செய்திகள் :

டெல்லி: இதை கழுத்தில் மாட்டிக்கொண்டால் காற்று மாசு அண்டாதா? - அறிவியலாளர்கள் சொல்வதென்ன?

post image

Qஇந்தியாவின் தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்திருக்கும் நிலையில் அதனை எதிர்கொள்ள சிறிய ரக சாதனம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அட்டோவியோ நிறுவனம், இந்தியாவின் முதல் கையடக்க காற்று சுத்திகரிப்பானைக் கண்டுபிடித்திருக்கிறது. இதனை அட்டோவியோ பெபல் என அழைக்கின்றனர்.

டெல்லியின் காற்றுமாசினால் நீண்டகால நோக்கில் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படக் கூடும் என்ற அச்சம் மக்களிடத்தில் அதிகரித்திருப்பதனால், கடந்த சில வாரங்களாக இந்த கருவிக்கு டிமாண்ட் அதிகரித்திருக்கிறது.

கழுத்தில் அணிகலனாக அணிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட இதனை, கடந்த டிசம்பரில் அறிமுகம் செய்துள்ளனர். இதுவரை 15,000க்கும் மேற்பட்டோர் வாங்கியிருக்கின்றனர்.

அட்டோவியோ பெபல்

சிறிய கருவி VS டெல்லியின் நச்சுக்காற்று

அட்டோவியோ, ஹரியானா மாநிலம் குருகிராமை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஸ்டார்ட் அப் நிறுவனமாகும். இதன் 3 நிறுவனர்களில் ஒருவரான அன்மய் ஷாலோட் கூறுவதன்படி மொத்த விற்பனையில் 30-35% கடந்த சில வாரங்களில் வந்துள்ளது. குறிப்பாக டெல்லி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் வாங்கியிருக்கின்றனர்.

பாரம்பரிய காற்று சுத்திகரிப்பான்கள் இருந்தாலும், செல்லும் இடமெல்லாம் எடுத்துச் செல்ல முடிவதனாலும் ரீசார்ஜ் செய்து பயன்படுத்துவது எளிமையாக இருப்பதனாலும் இதற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இதன் விலை ரூ.3500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு பெபெலை 1000 மணி நேரம் வரை பயன்படுத்தமுடியும் என்கின்றனர்.

இதை வைத்து ஒரு நபர் சுவாசிக்கும் காற்றை மட்டுமே சுத்திகரிக்க முடியும். இருசக்கர வாகனத்தில் அல்லது நடந்து செல்லும்போது புதிய காற்று வந்துக்கொண்டே இருப்பதனால் இதனால் பெரிய அளவில் பலன் கிடைக்காது.

ஒரு அறை முழுமைக்கும் காற்றை சுத்திகரிக்க இதை விட பாரம்பரிய சுத்திகரிப்பான்கள் சிறப்பாக செயல்படும். எனவே வெளியில் அலுவலகத்துக்கோ, பிற இடங்களுக்கோ செல்லும்போதே இது திறன்மிக்கதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

Anmay Shahlot
Anmay Shahlot

இதில் மேம்பட்ட மாறி அயனி தொழில்நுட்பம் (Advanced Variable Anion Technology) பயன்படுத்தப்படுவதாக தயாரிப்பு நிறுவனம் கூறுகிறது. இது காற்றில் உள்ள PM2.5, PM10, பாக்டீரியா மற்றும் பிற நானோ துகள்கள் போன்ற மாசுபடுத்திகளை அழிக்கிறது. இது பாரம்பரிய HEPA (High Efficiency Particulate Air) சுத்திகரிப்பான்களைவிட மேம்பட்ட முறை என்கின்றனர்.

இதனை கான்பூர் ஐஐடியில் சோதித்து இந்தியாவின் தீவிர காற்றுமாசுபாட்டை நிவர்த்தி செய்யும் கருவியாக நிறுவியிருக்கின்றனர். இதில் நார்மல் மற்றும் டர்போ என இரண்டு நிலைகள் கொடுத்திருக்கின்றனர். காற்றின் தரக் குறியீடு 200ஐத் தாண்டும்போது டர்போ பயனுள்ளதாக இருக்கும் என்கிறார் அன்மய் ஷாலோட்.

ஆனால் அறிஞர்கள் இந்த கூற்றுகளை சந்தேகிக்கின்றனர். நிறுவனம் கொடுத்திருக்கும் அடிப்படை சோதனை முடிவுகளைக் கொண்டு இவை N95 மாஸ்க் போன்றவற்றை விட திறன்மிக்கதாக இருக்கும் எனக் கூறிவிட முடியாது என்கிறது இந்தியா டுடே தளம்.

N95 மாஸ்க்

மேலும் இந்த சாதனம் புகை போன்ற பெரிய துகள்களைக் கட்டுப்படுத்தினாலும் பெருநகரங்களின் நுண்ணிய மாசுக்கு எதிராக பலவீனமானதாகவே இருக்கும் எனக் கருதுகின்றனர் அறிவியலாளர்கள். இதுபோன்ற கருவிகள் 1 - 10 மைக்ரோ மீட்டர் துகள்களை கட்டுப்படுத்த சிறந்தவை. ஆனால் அபாயகரமான மாசு துகள்கள் பொதுவாக 0.1 மைக்ரோ மீட்டரை விட சிறியதாக இருக்கும் என்கின்றனர் அறிஞர்கள். என்95 முகமூடி அணிவதும் வெளியில் செல்வதைக் குறைத்துக்கொள்வதும் சிறந்த தீர்வாக இருக்கும் என நம்புகின்றனர்.

டெல்லியில் உச்சக்கட்ட புகை மூட்டப் பருவத்தில் இந்த கருவி சிறிய அளவில் பயனளிக்கலாம் என்பதையும் மறுக்கவில்லை.

APPLE: இந்த பை 20,000 ரூபாயா? - இதை வடிவமைத்தவர் யார் தெரியுமா?

ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன்களை எடுத்துச் செல்வதற்காக புதிய பையை அறிமுகப்படுத்தி இணையத்தில் கடும் எதிர்வினைகளையும் கேலிகளையும் சந்தித்து வருகிறது. அமெரிக்க தொழில்நுட்ப பெருநிறுவனமான ஆப்பிள் (Apple Inc.... மேலும் பார்க்க

AIdol: ரஷ்யாவின் முதல் AI ரோபோ; அறிமுக மேடையில் தலைகுப்புற விழுந்த வீடியோ வைரல் - என்ன காரணம்?

ரஷ்யா அறிமுகம் செய்த அதன் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) கொண்ட மனித உருவ ரோபோவான 'ஐடல்' (AIdol), மாஸ்கோவில் நடைபெற்ற ஒரு தொழில்நுட்ப நிகழ்ச்சியில் அறிமுகமான சில நொடிகளிலேயே மேடையில் விழுந்தது.இந்தச் சம்... மேலும் பார்க்க

இந்தியர்களுக்கு ஓராண்டிற்கு ChatGPT Go முழுக்க முழுக்க ஃப்ரீ! - ஆக்டிவேட் செய்வது எப்படி?|How to

OpenAI நிறுவனம் இந்தியர்களுக்கு சூப்பர் ஆஃபர் ஒன்றை வெளியிட்டுள்ளது. வரும் நவம்பர் 4-ம் தேதி முதல், ChatGPT Go-வை ஒரு வருட காலத்திற்கு முழுக்க முழுக்க இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம். உண்மையில், இதன் வி... மேலும் பார்க்க

சிட்டி யூனியன் வங்கி - டிஜிட்டல் பேமென்ட் உலகில் ஒரு புதுமை!

1904ல் தொடங்கிய சிட்டி யூனியன் வங்கி, தற்போது 120 ஆண்டுகளாக நாட்டிற்கு சேவை செய்து வருகிறது. கும்பகோணத்தில் தலைமையகத்துடன் 890-க்கும் மேற்பட்ட கிளைகள், 1700-க்கும் மேற்பட்ட ATM/BNAs மூலம் நாடு முழுவது... மேலும் பார்க்க

Instagram: உங்க நண்பர்கள் எங்க இருக்காங்கன்ன தெரிஞ்சுக்கலாம் - இன்ஸ்டாவின் இந்த அப்டேட் தெரியுமா?

உலகளவில் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் இன்ஸ்டாகிராம் ஆப்பில் தற்போது பல்வேறு புதிய அப்டேட்கள் வந்துள்ளன. முதல் முக்கிய மாற்றம் ரீல்ஸ் வீடியோக்களின் நீளம் 3 நிமிடமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், பயன... மேலும் பார்க்க

AI குக்கிங் அசிஸ்டன்ட்: `சமையல் ரெடி!' - நெட்டில் சமையல், தட்டில் சாப்பாடு!

' ஏங்க நான் சமையல் செய்றேன். கொஞ்சம் காய்கறி மட்டும் நறுக்கி கொடுத்துருங்க'என்கிற பேச்சுக்கே இனிமே இடமே இல்லை. நீ 50, நான் 50 என்று இல்லாமல் 100% சமையலையும் AI யே பார்த்துக்கொள்ளும் என்று சொன்னால் உங்... மேலும் பார்க்க