"என்டர்டெயினர் படமாக இருந்தா கருத்து காணாமல் போய்விடும்"- 'ஆண் பாவம் பொல்லாதது' ...
IPL Retentions : சென்னை அணியில் சாம்சன்; வெளியேறியது யார்? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஐ.பி.எல் மினி ஏலம் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் நிலையில், அணிகள் தங்களின் டிரேடிங் அப்டேட்ஸை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர். அதன்படி, சஞ்சு சாம்சன் சென்னை அணிக்கு வருவது உறுதியாகியிருக்கிறது.

சென்னை அணியிடமிருந்து 14 கோடி ரூபாய்க்கு ஜடேஜாவையும் 2.4 கோடி ரூபாய்க்கு சாம் கரணையும் வாங்கிவிட்டு 18 கோடிக்கு சாம்சனை ராஜஸ்தானை அணி கொடுத்திருக்கிறது.
அதேமாதிரி, சன்ரைசர்ஸ் அணியிலிருந்து 10 கோடி ரூபாய்க்கு முகமது ஷமியை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வாங்கியிருக்கிறது. கொல்கத்தா அணியிலிருந்து 30 லட்ச ரூபாய்க்கு மயங்க் மார்கண்டேவை மும்பை அணி வழங்கியிருக்கிறது. அதேமாதிரி, மும்பை அணியிலிருந்து 30 லட்ச ரூபாய்க்கு அர்ஜூன் டெண்டுல்கரை லக்னோ அணி வாங்கியிருக்கிறது. நிதிஷ் ராணாவை 4 கோடி கொடுத்து ராஜஸ்தான் அணியிலிருந்து டெல்லி கேப்பிடல்ஸ் அணி வாங்கியிருக்கிறது. டோனோவன் பெரேராவை 1 கோடிக்கு டெல்லி அணியிலிருந்து ராஜஸ்தான் அணி வாங்கியிருக்கிறது.

வீரர்களை தக்கவைக்கும் பட்டியலை வெளியிட இன்றே கடைசி நாள் என்பதால் ஐ.பி.எல் அணிகளிடமிருந்து அடுத்தடுத்த அப்டேட்ஸ் வெளியாகிக் கொண்டே இருக்கும்.

















.jpg)

