செய்திகள் :

"கும்கி 1-க்கும், கும்கி 2-க்கும் எந்த தொடர்பும் இல்ல; 100% நட்பு, 0% லவ்"- பிரபு சாலமன்

post image

இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த படம் 'கும்கி'.

தற்போது அதன் இரண்டாம் பாகமான 'கும்கி 2' நேற்று(நவ.14) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

இந்தப் படத்தில் அறிமுக நடிகர் மதி, மற்றும் நடிகை ஷ்ரிதா ராவ் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

 'கும்கி 2'
'கும்கி 2'

இந்நிலையில் இயக்குநர் பிரபு சாலமன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

"கும்கி 1-க்கும், கும்கி 2-க்கும் எந்த தொடர்பும் இல்லை. 'கும்கி' என்பது ஒரு யானையின் டேக் (Tag) தான்.

சிறு வயதில் இருந்து ஒருவனின் வாழ்வியலை கோர்வையாக எடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.

அவனுக்கு இந்த சமூகத்தால், மனிதர்களால், அரசியலால் வரும் பிரச்னைகளைத் தாண்டி தன்னுடைய நட்பை எப்படி ஒருவன் காப்பாற்றி கொள்கிறான் என்பது தான் இதன் போக்கு.

இந்தப் படத்தில் 100 சதவிகிதம் நட்பும், 0 சதவிகிதம் லவ் இருக்கும். இந்தப் படத்தில் கதாநாயகன், கதாநாயகி எல்லாம் இல்லை.

இயக்குநர் பிரபு சாலமன்
இயக்குநர் பிரபு சாலமன்

இது முழுக்க முழுக்க பயணம் தொடர்பான கதை. நான் சமூக வலைதளங்கள் எதிலும் இல்லை. நேரம் கிடைக்கும்போதெல்லாம் பயணம் செய்வேன்.

என்னுடைய பிரதிபலிப்புதான் 'மைனா', 'கும்கி', 'கயல்' படங்கள் எல்லாம்." என்று பேசியிருக்கிறார்.

Friends: `அந்த கடிகாரம் உடையும் காட்சி ஷூட் மறக்க முடியாது; ஏன்னா.!’ - `கிச்சனமூர்த்தி' ரமேஷ் கண்ணா

மறைந்த இயக்குநர் சித்திக் இயக்கத்தில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம் அடுத்த வாரம் ரீ ரிலீஸாகிறது. விஜய் - சூர்யா காம்போ, ஆக்‌ஷன், வடிவேலுவின் காமெடி, நெகிழ... மேலும் பார்க்க

"இதனால்தான் நடிப்பதில்லை; சினிமாவில் நான் இன்னொரு ரவுண்ட் வருவேன்" -ரோஜா நெகிழ்ச்சி

12 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைத்துறைக்கு வருகிறார் நடிகை ரோஜா.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல்வேறு மொழிகளில் நடித்து வந்த ரோஜா கடைசியாக 2015-ம் ஆண்டு ஷாஜி கைலாஸ் இயக்கத்தில் `என்... மேலும் பார்க்க

Director V Sekar: பிரபல இயக்குநர் வி.சேகர் காலமானார்!

இயக்குநர் வி.சேகர் காலமானார். அவருக்கு வயது 72.உடல்நலக் குறைவு காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 10 நாள்களாகச் சிகிச்சை பெற்று வந்தார்.V Sekhar இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த... மேலும் பார்க்க

கிணறு விமர்சனம்: யதார்த்தமான எழுத்து, ஆனா மேக்கிங்? பாதி கிணற்றை மட்டுமே தாண்டும் குழந்தைகள் சினிமா!

கோடை விடுமுறையில் குதூகலமாக ஒரு கிணற்றில் குளித்துக்கொண்டிருக்கும் நான்கு சிறுவர்களை, அக்கிணற்றின் உரிமையாளர் வந்து அடித்து வெளுக்கிறார். இதனால், சிறுவர்களில் ஒருவரான பெத்தப்பனுக்கு (கனிஷ்குமார்) 'தங்... மேலும் பார்க்க

November Releases: 'இந்த மாசம் செம்ம டிரீட் இருக்கு’ - வரிசைக் கட்டி நிற்கும் நவம்பர் ரிலீஸ் படங்கள்

இந்தாண்டு ரிலீஸுக்கு ப்ளான் செய்யப்பட்ட பல படங்கள், வருட இறுதி வந்துவிட்டதால் இப்போது அடுத்தடுத்து ரிலீஸ் ரேஸுக்கு தயாராகி வருகின்றன. எப்போதுமே ஒரு திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை முன்பே கணக்கிட்டு அதற்க... மேலும் பார்க்க