பீகார்: கூட்டணி சொதப்பல்; சிதறிய வாக்குகள்; சட்டமன்றத்தில் குறையும் முஸ்லிம்கள் ...
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த வாரம் முழுவதும் மழை?
அடுத்த வாரம் முழுவதும் தமிழ்நாட்டில் மழை இருக்கும் என்று சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நேற்று தென் இலங்கை மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது.
இதன் காரணமாக, இன்று காலை இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு- வட மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து செல்லலாம்.

இதன் காரணமாக,
நாளை - தமிழ்நாட்டில் உள்ள கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், உள் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் (நவம்பர் 17, 2025) - தமிழ்நாட்டில் உள்ள கடலோர பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம்.
காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கன முதல் மிக கனமழை பெய்யலாம்.
சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. காரைக்காலிலும் கனமழை பெய்யலாம்.

வரும் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18, 2025) - கடலோர தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், உள் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
வரும் புதன்கிழமை (நவம்பர் 19, 2025) - தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 20, 21 தேதிகளில் தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசான முதல் மிதமான மழை பெய்யலாம்.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கைhttps://t.co/467dVuULiLpic.twitter.com/hNnMysvWLI
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) November 15, 2025




















