செய்திகள் :

Globetrotter: ''இம்முறை காவல்துறை..." - ரசிகர்களுக்கு இயக்குநர் ராஜமெளலி அட்வைஸ்

post image

ராஜமௌலியின் 'க்ளோப்டிராட்டர்' படத்தின் நிகழ்வு வருகிற நவம்பர் 15-ம் தேதி ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளது.

மகேஷ் பாபு, ப்ரித்விராஜ், ப்ரியங்கா சோப்ரா உட்பட பலரும் இந்த பிரமாண்ட படைப்பில் நடித்து வருகிறார்கள்.

Rajamouli and Mahesh Babu
Rajamouli and Mahesh Babu

மாலை 7 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்வு ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரலையாக ஒளிபரப்பாகவுள்ளது.

இந்த நிகழ்வு குறித்தும், அந்த நிகழ்வுக்கு ரசிகர்கள் பாதுகாப்பாக வருவதற்கான வழிமுறைகள் குறித்தும் இயக்குநர் ராஜமௌலி காணொளியில் பேசி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அந்தக் காணொளியில் ராஜமௌலி, "நீங்கள் அனைவரும் நமது 'க்ளோப் டிராட்டர்' பட நிகழ்வுக்காக ஆவலுடன் காத்திருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். நானும் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்.

நமது நிகழ்ச்சியை வெற்றிகரமாக்க, உங்கள் ஆதரவு மிகவும் முக்கியம். காவல் துறை நமது நிகழ்ச்சியின் பிரபலத்தையும் நமது பாதுகாப்பையும் கருத்தில்கொண்டு மிகக் கடுமையான விதிமுறைகளை விதித்துள்ளது.

அவை அனைத்தையும் நாம் பின்பற்ற வேண்டும். நிகழ்ச்சிக்கு எப்படி வர வேண்டும், எங்கு வர வேண்டும் என்பதற்கான வழிமுறைகள் உள்ளன.

அதை டவுன்லோட் செய்தால் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நிகழ்ச்சிக்குச் செல்லும் வழியில் தெளிவான சைன் போர்டுகள் உள்ளன. அதனை பின்பற்றி நிகழ்வுக்கு வாருங்கள்.

சமீபத்திய நிகழ்வுகளைக் கருத்தில்கொண்டு, இம்முறை காவல்துறை மிகக் கடுமையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி உள்ளது. ஆணையர் தனிப்பட்ட முறையில் என்னிடம் 'ஏதேனும் இடையூறு ஏற்பட்டாலோ, கட்டுப்பாடு இழந்தாலோ நிகழ்ச்சி ரத்து செய்யப்படும்' எனக் கூறியிருக்கிறார்.

இவை அனைத்தையும் அவர் நமது பாதுகாப்பிற்காகத்தான் செய்கிறார்கள். எனவே, அவருக்கு முழு ஆதரவு அளித்து, நமது நிகழ்ச்சியை சிறப்பாக்குவோம்." எனக் கூறியிருக்கிறார்.

"கிட்டத்தட்ட விபத்துக்குள்ளாகும் சூழல்" - ராஷ்மிகா உடனான திகில் விமான பயணத்தை பகிர்ந்த ஷ்ரத்தா தாஸ்!

தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துவரும் நடிகை ஷ்ரத்தா தாஸ், ஒருமுறை விமானத்தில் பயணம் செய்தபோது மரணத்துக்கு அருகில் சென்ற அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். மும்பையில் இருந்து ஹைத்ராபாத்துக்கு பயணித்த... மேலும் பார்க்க

The Girlfriend Review: `சால பாகுந்தி சினிமா ரா!' - எப்படி இருக்கிறாள் இந்த `தி கேர்ள்ப்ரண்ட்'?

முதுகலைப் பட்டப்படிப்பிற்காக வெளியூருக்கு வருகிறார் பூமா தேவி (ராஷ்மிகா). பிறக்கும்போதே தாயை இழந்த பூமா தேவி, தந்தையினால் வளர்க்கப்பட்டவர். கல்லூரியில் கணிதவியல் துறையைச் சேர்ந்த விக்ரம் (தீக்‌ஷித் ஷெ... மேலும் பார்க்க

Rukmini Vasanth: 'மென் மயங்கிக் கிடந்தேனடி என் போதையே' - நடிகை ருக்மினி வசந்த் க்ளிக்ஸ் |Photo Album

Rukmini Vasanth: ``சிறு புன்னகை சிதறினாள்" - ருக்மிணி வசந்த் லேட்டஸ்ட் கிளிக்ஸ் | Photo Album மேலும் பார்க்க

தி கேர்ள் பிரண்ட்: ``பக்கபலமாக நின்ற அனைத்து ஆண்களுக்கும்" - நடிகை ராஷ்மிகாவின் எமோஷனல் கடிதம்!

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் இயக்குநர் ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ‘தி கேர்ள் பிரண்ட்’ என்றப் படத்தில் நடித்திருக்கிறார். இவருடன் நடிகர் தீக்சி... மேலும் பார்க்க

Allu Sirish: `வருவேன் உன் பின்னே' - அல்லு அர்ஜூன் தம்பி அல்லு சிரிஷுக்கு நிச்சயதார்த்தம்!

அல்லு அர்ஜூனின் சகோதரரான அல்லு சிரிஷுக்கு நேற்றைய தினம் நிச்சயதார்த்தம் நடைபெற்றிருக்கிறது. அல்லு அர்ஜூனைத் தொடர்ந்து அவருடைய குடும்பத்திலிருந்து அல்லு சிரிஷும் கடந்த 2013-ம் ஆண்டு திரைத்துறைக்குள் வந... மேலும் பார்க்க