செய்திகள் :

SIR: ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி|How to

post image

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல். தற்போது சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்.

இந்தத் திருத்தப் பணிகள் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் முதல் முகவரி வரை அனைத்து தகவல்களும் சரிபார்க்கப்படுவது... புதுப்பிக்கப்படுவது ஆகியவை நடக்க உள்ளன.

இந்த சிறப்பு தீவிர திருத்தத்திற்கு நாம் எளிதாக ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம். அது எப்படி என்பதை பார்ப்போம்... வாங்க...
SIR - ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வழிமுறை
SIR - ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வழிமுறை

> இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வாக்காளர் சேவை போர்ட்டலான voters.eci.gov.in என்ற இணையதள முகவரிக்குச் செல்லவும்.

> நீங்கள் அந்த இணையதளத்தில் ஏற்கெனவே கணக்கு வைத்திருந்தால், உங்கள் கைபேசி எண், மின்னஞ்சல் அல்லது EPIC எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழையவும் (Login). புதிய பயனராக இருந்தால், உடனடியாகப் பதிவு செய்து (Sign-Up) உள்நுழைந்து கொள்ளலாம்.

> உள்நுழைந்த பிறகு, முகப்புப் பக்கத்தில் உள்ள 'Special Intensive Revision (SIR) – 2026' என்பதை க்ளிக் செய்யவும். அதன் கீழ் உள்ள 'Fill Enumeration Form' என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

> அடுத்ததாக, மாநிலத்தைத் தேர்வு செய்யவும். உங்கள் தற்போதைய வாக்காளர் அடையாள அட்டை எண்ணை (EPIC No.) உள்ளிட்டு, விவரங்களைத் தேடிக் கண்டறியவும்.

உங்கள் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை (OTP) உள்ளிட்டுச் சரிபார்க்கவும்.

இப்போது, உங்கள் தகவல்கள் பாதியளவு நிரப்பப்பட்ட Enumeration Form திரையில் காண்பிக்கப்படும். இந்தத் தகவல்களை முழுமையாகச் சரிபார்க்கவும்.

SIR - ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வழிமுறை
SIR - ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வழிமுறை

குடும்ப உறுப்பினர்கள் விவரங்களை இணைத்தல் (Family Linkage):

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருப்பது, குடும்ப உறுப்பினர்களின் பெயரை ஆதாரமாகக் கொண்டு இணைக்கப்படும் ஒரு முக்கிய பகுதி இதுவாகும்.

> கடைசியாக எஸ்.ஐ.ஆர் நடந்தது 197 தொகுதிகளுக்கு 2002ல், மற்றவற்றிற்கு 2005ல். அதனால் 1987-க்குப் பிறந்த எவரும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்க மாட்டார்கள். சொல்லப்போனால் 1984-க்குப் பிறகு பிறந்த பலரது பெயர் பட்டியலில் இடம்பெற்றிருக்காது.

இப்போது கீழே வரும் மூன்று விருப்பங்களில் ஒன்றைத் தேர்வு செய்யவும். முன்னர் செய்த மாற்றத்தில் இடம்பெற்றிருந்த உங்களது பெயர் நினைவிருந்தால் அதற்கான விருப்பத்தை, அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி பெயர் நினைவிருந்தால், அதற்கான விருப்பத்தை, அல்லது யாருடைய பெயரும் நினைவில்லை என்றால், அந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

> ஒருவேளை யார் பெயரும் இல்லை எனத் தேர்வு செய்தால், அப்பா அம்மா பெயர் மட்டும் உள்ளிட்டுப் படிவத்தை சமர்ப்பிக்கலாம். ஆதார் எண் கட்டாயம் வேண்டும். ஆதார் எண்ணிலுள்ள பெயரும், வாக்காளர் அடையாள அட்டையில் இருக்கும் பெயரும் ஒன்றாக இருக்க வேண்டும்.

> அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி பெயர் இருக்கிறதென்றால் அதை உள்ளிட வேண்டும். அதற்கு அவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணோ, பெயரோ, தொகுதியோ, ஏதாவது ஒன்று வேண்டும். அதை வைத்துக் கருத்துப் பெட்டியில் உள்ள இணைப்பில் தேடி எடுக்க வேண்டும். ஏனெனில் Part number, Serial number கண்டிப்பாக வேண்டும். அப்போதுதான் படிவத்தை நிரப்ப இயலும்.

SIR - ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வழிமுறை
SIR - ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வழிமுறை

> இதன் பின்னர், 2002, 2005 பட்டியலில் இருக்கும் நம் உறவினரின் தகவலைக் காட்டும். அதை உறுதி செய்ய வேண்டும். பின், அது கேட்கும் தகவல்களை உள்ளிட வேண்டும். எல்லாம் முடித்து Submit கொடுங்கள்.

>சமர்ப்பித்த பின், உங்கள் விண்ணப்பத்தின் நிலையை அறிந்துகொள்ள ஒரு ஒப்புதல் எண் (Acknowledgement Number) வழங்கப்படும். இதை அவசியம் குறித்து வைத்துக்கொள்ளவும்.

ஆதார் இணைப்பு குறித்த குழப்பங்கள்:

> SIR படிவம் நிரப்புவதில், வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பெயரும் ஆதார் அட்டையில் உள்ள பெயரும் பொருந்தாமல் இருக்கும்போது சிக்கல்கள் எழலாம்.

> உங்கள் வாக்காளர் அட்டையில் பெயர், முதலெழுத்துடன் இருக்கும்; ஆனால் ஆதார் அட்டையில் முதலெழுத்து இல்லாமல் பெயர் மட்டும் இருந்தால், கணினி அதைச் சரியாகப் பொருந்தச் செய்யச் சற்று சிரமப்படலாம்.

> நீங்கள் படிவத்தில் உள்ள பெயர்களை, வாக்காளர் அட்டையில் உள்ளதைப் போலவே உள்ளிட்டு, அதன்பின் ஆதார் எண்ணை உள்ளிட்டுச் சரிபார்ப்பது சிறந்தது.

SIR - ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வழிமுறை
SIR - ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வழிமுறை

கவனிக்க வேண்டியவை:

> BLO உதவி: படிவத்தைப் பூர்த்தி செய்வதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், இணையதளத்தில் உள்ள "Book a call with BLO" என்ற வாய்ப்பைப் பயன்படுத்தியோ அல்லது 1950 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டோ உங்கள் வாக்குச் சாவடி நிலை அலுவலரிடம் (BLO) உதவி கேட்கலாம்.

> சரிபார்ப்பு: நீங்கள் கொடுத்த தகவலைச் சரிபார்க்க, BLO உங்களை அழைக்கலாம் அல்லது உங்கள் இல்லத்திற்கே வரலாம். அப்போது உங்கள் விவரங்களைப் பார்க்க வேண்டும்.

> ஆவணங்கள்: படிவத்தைப் பூர்த்தி செய்ய EPIC எண், ஆதார் எண், மற்றும் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் EPIC எண் ஆகியவை கட்டாயம் தேவை.

மாலி: ``தீவிரவாதிகளால் கடத்தப்பட்டிருக்கும் 5 தமிழர்கள்" - மத்திய, மாநில அரசுக்கு அன்புமணி கோரிக்கை!

மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் தற்போது ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. அதே நேரம் பல்வேறு தீவிரவாத அமைப்புகளின் ஆதரவுடன் பல்வேறு ஆயுதக் குழுக்கள் தீவிரமாக இயங்கி வருகின்றன. இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

"திமுக-வை அழிக்க SIR எனும் ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள்!" - முதல்வர் குற்றச்சாட்டு

ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ பழனியாண்டியின் இளைய மகன் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர்,"பழனியாண்டிக்கும், கழகத்திற்குமான உறவு என்பது இன்று நேற்று ஏற்பட்டது அ... மேலும் பார்க்க

`தமிழ்நாடு ஆம்னி பஸ்களுக்கு சிறை' - கோடிக்கணக்கில் அபராதம் விதித்த கேரளா, கர்நாடகா; என்ன பிரச்னை?

தமிழ்நாட்டை சேர்ந்த ஆம்னி பேருந்துகள் கேரளா மற்றும் கர்நாடகாவிற்குள் செல்ல கடந்த சில நாள்களாக சிக்கல்களையும், அபராதத்தையும் சந்தித்து வருகின்றன. கடந்த 7-ம் தேதி (வெள்ளிக்கிழமை), தமிழ்நாட்டில் இருந்து ... மேலும் பார்க்க

Ironman 70.3: அண்ணாமலை கலந்துகொண்ட 'அயர்ன்மேன்' போட்டி; பிரதமர் மோடி புகழாரம்!

ஒவ்வொரு ஆண்டும் உலக ட்ரையத்லான் கார்ப்பரேஷன் (World Triathlon Corporation - WTC) நடத்தும் இந்த ஆண்டுக்கான 'அயர்ன் மேன் 70.3' நிகழ்ச்சி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கோவாவில் நடைபெற்றது. மனிதர்களின் உடல், ம... மேலும் பார்க்க

'அணு ஆயுத சோதனை அமெரிக்கா செய்தால் நாங்களும் செய்வோம்' - தூண்டிய ட்ரம்ப்; சீறும் ரஷ்யா

'ரஷ்யாவும், சீனாவும் ரகசியமாக அணு ஆயுத சோதனை செய்கின்றனர். அதனால், நானும் அணு ஆயுத சோதனைக்கு உத்தரவிட்டிருக்கிறேன்' என்று சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு குண்டை தூக்கிப்போட்டார். இதை ஆரம்பத்தில... மேலும் பார்க்க

SIR: ``வாக்குரிமை பறிக்கப்படும் அபாயம்... அச்சமாக இருக்கிறது" - முதல்வர் ஸ்டாலின் சொல்லும் காரணம்

பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளைத் தொடங்கியிருக்கிறது. பீகாரில் 64 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில், பல்வேறு விளக்கங்களையும் தேர்தல் ஆ... மேலும் பார்க்க