செய்திகள் :

Parasakthi: ''வாழ்க்கை ஒரு வட்டம்" - யுவன் - பவதாரிணியுடனான நினைவுகளைப் பகிரும் சுதா கொங்கரா

post image

'பராசக்தி' திரைப்படம் அடுத்தாண்டு பொங்கல் ரிலீஸாக திரைக்கு வருகிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஶ்ரீலீலா ஆகியோர் படத்தில் நடித்திருக்கிறார்கள்.

ஜி.வி. பிரகாஷ் இசையமைத்த இத்திரைப்படத்தின் முதல் சிங்கிளான 'அடி அலையே' பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல கவனம் பெற்றிருந்தது.

SK Parasakthi
SK Parasakthi

இத்திரைப்படம் ஜி.வி-யின் 100-வது ஆல்பம் என்பதால் அவருக்கும் இந்தத் திரைப்படம் கூடுதல் ஸ்பெஷல். இப்படத்தில் மற்றொரு பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாடியிருக்கிறார்.

யுவனின் 100-வது திரைப்படமான 'பிரியாணி' படத்தில் ஜி.வி. பிரகாஷும் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 'பராசக்தி' படத்தில் யுவன் சங்கர் ராஜா பாடியிருப்பது குறித்து இயக்குநர் சுதா கொங்கரா சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றைப் போட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில் சுதா கொங்கரா, "நானும் பவதாரிணியும் 'மித்ர்' படத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது, யுவன் கம்போஸ் செய்த பாடல்களின் டேப்பை எங்கள் இருவரையும் கேட்க வைப்பார்.

இன்று அவர் என்னுடைய படத்திற்காகப் பாடியிருக்கிறார். வாழ்க்கை ஒரு வட்டமாக உணர்கிறேன்.

Sudha Kongara - Parasakthi
Sudha Kongara - Parasakthi

இதுவொரு வாழ்நாள் நினைவு. ஜி.வி. பிரகாஷின் 100-வது ஆல்பத்தை இவ்வளவு சிறப்பானதாக மாற்றியதற்கு நன்றி.

யுகபாரதியின் அற்புதமான வரிகளுக்கு உயிர்கொடுத்து அழகான பாடலைப் பாடியிருக்கிறீர்கள் யுவன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

`கனத்த இதயத்துடன் இந்த முடிவை எடுத்திருக்கிறேன்’ - ரஜினி, கமல் படத்திலிருந்து விலகிய சுந்தர்.சி

ரஜினிகாந்த்தை வைத்து அவரது 173-வது படத்தை சுந்தர்.சி. இயக்குவதாகவும், கமல்ஹாசன் அப்படத்தைத் தயாரிப்பதாகவும் அறிவிப்புகள் வெளியானது, கோலிவுட் வட்டாரத்தையே இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.ரஜினியின் 'அரு... மேலும் பார்க்க

``அன்னைக்கு 150 ரூபாய் கொடுக்க என் கிட்ட காசு இல்ல''-மிடில் கிளாஸ் அனுபவம் குறித்து சந்தோஷ் நாராயணன்

நகைச்சுவை நடிகர் முனீஷ்காந்த், ஹீரோவாக நடித்துள்ள படம், ‘மிடில் கிளாஸ்’. கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ள இதில், விஜயலட்சுமி, காளி வெங்கட், ராதா ரவி, குரேஷி, வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்... மேலும் பார்க்க

``இந்த வெற்று மன்னிப்பையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது" - நடிகை கெளரி கிஷன்

தமிழ்த் திரையுலகில் ‘96’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் கௌரி கிஷன். அதன்பிறகு ‘மாஸ்டர்’, ‘கர்ணன்’ போன்ற திரைப்படங்களிலும், மலையாளத் திரைப்படங்களிலும் நடித்துத் பிரபலமானார்.தற்போது ‘OTHERS’ என்ற தமிழ் ப... மேலும் பார்க்க

யூ டியூபில் பேசறதுக்கு திட்டினாங்க‌, இப்ப வெடிகுண்டு மிரட்டல்! - ஏ.எல்.எஸ்.ஜெயந்தி கண்ணப்பன்

சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த விமானம், சென்னையில் இயங்கி வரும் சில வெளிநாட்டுத் தூதரங்கங்கள், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி,... மேலும் பார்க்க

"என் தம்பிங்க இல்லனா நான் இல்ல; இந்த சினிமா உலகத்தை அவுங்க தான் காமிச்சாங்க"- கண் கலங்கிய தேவா

பிரபல இசையமைப்பாளரும், தேவாவின் சகோதரருமான சபேஷ் உடல்நலக் குறைவால் கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி காலமானார். அவருடைய நினைவு அஞ்சலி கூட்டம் நேற்று (நவம்பர் 09) நடைபெற்றது. அதில் சபேஷ் குறித்து பேசிய இசையமை... மேலும் பார்க்க