ரஜினிகாந்த்: நடிப்பு கற்றுக்கொடுத்த ஆசிரியர் மறைவு; நேரில் சென்ற சூப்பர் ஸ்டார் ...
Rain Alert: இன்று இரவு 10 மணி வரை இந்த 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; வானிமை ஆய்வு மையம் தகவல்!
தென் மேற்கு வங்கக் கடலில் கடந்த 14 ஆம் தேதி ஒரு ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது.
இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி கடந்த இரண்டு நாட்களாக அதே இடத்தில் நிலவியது.
தற்போது இன்று இலங்கை நிலப்பரப்புக்கு மேல் பகுதியில் இந்த காற்றழுத்த தாழ்வு நிலவுகிறது என்றும், மன்னர் வளைகுடா நோக்கி லேசாக நகரத் தொடங்கியதும் தமிழகத்தில் கனமழை தொடரும் எனவும் வானிலை மையம் தெரிவித்திருந்தது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று இரவு 10 மணி வரை 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், தென்காசி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், திருநெல்வேலி, விழுப்புரம் ஆகிய 18 மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இன்று இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) November 17, 2025
மேலும், "வரும் 22 ஆம் தேதி வங்கக் கடலில் இன்னொரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாகவும்" என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
இதனால் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் வரும் 21, 22 ஆம் தேதி கன முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

















