``இந்த வெற்று மன்னிப்பையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது" - நடிகை கெளரி கிஷன்
RSS :'தமிழர்கள் கோவிலுக்கு செல்வதில்லையா?திராவிடர்களும் இந்துக்கள்தான்!' -மோகன் பகவத் புது விளக்கம்!
பெங்களூருவில் நடந்த ஆர்.எஸ்.எஸ் இன் நூற்றாண்டு கருத்தரங்கில் அந்த இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் திராவிட அரசியலை கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ் இன் நூற்றாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பெங்களூருவில் 'சங்பரிவாரத்தின் நூறாண்டு பயணமும் அதன் புதிய எல்லைகளும்!' என்ற தலைப்பில் இருநாள் கருத்தரங்கம் நடந்திருந்தது. அதில் பேசிய மோகன் பகவத் திராவிட அரசியலை கடுமையாக விமர்சித்திருந்தார்.
அவர் பேசியதாவது, 'திராவிட கொள்கை என்றால் என்ன? ஒரு சில திராவிட கட்சிகள் அவர்களுக்கென வகுத்துக் கொண்ட சில கொள்கைகளுக்கு ஏற்றவாறு அரசியல் சூழலை மாற்றி வைத்திருக்கின்றனர். தமிழ்நாட்டில் யாரும் கோவில்களுக்கு செல்வதில்லையா? கடவுள் வழிபாட்டைக் கூட விடுங்கள். பொங்கலை மூன்று நாட்களுக்கு கொண்டாடுகிறார்களே. அதில் ஒரு தினத்தை மாடுகளுக்கென்றே ஒதுக்கியிருக்கிறார்களே?
நம்முடைய இயக்கத்தினர் திராவிட கொள்கைகளை பின்பற்றுபவர்களையும் இந்துக்களாகத்தான் பார்க்க வேண்டும். நீங்கள் அவர்களை இந்துக்களாக பார்க்க தொடங்கினால் இன்னும் அதிகமாக அவர்களை புரிந்துகொள்ள முடியும். இன்னும் சிறப்பாக அவர்களை சமாளிக்கவும் முடியும். பொதுவெளியில் வேண்டுமானால் அவர்கள் இந்துக்கள் இல்லை என சொல்லலாம். ஆனால், அவர்களின் இதயங்களுக்கு தெரியும் அவர்கள் இந்துக்கள் என்று. திராவிட கொள்கைகளை பின்பற்றுபவர்கள் இயற்கையிலேயே இந்துக்கள்தான். அரசியலுக்காக மட்டும்தான் அவர்கள் திராவிட கொள்கைகளை பேசுகிறார்கள். அவர்கள் நம்மை விட்டு எங்கும் சென்றுவிடப்போவதில்லை.' என்றார்.














