'என்னை தாக்க முயன்ற முக்கிய குற்றவாளியை பனையூரில் பதுக்கி வைத்துள்ளார்கள' -எம்.எ...
மலர்களுக்கு பதில் மாத்திரை; ஆக்சிஜன் மாஸ்க்குடன் வெட்டிங் போட்டோஷூட் நடத்திய ஜோடி - பின்னணி என்ன?
டெல்லியில் காற்றின் மாசுபாடு அபாயகரமான அளவை எட்டியுள்ள நிலையில், ஆக்சிஜன் முகக்கவசம் அணிந்து திருமண போட்டோஷூட் நடத்திய காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி, பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
டெல்லியைச் சேர்ந்த சமூக ஊடக பிரபலமான ரிஷப் சுக்லா, இந்த போட்டோஷூட்டை நடத்தியுள்ளார். அவரும், மாடல் முஸ்கான் நத்பாலும் மணமக்கள் போல உடையணிந்து, முகத்தில் ஆக்சிஜன் முகக்கவசங்களுடன் புகைப்படம் எடுத்துள்ளனர்.
மலர்கள் வைத்து அலங்கரிக்கப்படுவதற்கு பதிலாக, சுற்றிலும் மருந்து மாத்திரைகள் குவிக்கப்பட்டு, அதன் மத்தியில் இந்த ஜோடி நின்றனர்.
”அதிக புகைமூட்டத்துடன் கூடிய போட்டோஷூட்” என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த வீடியோ டெல்லியின் தற்போதைய சூழலை சித்திரிக்கிறது.
இது பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் காற்று மாசுபாட்டின் தீவிரத்தையும், அது மக்களின் கொண்டாட்டங்களில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தையும் எடுத்துரைக்கும் ஒரு விழிப்புணர்வு முயற்சி என ரிஷப் சுக்லா தெரிவித்துள்ளார்.
சமீபத்திய அறிக்கையின்படி, டெல்லியின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 400-ஐத் தாண்டியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



















