’டாக்ஸி ஓட்டுநர்களின் அட்டூழியம்'- கோவா சென்ற ஜெர்மன் சுற்றுலா பயணியின் வீடியோ வ...
BB Tamil 9: இருவருக்கும் ஏற்பட்ட மோதல் பார்வதியை கீழே தள்ளிவிட்ட சபரி
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 5 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போது 7 பேர் வெளியேறி இருக்கின்றனர். இந்த வாரம் துஷாரும், பிரவீன் ராஜூம் வெளியேறி இருக்கின்றனர். அரோரா, ரம்யா, கெமி போன்றவர்களை வெளியேற்றாமல் நன்றாக விளையாடும் பிரவீனை வெளியேற்றிருப்பது விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் முதல் புரொமோவில் பிக் பாஸ் டாஸ்க் ஒன்றைக் கொடுக்கிறார். அதில் பார்வதிக்கும், சபரிக்கும் கடுமையான மோதல் ஏற்படுகிறது. சபரி, பார்வதியை கீழே தள்ளிவிட ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் ஷாக் ஆகியிருக்கின்றனர்.
















