செய்திகள் :

"ஜட்டுவை கொடுத்தது, ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாகத்தான் இருக்கும்; ஆனால்!"- CSK காசி விஸ்வநாதன்

post image

ஐ.பி.எல் மினி ஏலம் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் நிலையில், அணிகள் தங்களின் டிரேடிங் அப்டேட்ஸை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர்.

அதன்படி, சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணி வாங்கியிருப்பது உறுதியாகியிருக்கிறது.

சென்னை அணியிடமிருந்து 14 கோடி ரூபாய்க்கு ஜடேஜாவையும் 2.4 கோடி ரூபாய்க்கு சாம் கரணையும் வாங்கிவிட்டு 18 கோடிக்கு சாம்சனை ராஜஸ்தான் அணி கொடுத்திருக்கிறது.

சஞ்சு சாம்சன் - ரவீந்திர ஜடேஜா
சஞ்சு சாம்சன் - ரவீந்திர ஜடேஜா

இந்நிலையில் சிஎஸ்கே CEO காசி விஸ்வநாதன் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே வாங்கியது குறித்தும், ஜடேஜா மற்றும் சாம் கரண் ஆகியோரை விடுவித்தது குறித்தும் பேசியிருக்கிறார்.

இதுதொடர்பாக பேசியிருக்கும் காசி விஸ்வநாதன் , "சிஎஸ்கே அணிக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் தேவைப்படுகிறது.

ஜட்டுவை (ஜடேஜா) சிஎஸ்கே அணியில் இருந்து விடுவிப்பது ஒரு கடினமான முடிவுதான். சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு அவரும் முக்கியப் பங்காற்றியிருக்கிறார்.

ஆனால் அணிக்கு ஒரு மாற்றம் தேவைப்படுகிறது. பரஸ்பர உடன்பாடு அடிப்படையில் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

நான் ஜடேஜாவிடம் பேசியபோது அவருக்கும் ஒரு பிரேக் தேவைப்படுவது தெரிந்தது.

சாம் கரண் எங்களுடன் 2020-ல் இருந்து பயணித்தார். அணிக்காக தொடர்ந்து சிறப்பாக விளையாடினார்.

ஜட்டுவையும், சாம் கரணையும் விடுவித்தது நாங்கள் எடுத்த ஒரு கடினமான முடிவுதான்.

அடுத்த சில வருடங்களுக்கு அணியை வலுவாக உருவாக்க வேண்டும் என்பது சிஎஸ்கே நிர்வாகத்திற்கு மிக முக்கியமான ஒன்று.

Ravindra Jadeja | ரவீந்திர ஜடேஜா
Ravindra Jadeja | ரவீந்திர ஜடேஜா

சஞ்சு சாம்சன் ஐபிஎலில் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார். அதுமட்டுமின்றி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்தியிருக்கிறார்.

அவருடைய அனுபவம் மற்றும் வயதை வைத்து அவர் சிஎஸ்கே-விற்கு தேவையான ஒரு நபர் என்ற முடிவை எடுத்தோம்.

ஜட்டு மற்றும் சாம் கரணை விடுவித்தது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாகத் தான் இருக்கும்.

ஆனால் அணியின் தேவைக்காக தான் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். வரும் வருடங்களிலும் சிஎஸ்கே எப்போதும் போல சிறப்பாக விளையாடும்" என்று தெரிவித்திருக்கிறார்.

``ஒரு தவறும் செய்யவில்லை; அடி மேல் அடி, நொறுங்கிப் போனேன்" - மத தாக்குதல் பற்றி ஜெமிமா ஓபன்!

ஜெமிமா ரோட்ரிக்ஸ்... இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் இனி மறக்க முடியாத பெயர்.நடந்து முடிந்த மகளிர் ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி முதல்முறையாகச் சாம்பியன் பட்டத்தை வென்று அரைநூற்றாண்டுக்... மேலும் பார்க்க

ரூ.2.6 கோடிக்கு குஜராத் அதிரடி வீரரை ட்ரேட் செய்த மும்பை; கூடுதலாக LSG-யிலிருந்து ஒரு ஆல்ரவுண்டர்!

அடுத்தாண்டு ஐ.பி.எல் சீசனுக்கான மினி ஏலம் டிசம்பரில் நடக்கவிருக்கிறது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் ஏலத்தில் விடும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 15-ம் தேதிக்குள் சமர்ப்ப... மேலும் பார்க்க

"நீங்கள் கிரிக்கெட் விளையாடுங்கள்; பிரச்னைகளை நான் பார்க்கிறேன் என்பார்" - நெகிழும் ஹர்மன்ப்ரீத்

மகளிர் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்த இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இன்று (நவ.13) சென்னையில் நடைபெற்ற தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார்.அப்போது பேசிய ஹர்மன்ப்ரீத... மேலும் பார்க்க

``நான் பார்த்து வியந்த ரஜினி சார் போனில் அழைத்து பேசினார்'' - நெகிழ்ந்த ஹர்மன்ப்ரீத் கவுர்

மகளிர் உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்த இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இன்று(நவ.13) சென்னையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "சிற... மேலும் பார்க்க

IPL: டீல் ஓகே ஆனால் கேப்டன் பதவி வேண்டும் - டிமாண்ட் வைக்கிறாரா ஜடேஜா?

2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலமானது வரும் டிசம்பர் இரண்டாம் வாரம் நடைபெற இருக்கிறது. இதனிடையே நவம்பர் 15 ஆம் தேதிக்குள் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் தங்களது அணியில் இருந்து விட... மேலும் பார்க்க