Bank account-ல ரூ.1,20,000 உங்ககிட்ட இருந்தா... நீங்க உஷார்?! | #EmergencyFund
"கிட்டத்தட்ட விபத்துக்குள்ளாகும் சூழல்" - ராஷ்மிகா உடனான திகில் விமான பயணத்தை பகிர்ந்த ஷ்ரத்தா தாஸ்!
தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துவரும் நடிகை ஷ்ரத்தா தாஸ், ஒருமுறை விமானத்தில் பயணம் செய்தபோது மரணத்துக்கு அருகில் சென்ற அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
மும்பையில் இருந்து ஹைத்ராபாத்துக்கு பயணித்த அந்த விமானத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் உடனிருந்ததாகவும், அது புறப்பட்ட உடனேயே அவசர அவசரமாக தரையிறங்கும் சூழல் வந்ததாகவும் கூறியிருக்கிறார்.
Filmygyan என்ற சேனலுக்கு அளித்த நேர்காணலில் ராஷ்மிகா மந்தனா குறித்துப் பேசுகையில், "நானும் ராஷ்மிகாவும் ஒரு விமான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளோம். எங்கள் விமானம் கிட்டத்தட்ட விபத்துக்கு உள்ளானது, அங்கேதான் அவரைப் பார்த்தேன் மிகவும் இனிமையான நபர்" எனக் கூறியுள்ளார்.
ஷ்ரத்தா நினைவு கூர்ந்த சம்பவம் கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்றது. அவர்கள் சென்ற விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாறுமாறாக ஆடியதால் உடனடியாக தரையிறக்கப்பட்டது. டெக்கான் க்ரோனிக்கல் செய்தித்தளத்தின் அறிக்கையின்படி, மும்பையில் இருந்து புறப்பட்ட அந்த விஸ்தாரா விமானம் 30 நிமிடங்கள் கழித்து மீண்டும் மும்பைக்கே திரும்பியிருக்கிறது.
இதுகுறித்து அப்போதே ஷ்ரத்தா உடன் செல்ஃபி எடுத்துப் பதிவிட்டுள்ளார் ராஷிகா. "தெரிஞ்சுக்கங்க, இன்னைக்கு இப்படிதான் சாவுல இருந்து தப்பிச்சோம்" எனக் கேப்ஷன் எழுதியிருந்தார். அந்த புகைப்படத்தில் இருவரும் காலை முன்னால் உள்ள சீட்டில் முட்டுக் கொடுத்து இறுக்கமாக அமர்ந்திருந்தனர்.

















