா, அப்ப எனக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு, மேஜர் ஆக்சிடென்ட். சினேகாவால ஆறு மாசம், எட்டு மாசம் எந்திரிக்கவே, நடக்கவே முடியாதுன்னு சொல்லிட்டு இருந்த நேரத்துல, அவர் மூணாவது நாள் ஹாஸ்பிட்டல்ல வராரு பாக்குறதுக்கு. ஞாபகம் இருக்கா சார்? 3வது நாள் வந்து ஹாஸ்பிட்டல்ல கதை சொல்ல வராரு. நான் படுத்துட்டு கதையை கேட்கிறேன். பேக் பிராப்ளம்னால அடிபட்டிருந்ததுனால என்னால உட்காரக்கூட முடியல.
கதை சொல்லிட்டாரு, ரொம்ப பிடிச்சிருந்துச்சு. இன் ஃபேக்ட் அந்த டைம்ல டுயல் ரோல் ஒரு ஹீரோயினுக்கு கிடைக்குதுன்னா மிகப் பெரிய விஷயமா நான் நினைக்கிறேன். கதை போகும்போது நான் சொல்றேன் சார் கிட்ட, "சார் என்ன நம்பிக்கையில என்கிட்ட இந்த கதை சொல்றீங்க? யாருமே ஆறு மாசம், எட்டு மாசம் வரையும் நடக்கவே முடியாதுன்னு சொல்றாங்க. நீங்க வந்து என்ன நம்பிக்கையில இந்த கதை என்கிட்ட சொல்றீங்க?" அப்படின்னு சொன்ன உடனே, அவர் ஒரு விஷயம் தான் சொன்னார், "அதெல்லாம் நடந்துடுவீங்கம்மா. நம்ம சூப்பரா ஒரு படம் பண்றோம்" அப்படின்னு சொல்லிட்டு போனார். அந்த கான்பிடன்ஸ் தான். ஆறு மாசம், எட்டு மாசம்னு சொன்ன டாக்டர் முன்னாடி, ஒன்னரை மாசத்துல நான் ஷூட்டிங் போனேன்.

இங்க விருது வாங்கியிருக்கிற எல்லா பெண்களுக்கும் நான் வந்து கங்கிராஜுலேட் பண்ணனும்னு நினைக்கிறேன். ஏன்னா ஓவர்நைட் நடக்கிறது இல்ல சக்சஸ்ன்ற விஷயம். நிறைய வலிகள், நிறைய தோல்விகள், நிறைய பிரச்சனைகள், நிறைய போராட்டங்கள் தாண்டிதான் இன்னைக்கு இந்த மேடையில வந்து ஒவ்வொருத்தங்களும் அவார்ட் வாங்குறாங்க. எனக்கும் அந்த மாதிரி நிறைய நடந்திருக்கு. நிறைய போராட்டங்களை மீறி தான் இன்னைக்கு வந்து இந்த மேடையில நிக்கிறேன் நான் நம்புறேன்.
பார்த்திபன் கனவுக்கு எனக்கு அவார்ட் கிடைக்கல சார். எனக்கு பிடிச்சமான படங்களுக்கு ஆட்டோகிராஃப்க்கு கிடைக்கல. பட்டாசுன்ற படத்துக்கு கிடைக்கல. பள்ளிக்கூடம் என்ற படத்துக்கு கிடைக்கல. ஆனா போக போக பழகிடுச்சு. ஏன்னா வந்து நம்ம வாங்குற அவார்டை விட மக்களோட அன்பும் ஆதரவும்தான் ரொம்ப முக்கியம். நம்மளோட கதைகள், நம்மளோட கதாபாத்திரங்கள் நம்ம பண்ணிட்டு இருக்கிற படங்கள் பற்றி இன்னும் பேசிட்டு இருக்கிறாங்க இல்லையா? இப்போ 13 இயர்ஸ்க்கு அப்புறம் ஆட்டோகிராஃப் ரிலீஸ் ஆயிருக்கு. ரீ-ரிலீஸ் ஆகும்போது கூட நிறைய பேர், இந்த படங்கள் இப்ப பார்க்கும்போது கூட உங்க கேரக்டர் அவ்வளவு மனசுல நிக்குதுன்னு சொல்லும்போது, அதுதான் என்னோட வெற்றியா நான் நினைக்கிறேன்" எனப் பேசினார்.












