மலர்களுக்கு பதில் மாத்திரை; ஆக்சிஜன் மாஸ்க்குடன் வெட்டிங் போட்டோஷூட் நடத்திய ஜோட...
விமான நிலையத்தில் செக்- இன் செய்தவுடன் பிரியும் தம்பதிகள் - பிரபலமாகும் `ஏர்போர்ட் டைவர்ஸ்'!
தம்பதியினர் பயணம் செய்யும்போது மகிழ்ச்சியாக இருந்தாலும் அங்கே ஏற்படும் சிறு சிறு கருத்து வேறுபாடுகள், சண்டைகள் பயணத்தின் தொடக்கத்தையே பதட்டமாக மாற்றப்படும் என்பதற்காக தற்போது ’ஏர்போர்ட் டைவர்ஸ்’ என்ற புதிய ட்ரெண்ட் பிரபலமாகி வருகிறது.
இதன் மூலம் தம்பதியினர் மன அழுத்தம் இன்றி, பதட்டமின்றி பிடித்துவற்றை செய்து பயணிக்க உதவுவதாக கூறப்படுகிறது.
ஏர்போர்ட் டைவர்ஸ் என்றால் என்ன
’ஏர்போர்ட் டைவர்ஸ்’ என்பது உண்மையாகவே இருவரும் பிரிவதல்ல, தற்காலிகமாக இருவரும் வெவ்வேறு விஷயங்களை கவனம் செலுத்துவதாகும்.
விமான நிலையத்தில் செக்- இன் மற்றும் பாதுகாப்பு சோதனைகளை முடித்த பிறகு பயணம் செய்யும் தம்பதியினர் தங்களுக்கு பிடித்தமான செயல்களில் ஈடுபட நேரங்களை ஒதுக்குகின்றனர்.

இதன் மூலம் அவர்கள் பயணத் தொடக்கத்தில் ஏற்படும் சிறிய விவாதங்கள், சண்டைகளை தவிர்க்க முடியும் என்கின்றனர்.
பிரிட்டனை சேர்ந்த பயண பத்திரிகையாளரான ஹியூ ஆலிவர் என்பவர் இந்த ஏர்போர்ட் டைவர்ஸ் என்ற வார்த்தை முதன்முதலாக பயன்படுத்தி இருக்கிறார்.
அது அவருடைய பயணத்தின் போது உதவியாக இருந்ததாக கூறியிருக்கிறார். அதாவது அவருக்கும் வருங்கால மனைவிக்கும் விமான நிலையத்தில் வெவ்வேறு பழக்கங்கள் இருப்பதால் அதனை தங்களுக்குள் தேவையில்லாமல் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று சோதனைக்கு பிறகு இருவரும் தங்களுக்கு பிடித்தமான விஷயங்களை நேரத்தை செலவிட்டதாக அவர் கூறியிருக்கிறார்.

அதாவது அவரது வருங்கால துணைவி சுங்கவரி இல்லாத கடைகளில் பொருட்களை வாங்க விரும்புவார்.
ஆனால் விமான நிலையத்திற்குள் நுழைந்ததும் அமைதியாக உட்காருவதை தான் ஆலிவர் விரும்புவதாகவும் இதனால் அவரவர்களுக்கு பிடித்தமான விஷயங்களை அவர்கள் விருப்பப்படி ஒன்றாக பயணித்துக் கொண்டே செய்யலாம் என்று அவர் சமூக ஊடகங்களில் குறிப்பிட்டு இருக்கிறார்.
தம்பதியினர் இருவரும் ஒன்றாக பயணித்தாலும் அவர்களுக்கு பிடித்தமான விஷயங்களை கவனம் செலுத்துவதால் இந்த விஷயம் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. இந்த ’ஏர்போர்ட் டைவர்ஸ்’ பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கமெண்டில் சொல்லுங்கள்!


















