செய்திகள் :

சாலையோரம் கீபோர்டு வாசித்து தெருநாய்களின் பசியை போக்கும் முதியவர் - யார் இவர்?

post image

கொல்கத்தாவின் பரபரப்பான தெருக்களில், 73 வயதான சுப்ரதா என்பவர் கீபோர்டு மற்றும் மௌத் ஆர்கன் வாசித்து வருகிறார். இதன் மூலம் கிடைக்கும் பணத்தை தெருநாய்களுக்கு உணவளிக்க பயன்படுத்தி வருகிறாராம்.

கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் இந்த விஷயத்தை செய்து வருகிறார். ஆராதனா சாட்டர்ஜி என்ற சமூக ஆர்வலர், இவரது சேவையை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதை அடுத்து, இந்தச் செய்தி இணையத்தில் பெருமளவில் கவனம் பெற்று வருகிறது.

சுப்ரதா தாஸ், ஒவ்வொரு நாளும் சுமார் 500 ரூபாய் செலவில் தெருநாய்களுக்கு உணவு வழங்கி வருகிறார். முன்பு ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வந்த இவர் வயது மூப்பு காரணமாக அந்தத் தொழிலை கைவிட்டு, தனது சிறுவயதில் பயின்ற இசைத் திறமையை ஆதரவற்ற விலங்குகளின் பசி போக்கப் பயன்படுத்தி வருகிறார்.

நாய் - representation image
நாய் - representation image

குடும்பத்தினரால் கைவிடப்பட்ட போதிலும், தனது சேவையைத் தொடர்ந்து செய்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.​

தனது தனிப்பட்ட துயரங்களைத் தாண்டி, இசையை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டு சுப்ரதா தாஸ் இந்தச் சேவையை முன்னெடுத்து வருகிறார்.

கொல்கத்தாவின் லேக் மால் மற்றும் ராஷ்பெஹாரி போன்ற பகுதிகளில் தினமும் காலை 8 மணி முதல் 10:30 மணி வரை அவர் அங்கு கீபோர்டு மற்றும் மௌத் ஆர்கன் வாசித்து வருகிறார். சுப்ரதா தாஸின் தன்னலமற்ற சேவை குறித்த இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி பலரும் அவருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

காட்டிக்கொடுத்த மொழி: அமெரிக்க குடியுரிமை பெற 9 வயது இளையவரை திருமணம்செய்த 73 வயது குஜராத் மூதாட்டி

அமெரிக்காவில் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். சட்டவிரோதமாக தங்கி இருக்கும் வெளிநாட்டினரை கைது ச... மேலும் பார்க்க

புதுச்சேரி: இரவு நேர பாதுகாப்புப் பணியில் கமாண்டோ படையினர் | Photo Album

இரவு நேர பாதுகாப்புப் பணியில் ஆயுதம் ஏந்திய கமாண்டோக்கள் மற்றும் போலீசார்இரவு நேர பாதுகாப்புப் பணியில் ஆயுதம் ஏந்திய கமாண்டோக்கள் மற்றும் போலீசார்இரவு நேர பாதுகாப்புப் பணியில் ஆயுதம் ஏந்திய கமாண்டோக்க... மேலும் பார்க்க

மலர்களுக்கு பதில் மாத்திரை; ஆக்சிஜன் மாஸ்க்குடன் வெட்டிங் போட்டோஷூட் நடத்திய ஜோடி - பின்னணி என்ன?

டெல்லியில் காற்றின் மாசுபாடு அபாயகரமான அளவை எட்டியுள்ள நிலையில், ஆக்சிஜன் முகக்கவசம் அணிந்து திருமண போட்டோஷூட் நடத்திய காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி, பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.டெல்லியைச... மேலும் பார்க்க

Delhi Blast: நாடு முழுவதும் 4 நகரங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி -NIA விசாரணையில் அதிர்ச்சி

டெல்லி செங்கோட்டை அருகில் கடந்த 10ம் தேதி மாலை நடந்த கார் குண்டு வெடிப்பில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இக்குண்டு வெடிப்பை நடத்திய டாக்டர் உமர் மொகமத் காரிலேயே இற... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் செக்- இன் செய்தவுடன் பிரியும் தம்பதிகள் - பிரபலமாகும் `ஏர்போர்ட் டைவர்ஸ்'!

தம்பதியினர் பயணம் செய்யும்போது மகிழ்ச்சியாக இருந்தாலும் அங்கே ஏற்படும் சிறு சிறு கருத்து வேறுபாடுகள், சண்டைகள் பயணத்தின் தொடக்கத்தையே பதட்டமாக மாற்றப்படும் என்பதற்காக தற்போது ’ஏர்போர்ட் டைவர்ஸ்’ என்ற ... மேலும் பார்க்க

UK: 10 ஆண்டுகள் காதலித்தவர் பிரிவு; ``செயற்கை கருத்தரிப்பு செலவை ஏற்க வேண்டும்'' - காதலி கோரிக்கை

இங்கிலாந்தைச் சேர்ந்த 34 வயதான பெண் ஒருவர், 38 வயதான ஆணை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். எட்டு வருடங்களாக இருவரும் ஒரே வீட்டில் தங்கி, திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்துள்ளனர்.இந்த நிலையில், ... மேலும் பார்க்க