’டாக்ஸி ஓட்டுநர்களின் அட்டூழியம்'- கோவா சென்ற ஜெர்மன் சுற்றுலா பயணியின் வீடியோ வ...
'அணு ஆயுத சோதனை அமெரிக்கா செய்தால் நாங்களும் செய்வோம்' - தூண்டிய ட்ரம்ப்; சீறும் ரஷ்யா
'ரஷ்யாவும், சீனாவும் ரகசியமாக அணு ஆயுத சோதனை செய்கின்றனர். அதனால், நானும் அணு ஆயுத சோதனைக்கு உத்தரவிட்டிருக்கிறேன்' என்று சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு குண்டை தூக்கிப்போட்டார்.
இதை ஆரம்பத்திலேயே ரஷ்யாவும், சீனாவும் மறுத்துவிட்டது. இதை மீண்டும் தற்போது உறுதி செய்துள்ளது ரஷ்யா.
என்ன சொல்கிறது ரஷ்யா?
தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில், ரஷ்யாவின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், "அணு ஆயுத சோதனைகளுக்கு உள்ள தடையை ரஷ்யா பின்பற்றி வருகிறது என்பதை ரஷ்ய அதிபர் புதின் தொடர்ந்து கூறிவருகிறார். நாங்கள் அணு ஆயுத சோதனையைச் செய்யவில்லை.
ஆனால், உலகில் வேறு ஏதாவது நாடு அணு ஆயுத சோதனை செய்தால், ரஷ்யாவும் செய்யும். அப்போது தான் பேலன்ஸ் பண்ண முடியும். இது மிக மிக முக்கியம். இதை செய்வதன் மூலம் உலக அளவிலான பாதுகாப்பை உறுதி செய்யலாம்" என்று பேசியுள்ளார்.
உலக அளவில் ட்ரம்ப் வரி தொடங்கி அணு ஆயுதம் வரை பல பல புது பிரச்னைகளை கிளப்பி வருகிறார். இவை எதில் போய் முடியுமோ?















