Nithish Kumar : 'தேர்தலில் போட்டியிடாமலேயே 10 வது முறையாக முதல்வர்!' - எப்படி சா...
BB Tamil 9: திடீரென வெளியேற்றப்பட்ட `ஸ்டார்’ ? கடைசி நேரத்தில் நிகழ்ந்த அதிரடி
விஜய் டிவியில் வி.ஜே. பார்வதி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, உள்ளிட்ட இருபது பேருடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை ஏழு பேர் வெளியேறியுள்ளனர்.
நந்தினி பிக்பாஸ் வீடு செட் ஆகாததால் முதல் வாரத்திலேயே வெளியேறினார்.
பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை உள்ளிட்டோர் அடுத்தடுத்த எவிக்ஷன் மூலம் வெளியேறினர். கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் நிகழ்ந்து துஷார், பிரவீன் இருவரும் வெளியேறினர்.

முன்னதாக இந்த சீசனில் போட்டியாளர்களாக சமூக ஊடக பிரபலங்கள் பெரும்பாலான எண்ணிக்கையில் இருந்ததால் நிகழ்ச்சி டல் அடிப்பதாக ஒரு பேச்சு உலா வந்தது. எனவே அடுத்த சில தினங்களில் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் சாண்ட்ரா, பிரஜின், திவ்யா கணெஷ், அமித் பார்கவ் ஆகிய நால்வரும் நிகழ்ச்சிக்குள் சென்றனர்.
பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக கணவன் மனைவியாக பிரஜின் - சாண்ட்ரா ஜோடி இந்த சீசனில் வீட்டுக்குள் சென்று இருக்கின்றனர்.
இந்தச் சூழலின் இந்த வார எவிக்ஷனுக்கான ஷூட் இன்று காலை தொடங்கி தற்போது பிக்பாஸ் செட்டில் நடந்து வருகிறது.
விஜய் சேதுபதி காலையில் வந்ததும் வழக்கமான விசாரிப்புகள் முதலில் நடந்தன.
எலிமினேஷனுக்கான நாமினேஷன் பட்டியலில் திவாகர், திவ்யா கணேஷ் உள்ளிட்ட பத்து பேர் இருந்த நிலையில் ரசிகர்களின் ஓட்டுகள் அடிப்படையில் முதலில் கனி வெளியேறுவதாக தகவல் வெளியானது.
இது தொடர்பாக நாமும் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்தச் சூழலில் கடைசி நேர அதிரடியாக தற்போது திவாகர் வெளியேற்றப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

திவாகரைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் பலரது ஆதரவைப் பெற்று வந்தார். நிகழ்ச்சிக்கு கன்டென்ட் தருபவராக இருந்தாலும் சமீப தினங்களாக அவரின் நடவடிக்கைகள் வெளியில் பலரிடம் அதிருப்தியை தந்திருந்தது. குறிப்பாக கானா வினோத்திடம் அவர் நடந்து கொண்ட விதம் சர்ச்சைக்கு வழி வகுத்தது. இந்நிலையில் தான் திவாகர் வெளியேற்றம் கடைசி நேரத்தில் நிகழ்ந்ததாகத் தெரிகிறது.


















