செய்திகள் :

``நான் பார்த்து வியந்த ரஜினி சார் போனில் அழைத்து பேசினார்'' - நெகிழ்ந்த ஹர்மன்ப்ரீத் கவுர்

post image

மகளிர் உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்த இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இன்று(நவ.13) சென்னையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "சிறு வயதில் இருந்தே கோப்பையை வெல்ல வேண்டும் என்பது என்னுடைய கனவாக இருந்தது. கோப்பையை வென்ற அந்த நாள் என் வாழ்க்கையில் முக்கியமான ஒரு நாளாக இருக்கும்.

கிரிக்கெட்டிற்காகவே நான் பிறந்திருப்பதாக நினைக்கிறேன். கிரிக்கெட்டை தவிர வேறு எதுவும் எனக்கு தெரியாது. எனக்கு எல்லாமே கிரிக்கெட் தான்.

ICC Women's World Cup - India
ICC Women's World Cup - India

இந்த உலகக்கோப்பையில் நிறைய கற்றுக்கொண்டேன். நிறைய ஏற்ற இறக்கங்கள் இருந்தன. சொந்த மைதானத்தில் விளையாடுவதால் சூழல் எப்படி இருக்கும் என்று தெரியும். அதனால் நம்மால் சிறப்பாக விளையாட முடியும் என்று நம்பினோம்.

எங்களுடைய பலம் என்னவென்று எங்களுக்கு தெரியும். டிரஸிங் ரூமில் மிகவும் பாசிடிவ்வாக பேசிக்கொள்வோம். அதுதான் உலகக்கோப்பை போட்டியில் பிரதிபலித்தது.

நிறைய உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடியிருக்கிறேன். கடைசி நிமிடத்தில் ஏதோ ஒரு சறுக்கல் ஏற்பட்டுவிடும். இந்த முறை எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே எங்களுக்கு இருந்தது.

ஒவ்வொரு வீரரும் மற்றவருக்கும் துணையாக இருந்து விளையாடினோம். கோப்பை ரொம்ப முக்கியம். அந்த கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டோம்" என்று கூறினார்.

அப்போது தொகுப்பாளர் "கப்பு ரொம்ப முக்கியம் பிகிலு" என்று சொல்லச் சொன்னார். அதை ஹர்மன்ப்ரீத் கவுரும் சிரித்துக்கொண்டு நெகிழ்ச்சியாக சொன்னார்.

ஹர்மன்ப்ரீத் கவுர்
ஹர்மன்ப்ரீத் கவுர்

தொடர்ந்து சென்னை குறித்து பேசிய ஹர்மன்ப்ரீத் கவுர், " சென்னை எனக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்று. இங்கு வரும்போதெல்லாம் மக்கள் எனக்கு நிறைய அன்பைக் கொடுக்கிறார்கள்.

இங்குள்ள உணவும் எனக்கு மிகவும் பிடிக்கும். என் சொந்த ஊரை விட்டு வெளியில் செல்லும்போதெல்லாம் தோசையை தான் நான் விரும்பி சாப்பிடுவேன்.

கோப்பை வென்ற பிறகு நான் தாய்லாந்து சென்றிருந்தேன். அந்த சமயம் எனக்கு ரஜினி சார் அழைத்து சில நிமிடம் பேசினார். சிறுவயதில் டிவியில் பார்த்து வியந்த ஒரு நபர் போனில் அழைத்து பேசியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது" என்று கூறியிருக்கிறார்.

IPL: டீல் ஓகே ஆனால் கேப்டன் பதவி வேண்டும் - டிமாண்ட் வைக்கிறாரா ஜடேஜா?

2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலமானது வரும் டிசம்பர் இரண்டாம் வாரம் நடைபெற இருக்கிறது. இதனிடையே நவம்பர் 15 ஆம் தேதிக்குள் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் தங்களது அணியில் இருந்து விட... மேலும் பார்க்க

``திருமணத்திற்குப் பிறகு கோலியிடம் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன" - முன்னாள் சக வீரர் பகிர்வு

விராட் கோலி, கிரிக்கெட் உலகில் இந்தியாவைக் கடந்து உலக அளவில் பல தசாப்தங்களுக்கு ஒலிக்கும் பெயர்.சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களில் சதமடித்திருக்கும் சச்சினின் சாதனையை முறியடிக்கும் ஒரே வீரராகப் பார்க்கப... மேலும் பார்க்க

Pratika Rawal: ஜெய்ஷா அனுப்பிய மெஸ்ஸேஜ்; பதக்கத்தை உறுதி செய்த வீராங்கனை!

இந்திய மகளிர் அணியின் ஓப்பனிங் பேட்டர் பிரதிகா ரேவால் (Pratika Rawal) தான் ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 வெற்றியாளர்களுக்கான பதக்கத்தைப் பெறுவதை சமீபத்திய நேர்காணலில் உறுதிபடுத்தியுள்ளார். உலகக் கோப்... மேலும் பார்க்க

`ஷமியின் கரியரை முடிக்கும் BCCI தேர்வுக் குழு’ - வெளிப்படையாக பேசிய பெர்சனல் கோச்!

2023-ல் சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா இறுதிப்போட்டி வரை சென்றதென்றால் அதற்கு முக்கிய காரணமானவர்களில் ஒருவர் முகமது ஷமி.வெறும் ஏழே போட்டிகளில் 10.7 ஆவரேஜில் மூன்று முறை ... மேலும் பார்க்க

`தோனி ஓய்வு பெறுகிறாரா?' - சிஎஸ்கே காசி விஸ்வநாதனின் 'சிக்ஸர்' பதில்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றாலும் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு வரை சிஎஸ்கே கேப்டனாக இருந்த தோனி,... மேலும் பார்க்க