Bhgayashri Borse: 'டைரி மில்க் விளம்பரம் டு டோலிவுட்'; புதிய சென்சேஷன் 'காந்தா' ...
BB Tamil 9: "பெண்களின் காவலராகவும், ஹீரோவாகவும் தன்னைக் காட்டிக்கிறாரு, ஆனா"- குற்றம்சாட்டிய கனி
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 8 பேர் வெளியேறி இருக்கின்றனர்.
கனி, திவாகர் இருவரில் ஒருவர் வெளியேறுவார்கள் என்று தகவல்கள் வெளியான நிலையில் நேற்று (நவ.16) திவாகர் வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில் இன்று வெளியான முதல் புரொமோவில் "உங்களுக்கான போட்டியாளராக யாரை நினைக்கிறீர்கள்"என்று பிக் பாஸ் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு என்னுடைய போட்டியாளர் FJ தான் என்று விஜே பார்வதி கூறினார்.
தொடர்ந்து "இந்த நபர் என்னுடைய லிஸ்டிலேயே இல்ல என்று நீங்கள் நினைக்கும் நபர் யார்" என்ற கேள்விக்கு வியானா, சுபிக்ஷா இருவரும் ரம்யாவை சொல்ல, ரம்யா வியானாவை சொன்னார் "சாண்ட்ரா VS கனி என ஒரு ஃபார்மட் கிரியேட் செய்து வைத்திருக்கிறார்கள். ஆனால் என்னுடைய லிஸ்டில் கனி இல்லவே இல்லை" என சாண்ட்ரா கூறியிருந்தார்.
தற்போது வெளியாகியிருக்கும் இரண்டாவது புரொமோவில், " எனக்கு இந்த வீட்டில போட்டியே இல்லாத ஒரு நபர்னா அது கனி அக்காதான். பிரவுன் சீட் போட்ட ஒரு நோட் புக் மாதிரி நீங்க.
ஒரு டைம் கூட நான் சொல்றதை புரிஞ்சுக்கிட்டதே இல்ல. உங்களுக்கும் எனக்கும் எதுவுமே செட் ஆகவே இல்ல" என்று கம்ருதீன் கனியைச் சொல்கிறார்.

"நான் ஒரு பேச்சுக்கு கூட கம்ருதீனை எனக்கு போட்டியா நினைக்கல. அவர் கிட்ட நான் பேசுற அத்தனை டைமும் வேஸ்ட் ஆஃப் டைம்'னு நினைக்கிறேன்.
இந்த வீட்டில பெண்களின் காவலராகவும், ஹீரோவாகவும் தன்னைக் காட்டிக்கிறாரு. என்னைப் பொறுத்தவரைக்கும் அவர் ஒரு காமெடியன். அதனால் அவர் எந்தவகையிலும் என்னுடைய லிஸ்டிலேயே இல்ல." என கனி சொல்கிறார்.




















