செய்திகள் :

Rain Alert: "இந்த 16 மாவட்டங்களில் இன்று காலை கனமழைக்கு வாய்ப்பு" - வானிலை ஆய்வு மையம் தகவல்

post image

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, நேற்று (நவ.22) காலை தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருக்கிறது.

இந்தக் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற 24-ஆம் தேதி வாக்கில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கடுத்த 48 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெறக்கூடும்.

இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

Rain Alert
Rain Alert

இந்நிலையில் கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, நாகப்பட்டினம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 10 மணிவரை இந்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று சென்னையில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

தமிழ்நாடு: நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி; 3 நாள்கள் தொடர் மழை! எங்கெல்லாம் தெரியுமா?

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தகவலின் படி, நாளை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம். அது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 24-ம் தேதி, தெற்கு வங்கக்கடலின் மத்த... மேலும் பார்க்க

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை; எந்த மாவட்டங்களில் விடுமுறை?

தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று காலை 10 மணி வரை சில மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் வழங்கியுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,"தமிழ்நாட்டில் அரியலூர்,... மேலும் பார்க்க

Rain Alert: இன்று இரவு 10 மணி வரை இந்த 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; வானிமை ஆய்வு மையம் தகவல்!

தென் மேற்கு வங்கக் கடலில் கடந்த 14 ஆம் தேதி ஒரு ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது.இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி கடந்த இரண்டு நாட்களாக அதே இடத்தில் நிலவியது.தற்போது இன்று இலங்கை நிலப்பரப்ப... மேலும் பார்க்க

Rain Alert: உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி - வானிலை ஆய்வு மையம் தகவல்

தென் மேற்கு வங்கக் கடலில் கடந்த 14 ஆம் தேதி ஒரு ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி கடந்த இரண்டு நாட்களாக அதே இடத்தில் நிலவியது. தற்போது இலங்கை நிலப்பரப்புக்க... மேலும் பார்க்க

இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட், மஞ்சள் அலர்ட்? எங்கு பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை?

தமிழ்நாட்டில் இன்று ஆரஞ்சு அலர்ட் மற்றும் மஞ்சள் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,இன்று காலை 10 மணி வரை தமிழ்நாட்டில் செங்கல்... மேலும் பார்க்க

தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; சென்னை நிலவரம் எப்படி?

தமிழகத்தில் இன்று (நவ. 17) முதல் 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், த... மேலும் பார்க்க