Harmanpreet Kaur: தமிழகம் வந்த இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்|Phot...
APPLE: இந்த பை 20,000 ரூபாயா? - இதை வடிவமைத்தவர் யார் தெரியுமா?
ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன்களை எடுத்துச் செல்வதற்காக புதிய பையை அறிமுகப்படுத்தி இணையத்தில் கடும் எதிர்வினைகளையும் கேலிகளையும் சந்தித்து வருகிறது.
அமெரிக்க தொழில்நுட்ப பெருநிறுவனமான ஆப்பிள் (Apple Inc.) அதன் புதுமையான கருவிகளுக்கு பெயர்பெற்றது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஆப்பிள் அறிமுகப்படுத்தும் கேட்ஜெட்களில் புதுமையான விஷயங்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துவருகிறது.
கடந்த செவ்வாய் (நவ.11) வெளியான ஐபோன் பாக்கெட் இதில் அடுத்த நிலைக்கு சென்று கடுமையாக சாடப்படுகிறது. உங்கள் மொபைல் சாதனத்தை பாக்கெட் இல்லாத உடையணிந்திருக்கும்போது எடுத்துச்செல்ல இது ஒரு புதுமையான வழியாக இருந்தாலும், இதற்கு இந்திய மதிப்பில் 13,300 ரூபாய் முதல் 20,388 ரூபாய் வரை விலை வைத்திருப்பது கேலிகளுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
ஊட்டி, கொடைக்கானலில் கம்பளியால் பின்னப்பட்ட குல்லாக்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும். அதேப்போன்ற துணியால் ஆன இதற்கு ஏன் 200 டாலர் எனக் கேள்வி எழுப்புகின்றனர்.
இதேப்போல சில மாதங்களுக்கு முன்பு ஆப்பிளில் ரூ.2000 மதிக்கத்தக்க விலையில் லேப்டாப் மற்றும் பிற கருவிகளைத் துடைக்கும் துணி விற்கப்பட்டபோது இதேபோன்ற எதிர்வினைகள் எழுந்தன. அப்போது அந்த துணியைக் கூட வாங்கிய ஆப்பிளின் விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு இது தர்ம சங்கடமான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த பை லிமிடட் எடிஷனாக விற்கப்படும் என ஆப்பிள் வெளியிட்ட செய்தியறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆப்பிள் இணை நிறுவனரான ஸ்டீவ் ஜாப்ஸ் அணியும் கருப்பு ஆமை கழுத்து டி-சர்ட்டை வடிவமைத்த இஸ்ஸி மியாகே என்ற ஆடை வடிப்பாளருடன் இணைந்து இந்த பையை வடிவமைத்துள்ளனர்.
இதில் நீளமான கைப்பட்டை மற்றும் குட்டையான கைப்பட்டை என இரண்டு வகைகள் உள்ளது. குட்டையான கைப்பட்டை பளீச்சிடும் 8 வண்ணங்களிலும் மற்றொன்று 3 வண்ணங்களிலும் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
முந்தைய காலத்தில் ஐ பாட் பயன்படுத்த ஐ பாட் சாக்ஸை விற்றது ஆப்பிள். அதுவும் இந்த புதிய அறிமுகத்துக்கு இன்ஸ்பிரேஷன். ஐபோன் வைப்பதுடன் ஆப்பிள் விஷன் ப்ரோ பேட்டரி பேக்கை வைக்கவும் இது ஏதுவானதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
ஆப்பிள் எப்போதும் டெக்னாலஜியில் ஜெயண்ட். ஆனால் ஃபேஷன் அதற்கு கைவரவில்லை. எனவே நிறுவனத்தை லைஃப் ஸ்டைல் பக்கம் திருப்பாமல், டெக்னாலஜியில் புதுமைகளைக் கொடுக்க வேண்டும் என்பதே ஆப்பிளர்களின் கோரிக்கையாக இருக்கிறது. இந்த தாயாரிப்பு குறித்த உங்கள் கமண்டை தெரிவியுங்கள்!


















