TATA SIERRA: 30 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பொலிவுடன் திரும்ப வரும் TATA SIERRA |...
BB Tamil 9: "ஒருத்தரை மட்டும் கூட வச்சுக்கிட்டு, டிராவல் பண்ணலாம்னு நினைக்குறாங்க"- FJ
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 8 பேர் வெளியேறி இருக்கின்றனர்.
கனி, திவாகர் இருவரில் ஒருவர் வெளியேறுவார்கள் என்று தகவல்கள் வெளியான நிலையில் நேற்று (நவ.16) திவாகர் வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில் இன்று வெளியான மூன்றாவது புரொமோவில், "இனி எல்லார்கிட்டயும் போய் பார்வதி பேசுவாங்க. ஆனா அதில் ஒருத்தரை மட்டும் அவங்க கூட்டணியில சேர்த்துக்கலாம்'னு தெளிவா இருக்காங்க. ஒருத்தவுங்க கூட பேச ஆரம்பிச்சா அவுங்களை கான்ஸ்டன்ட்டா எவ்வளவு நாள் நம்ம கூட வச்சுக்க முடியுமோ, அவ்வளவு நாள் கூடவே வச்சுக்கலாம்னு நினைக்கிறாங்க.
அவுங்களுக்கு சப்போர்ட்டா இருக்கிற மாதிரி ஒரு விஷயத்தை பண்றாங்க. ஒருத்தரை மட்டும் கூட வச்சுகிட்டு, இந்த வீட்டில டிராவல் பண்ணலாம்னு நினைக்குறாங்க" என FJ பார்வதி குறித்து விக்கல்ஸ் விக்ரமிடம் சொல்கிறார்.
















