குடும்பத்தையும், அரசியலையும் துறக்கிறேன்: லாலு பிரசாத்திற்கு சிறுநீரகம் தானம் செ...
Top Cook Dupe Cook: "சினிமாவுக்கு வந்துட்டா மானம், ரோஷத்தை மூட்டைக் கட்டி வைச்சிடணும்!" - டி.எஸ்.ஆர்
'அயலி' உள்ளிட்ட பல படைப்புகளில் நடித்து நமக்கு பரிச்சயமானவர் காமெடி நடிகர் டி.எஸ்.ஆர் (எ) ஶ்ரீனிவாசன்.
சமூக வலைதளப் பக்கங்களில் இவர் பதிவிடும் உணவு வீடியோக்கள் பெரும் டிரெண்டிங் என்றே சொல்லலாம்.
சினிமாவைத் தாண்டி கடந்த சில நாட்களாக தொலைக்காட்சி நிகழ்வுகளில் டி.எஸ்.ஆர் நம்மை எண்டர்டெயின் செய்து வருகிறார்.

'டாப் குக் டூப் குக்' நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தவர் 12-வது வாரத்தில் எலிமினேட் ஆகியிருந்தார். டி.எஸ்.ஆரை சந்தித்துப் பேட்டிக் கண்டோம்.
நம்மிடையே பேசிய நடிகர் டி.எஸ்.ஆர், "'டாப் குக் டூப் குக்' நிகழ்ச்சிக்கான வாய்ப்பு 'ஆபீஸ்' வெப் சீரிஸ் மூலமாக கிடைத்ததுனு சொல்லலாம்.
கே.பி.ஒய் தீனாவும், 'ஆடை' பட இயக்குநர் ரத்னகுமார் மூலமாகவும் எனக்கு கிடைத்ததுனு சொல்லலாம். எனக்கு சமையல் வேலைகள் செய்யுறது ரொம்ப பிடிக்கும்.
ஆனா, என் வாழ்க்கையில ஒரு பகுதிக்கு மேல நான் சமைக்கவே இல்லைனுதான் சொல்லணும். மனைவி வந்ததுக்குப் பிறகு சுத்தமாக சமையல் வேலைகள் செய்தது கிடையாது.
அப்படியான நேரத்துலதான் எனக்கு 'டாப் குக் டூப் குக்' வாய்ப்பு கிடைத்ததுனு சொல்லலாம்.
நிக்கி, அதிர்ஷ்டினு பலரும் என்னை நிகழ்ச்சியில கிண்டல் பண்ணுவாங்க. ஆனா, அதுக்கெல்லாம் நான் வருத்தப்படமாட்டேன்.
சினிமாவுக்கு வந்துட்டாலே மானம், ரோஷம்னு அத்தனையையும் மூட்டைக் கட்டி வைத்திட்டு வந்திடணும்.
இங்க மற்ற போட்டியாளர்கள் என்னை கிண்டல் பண்றதை ஜாலியாகதான் பார்க்கிறேன். நம்முடைய வேலைகள்ல இப்படியான விஷயங்கள் நடக்குது அவ்வளவுதான்.

மற்றபடி நிக்கி, அதிர்ஷ்டி, மோனிஷா, ஜி.பி.முத்து என எல்லோரையும் நான் என் குடும்பமாகதான் பார்க்கிறேன். இந்த தருணத்துல என்னுடைய மனைவிக்கு நான் நன்றி சொல்லிக்கிறேன்.
நிகழ்ச்சிக்காக வீட்டுல நான் பயிற்சி எடுத்துப்பேன். அத்தனைக்கும் என்னுடைய மனைவி உறுதுணையாக இருந்திருக்காங்க. இப்போ கொஞ்ச நாட்களாக தொலைக்காட்சிகள்ல கவனம் செலுத்திட்டு இருக்கேன்.
இனிமேல் நானாகதான் போய் சினிமா வாய்ப்புகள் தேடணும். இடையில கொஞ்ச நாட்கள் எனக்கு சினிமாவுல கொஞ்சம் கடினமான பாதையாகதான் இருந்தது.
மறுபடியும் என்னுடைய பழைய ஜவுளி பிசினஸுக்கு போயிடலாம்னுதான் யோசிச்சிட்டு இருந்தேன். அப்போதான் எனக்கு 'அயலி' வாய்ப்பு வந்தது. இன்னைக்கு அப்படியே போய்கிட்டு இருக்கு." என்றபடி முடித்துக் கொண்டார்.

















