செய்திகள் :

ரஜினிகாந்த்: நடிப்பு கற்றுக்கொடுத்த ஆசிரியர் மறைவு; நேரில் சென்ற சூப்பர் ஸ்டார் - யார் அவர்?

post image

நடிகர் ரஜினிகாந்துக்கு திரைப்படப் பயிற்சிக் கல்லூரியில் நடிப்பு கற்றுக் கொடுத்த ஆசிரியர் கே.எஸ். நாராயணசாமி உயிரிழந்துள்ளார். வயது மூப்பு காரணமாக உயிரிழந்த ஆசிரியருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார் ரஜினி.

கே.எஸ். நாராயணசாமி

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பாக நடத்தப்பட்ட திரைப்படப் பயிற்சி கல்லூரியில் அவருக்கு நடிப்பு கற்றுத்தரும் ஆசிரியராக இருந்துள்ளார் கே.எஸ். நாராயணசாமி என்கிற கோபாலி. 92 வயதான அவர் சென்னை மந்தைவெளி பகுதியில் வசித்துவந்த நிலையில் இன்று (நவ. 17) காலை உயிரிழந்துள்ளார்.

கோபாலி ரஜினிகாந்த் மட்டுமின்றி அமிதாப்பச்சன், நாசர், சிரஞ்சீவி, ராதாரவி ஆகிய நடிகருக்கும் ஆக்டிங் மாஸ்டராக இருந்ததாகக் கூறப்படுகிறது. சில இயக்குநர்களையும் உருவாக்கியிருக்கிறார். ரஜினிகாந்த் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் அங்கு வந்த இயக்குநர் கே.பாலசந்தரிடம் ரஜினிகாந்த்தை தனிப்பட்ட முறையில் அறிமுகப்படுத்தியவர் கோபாலி என்றும் கூறப்படுகிறது.

KS Narayanasamy
KS Narayanasamy

நாராயணசாமி புனேயிலுள்ள நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமாவில் முதல் மாணவராக திகழ்ந்தவர். மேலும் இவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் சினிமா விமர்சனங்கள் எழுதியிருக்கிறார். தூர்தர்ஷன் இயக்குநராக இருந்துள்ளார். இவரது மறைவுக்கு நேரில் சென்றதுடன், ஒரு மணிநேரம் அங்கே இருந்து அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார் ரஜினிகாந்த்.

Gangai Amaran: "வெங்கட் பிரபுவை பிசினஸ் மேன் ஆக்கணும்னு நெனைச்சேன்!" - கங்கை அமரன் பேட்டி

பாடலாசிரியர், இசையமைப்பாளர், இயக்குநர் என பல்வேறு அவதாரங்களில் வெற்றிகளைக் குவித்தவர் கங்கை அமரன். இப்போது, டிடி பாலச்சந்திரன் இயக்கத்தில் 'லெனின் பாண்டியன்' படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அவர் அறிமுகம... மேலும் பார்க்க

Ajith: மகனின் ஃபுட்பால் ஆசைக்காக அஜித் செய்த செயல்; வெனிஸில் ஷாலினி பிறந்தநாள் கொண்டாட்டம்!

ஒரு புறம் அப்பா அஜித் குமார் கார் ரேஸராக தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார். மற்றொரு பக்கம், மகன் ஆத்விக் குமார் ஃபுட்பால் பிளேயராக கலக்கிக் கொண்டிருக்கிறார். ஆத்விக் குமார் பிரபல ஃபுட்பால் பிளேயர் ரொனால... மேலும் பார்க்க

Bhgayashri Borse: 'டைரி மில்க் விளம்பரம் டு டோலிவுட்'; புதிய சென்சேஷன் 'காந்தா' பாக்யஶ்ரீ போர்ஸ்

துல்கர் சல்மானின் 'காந்தா' திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. துல்கர் சல்மான், சமுத்திரகனி, ரானா, பாக்யஶ்ரீ போர்ஸ், பிஜேஷ், ரவீந்திர விஜய் எனப் படத்தில் நடித்த அனைவரும் தங்களின் அசாத்திய நடிப்பிற்கா... மேலும் பார்க்க

Krithi Shetty: ``பேர் சொல்லும் அழகவ'' - நடிகை கீர்த்தி ஷெட்டி லேட்டஸ்ட் க்ளிக்ஸ்| Photo Album

Krithi Shetty: `அழகான ராட்சசியே' - நடிகை கீர்த்தி ஷெட்டி லேட்டஸ்ட் கிளிக்ஸ்| Photo Album மேலும் பார்க்க

Deva: ``இசைக்கு ஏன் காப்புரிமை கேட்பதில்லை?'' - உதாரணத்துடன் பதிலளித்த இசையமைப்பாளர் தேவா!

சமீபத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்த டியூட் படத்தில் இளையராஜாவின் இரண்டு பாடல்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டிருந்தன.கடந்த மாத இறுதியில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சோனி நிறுவனத்துக்கு எதிரான வ... மேலும் பார்க்க