Top Cook Dupe Cook: "சினிமாவுக்கு வந்துட்டா மானம், ரோஷத்தை மூட்டைக் கட்டி வைச்சி...
திங்கள் முதல் தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம்! - ஏன் இந்த முடிவு?
பணி நிரந்தரம் வேண்டியும் தனியார்மயமாக்கலை எதிர்த்தும் தொடர்ந்து போராடி வரும் தூய்மைப் பணியாளர்கள், அடுத்தக்கட்டமாக சென்னை உயர் நீதிமன்ற அனுமதியோடு காலவரையற்ற உண்ணாநிலை போராட்டதை மேற்கொள்ளவிருக்கின்றனர்.

சென்னை ரிப்பன் மாளிகைக்கு முன்பு கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் மண்டலங்கள் 5 மற்றும் 6 ஐ சேர்ந்த தூய்மைப் பணியாளர்களை போராட்டத்தை தொடங்கினர். அவர்களை ஆகஸ்ட் 13 ஆம் தேதி நள்ளிரவில் காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்தனர். சென்னைக்குள் பல்வேறு மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்ட அவர்கள் மறுநாள் மாலை விடுவிக்கப்பட்டனர். அதன்பிறகும் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.
சென்னை உழைப்பாளர் சிலை, எழும்பூர் பெரியார் மணியம்மை சிலை, அல்லிக்குளம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து உண்ணாநிலை போராட்டத்தை முன்னெடுத்து கைதாகினர். போராட்டம் நூறாவது நாளை நெருங்குகையில் மெரினா கடலில் இறங்கி போராடி கைதாகினர்.

போராட்டம் 100 வது நாளை கடந்திருக்கும் நிலையில், போராட்டத்தை முன்னெடுக்கும் உழைப்போர் உரிமை இயக்கத்தின் சார்பில் அமைதியான முறையில் காலவரையற்ற போராட்டத்தை முன்னெடுக்க அனுமதி வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்க நிபந்தனைகளோடு அனுமதி கொடுத்து நேற்று உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து வருகிற திங்கட்கிழமை காலை 10 மணி முதல் அம்பத்தூர் அலுவலகத்தில் 4 பெண் தூய்மைப் பணியாளர்கள் தொடர் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபடவிருக்கின்றனர்.















