'என்னை தாக்க முயன்ற முக்கிய குற்றவாளியை பனையூரில் பதுக்கி வைத்துள்ளார்கள' -எம்.எ...
"நீங்கள் கிரிக்கெட் விளையாடுங்கள்; பிரச்னைகளை நான் பார்க்கிறேன் என்பார்" - நெகிழும் ஹர்மன்ப்ரீத்
மகளிர் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்த இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இன்று (நவ.13) சென்னையில் நடைபெற்ற தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார்.
அப்போது பேசிய ஹர்மன்ப்ரீத் கவுர், "நான் கிரிக்கெட்டிற்காகவே பிறந்திருக்கிறேன். என்னுடைய அப்பா, அம்மா எனக்கு முழு ஆதரவைக் கொடுத்திருக்கிறார்கள்.
அவர்களால்தான் நான் இன்று இங்கு இருக்கிறேன். வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். அதில் நாம் எப்படி முன்னேறி செல்கிறோம் என்பதுதான் முக்கியம்.

பெண்களாலும் உலகக்கோப்பையை வெல்ல முடியும். கோப்பையை வெல்ல வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாக இருந்தது. தற்போது அதனை நாங்கள் கைப்பற்றிவிட்டோம்" என்று கூறியிருக்கிறார்.
தொடர்ந்து அவருடைய பயிற்சியாளர் அமோல் முஜும்தார் குறித்து பேசிய ஹர்மன்ப்ரீத் கவுர், "நாங்கள் கோப்பையை வெல்ல எங்களது பயிற்சியாளரும் ஒரு முக்கிய காரணமாக இருந்தார்.
இரண்டு வருடங்களுக்கு முன்புதான் எங்கள் அணிக்கு அவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். முதல் முறையாக அவர் எனக்கு ஃபோன் செய்தபோது 2 மணி நேரம் பேசினேன்.

முதல் காலில் இப்படி யாரிடமும் நான் ஓப்பனாகப் பேசியது இல்லை. இந்த விளையாட்டு எனக்கு எவ்வளவு முக்கியம், இந்த நாட்டிற்காக நான் என்ன செய்ய நினைக்கிறேன் என்பதை அவரிடம் தொடர்ந்து பகிர்ந்துகொண்டே இருப்பேன்.
உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் நான் செய்து தருகிறேன். நீங்கள் கிரிக்கெட் மட்டும் விளையாடுங்கள். பிரச்னைகளை எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்பார். அவர் இடத்தை யாரும் நிரப்பவே முடியாது" என்று பேசியிருக்கிறார்.


















