செய்திகள் :

Ironman 70.3: அண்ணாமலை கலந்துகொண்ட 'அயர்ன்மேன்' போட்டி; பிரதமர் மோடி புகழாரம்!

post image

ஒவ்வொரு ஆண்டும் உலக ட்ரையத்லான் கார்ப்பரேஷன் (World Triathlon Corporation - WTC) நடத்தும் இந்த ஆண்டுக்கான 'அயர்ன் மேன் 70.3' நிகழ்ச்சி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கோவாவில் நடைபெற்றது.

மனிதர்களின் உடல், மன உறுதியை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் இந்தப் போட்டியில் உலக நாடுகளிலிருந்து பலரும் கலந்துகொண்டனர். நீச்சல், சைக்கிள், ஓட்டம் என மொத்தம் 70.3 மைல்கள் (113 கி.மீ) கடக்க வேண்டும்.

இந்த நிகழ்வில் பெங்களூரு தெற்குத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா, தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்துகொண்டனர்.

Ironman 70.3: அண்ணாமலை
Ironman 70.3: அண்ணாமலை

இது தொடர்பாக பிரதமர் மோடி தன் எக்ஸ் பக்கத்தில், ``கோவாவில் இன்று நடைபெற்ற அயர்ன்மேன் 70.3 நிகழ்வுகளில் நமது இளைஞர்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

இதுபோன்ற நிகழ்வுகள் Fit India இயக்கத்திற்கு பெரும் பங்களிக்கின்றன. கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

நமது கட்சியின் இளம் சகாக்களான அண்ணாமலையும் தேஜஸ்வி சூர்யாவும் அயர்ன்மேன் டிரையத்லானை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களில் இடம்பெற்றிருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது." எனப் பாராட்டியிருக்கிறார்.

இது தொடர்பாக தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை தன் எக்ஸ் பக்கத்தில், ``இந்த வருட தொடக்கத்தில், கோவாவில் நடைபெறும் அயர்ன்மேன் 70.3 போட்டிக்குத் தயாராக வேண்டும்.

அப்போது, ​​எனது உடற்பயிற்சியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும், என்னைக் கவனித்துக்கொண்டு பயிற்சி செய்ய வேண்டும், ஒரு தடகள வீரரின் மனநிலையைப் பின்பற்ற வேண்டும் எனக் உறுதி ஏற்றேன்.

திறந்த கடலில் 1.9 கிமீ நீந்தி, கோவாவின் மலைப்பாங்கான நிலப்பரப்புகளில் 90 கிமீ சைக்கிள் ஓட்டி, இறுதிக் எல்லையான 21 கிமீ ஓடினேன். இந்த சவால் எனது சகிப்புத்தன்மையை மட்டுமல்ல, எனது மனதின் வலிமையையும் சோதித்தது.

Ironman 70.3: அண்ணாமலை
Ironman 70.3: அண்ணாமலை

முன்னேற விரும்புவோருக்குகான சவால் உண்மையானது. ஆனால் அதற்கான வெகுமதி உள்ளுக்குள் ஏற்படும் மாற்றத்தில்தான் கிடைக்கும். ஃபிட் இந்தியா இயக்கத்தின் மூலம் மில்லியன் கணக்கானவர்களை ஊக்கப்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தப் போட்டிக்கு தயாராகுவதற்கான வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுக்கு என் அன்பு சகோதரர் தேஜஸ்வி சூர்யாவுக்கும் நன்றி. இந்த முறையும் அயர்ன் மேன் சவாலை முடித்ததற்காக வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

SIR: ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி|How to

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல். தற்போது சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்.இந்தத் திருத்தப் பணிகள் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் முதல் ... மேலும் பார்க்க

'அணு ஆயுத சோதனை அமெரிக்கா செய்தால் நாங்களும் செய்வோம்' - தூண்டிய ட்ரம்ப்; சீறும் ரஷ்யா

'ரஷ்யாவும், சீனாவும் ரகசியமாக அணு ஆயுத சோதனை செய்கின்றனர். அதனால், நானும் அணு ஆயுத சோதனைக்கு உத்தரவிட்டிருக்கிறேன்' என்று சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு குண்டை தூக்கிப்போட்டார். இதை ஆரம்பத்தில... மேலும் பார்க்க

SIR: ``வாக்குரிமை பறிக்கப்படும் அபாயம்... அச்சமாக இருக்கிறது" - முதல்வர் ஸ்டாலின் சொல்லும் காரணம்

பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளைத் தொடங்கியிருக்கிறது. பீகாரில் 64 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில், பல்வேறு விளக்கங்களையும் தேர்தல் ஆ... மேலும் பார்க்க

மத்திய அரசின் விருது: ``நள்ளிரவிலும் பாதுகாப்பான பயணம்" - அமைச்சர் சிவசங்கரை பாராட்டிய முதல்வர்!

இந்தியாவிலேயே சிறந்தப் போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம் என மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு விருதளிக்கப்பட்டிருக்கிறது. சென்னையின் பொதுப் போக்குவரத்து அமைப்பின் செயல்திறன், அணுகுமுறை, உள்ளடக்கம் ம... மேலும் பார்க்க

``மனோ தங்கராஜ் கலவரம் செய்ய முயற்சி செய்கிறார்'' - பொன். ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

மனோ தங்கராஜ்1966 நவம்பர் 7-ம் தேதி பசுவதைத் தடைச் சட்டத்தை எதிர்த்த காரணத்தால் ஆர்.எஸ்.எஸ்., பாரதிய ஜனசங்கம் போன்ற அமைப்புகள், பெருந்தலைவர் காமராஜரை கொலை செய்ய முயன்றதாகவும், இதில் 8 பேர் படுகொலை செய்... மேலும் பார்க்க