வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த வா...
ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய `எமிரேட்ஸ் தொழிலாளர் விருது' வென்ற கேரள இளைஞர் - யார் இவர்?
ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த இந்தியர் ஒருவர், அந்நாட்டின் மதிப்புமிக்க தொழிலாளர் விருதை வென்றுள்ளார். தொழிலாளர் சந்தை மற்றும் சமூகத்திற்கு அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக இந்த விருது வழங்கப்பட்டது.
அபுதாபி சுகாதாரத் துறையில் 16 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் அனஸ் கடியாரகம் என்பவருக்குத் தான் இந்த விருது வழங்கப்பட்டது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரான ஷேக் மன்சூர் பின் சயீத் அல் நஹ்யானின் தலைமையில் நடைபெற்ற ‘எமிரேட்ஸ் தொழிலாளர் விருதுகள்’ விழாவில் அந்த விருது வழங்கப்பட்டது.

இந்த விழாவில், ‘திறமையான தொழிலாளர்கள்’ பிரிவின் ‘மேலாண்மை மற்றும் நிர்வாகிகள்’ துணைப் பிரிவில் அனஸ் முதன்மை வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்குப் பரிசாக 100,000 திர்ஹாம்கள் (சுமார் ரூ. 24.14 லட்சம்), ஒரு தங்க நாணயம், ஒரு ஆப்பிள் வாட்ச் ஆகியவை வழங்கப்பட்டன.
கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த அனஸ், 2009-ல் அபுதாபிக்குச் சென்று ஒரு சுகாதார மையத்தில் மனிதவள நிர்வாகியாக தனது பணியைத் தொடங்கினார். படிப்படியாக உயர்ந்து, தற்போது மனிதவள மேலாளராகப் பல மருத்துவமனைகளை நிர்வகித்து வருகிறார்.
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் முன்னணி ஊழியர்களுக்கு அவர் அளித்த ஆதரவிற்காக ஐக்கிய அரபு அமீரகத்தின் ஹீரோக்கள் பதக்கம் மற்றும் கோல்டன் விசா அவருக்கு வழங்கப்பட்டது.
“என் வளர்ச்சியை இந்த நாடு கவனித்து அங்கீகரிப்பதாக உணர்கிறேன்” என்று அனஸ் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.



















